ஊழியர்களுக்கு Carl Pei அனுப்பிய இமெயில்! வேற மாறி ரெடியான அடுத்த Nothing Phone.. என்ன மாடல்? எப்போது அறிமுகம்?
2025 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போன்களின் பட்டியலின் டாப் ஸ்லாட்டுகளில் இல்லை என்றாலும் கூட நத்திங் நிறுவனத்தின் 2025 மாடலானது கடைசி சில இடங்களிலாவது நிச்சயம் இருக்கும். ஆனால் தற்போது வெளியாகியுள்ள சில தகவல்கள் - அது டாப் ஸ்லாட்டை எட்டுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கும் என்பதை நிரூபிக்கும்படி உள்ளன.
அப்படி என்ன தகவல்கள் வெளியாகி உள்ளன? 2025 ஆம் ஆண்டில் நத்திங் நிறுவனம் அப்படி என்ன ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது? இது சரியாக எப்போது அறிமுகமாகும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யலாம்? இந்தியாவில் என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? இதோ விவரங்கள்:

நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான இவான் ப்ளாஸ் (Evan Blass) நத்திங் நிறுவனத்தின் இமெயில் ஒன்றை லீக் செய்துள்ளார். அந்த இமெயில் - இணை நிறுவனர் கார்ல் பெய் மூலம் நத்திங் ஊழியர்களுக்கு அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. லீக் ஆன இமெயில் வழியாக நத்திங் நிறுவனம் தனது அடுத்த ஸ்மார்ட்போனை மார்ச் 2025 க்குள் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
அது நத்திங் போன் 3 (Nothing Phone 3) மாடலாகும். லீக் ஆன இமெயிலில் நத்திங் போன் 3 மாடல் ஆனது நத்திங் பிராண்டிற்கான ஒரு மைல்கல்லாக இருக்கும் என்று கார்ல் பெய் விவரிக்கிறார், நத்திங் போன் 3 மாடலின் வழியாக யூஸர் இன்டர்பேஸில் சில திருப்புமுனைமிக்க புதுமைகள் அறிமுகப்படுத்தப்படும். இந்த ஸ்மார்ட்போன் ஏஐ-பவர்டு பிளாட்ஃபார்மை நோக்கிய நமது முதல் படியாக இருக்கும் என்று கார்ல் பெய் கூறியுள்ளார்.
நத்திங் போன் 3 மாடல் ஆனது கடந்த 2024 ஆம் ஆண்டிலேயே அறிமுகமாகும் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் இந்நிறுவனம் கடந்த ஆண்டு சிஎம்எப் போன் 1, நத்திங் போன் 2ஏ மற்றும் நத்திங் போன் 2ஏ பிளஸ் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியதன் மூலம் அதன் லீனியர் ஸ்மார்ட்போன் போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்தியது.
இப்படி செய்வதன் மூலம், நத்திங் நிறுவனம் ஆனது மிட்-ரேஞ்சர் மற்றும் பட்ஜெட் ஸ்மார்ட்போன் வரிசையில் ஒரு பிளாக்ஷிப் மாடலை கொண்டுவருவதற்கான வழித்தடத்தை புத்திசாலித்தனமான 'செட்' செய்துள்ளது. நத்திங் போன் 3 மாடலின் இந்திய விலை நிர்ணயம் ரூ.50,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது
எதிர்பார்க்கப்படும் அம்சங்களை பொறுத்தவரை, டிஸ்பிளேவை பொறுத்தவரை நத்திங் போன் 3 ஆனது 6.5-இன்ச் எல்டிபிஓ அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம். டிசைனை பொறுத்தவரை கஸ்டமைசேஷன் செயல்பாடுகளுக்கான ஆக்ஷன் பட்டன் (Action Button) மற்றும் பிராண்டின் சிக்னேச்சர் அனா கிளிஃப் இன்டர்ஃபேஸ் (Glyph Interface) இடம்பெறலாம்.
சிப்செட்டை பொறுத்தவரை, நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஆனது 2025 ஆண்டில் வெளியாகும் மற்ற பிளாக்ஷிப் போன்களை போலல்லாமல், பழைய சிப்செட்டில் இயங்கும் என்பது போல் தெரிகிறது. இது ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 அல்லது மீடியாடெக் டைமன்சிட்டி 9200 பிளஸ் சிப்செட்டை பேக் செய்யலாம்
இந்த சிப்செட் 12 ஜிபி வரையிலான ரேம் மற்றும் 512 ஜிபி வரையிலான ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்படலாம். இது ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான நத்திங் ஓஎஸ் 3.0 மூலம் இயங்கலாம். கடைசியாக பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங்கை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போனில் 45W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5000mAh பேட்டரி இடம்பெறலாம்
சில அறிக்கைகள் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 சிப்செட் மூலம் இயங்கும் நத்திங் போன் 3ஏ மற்றும் நத்திங் போன் 3ஏ பிளஸ் ஆகிய மாடல்கள் 2025 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகமாகி நத்திங் போன் 3 சீரிஸை விரிவுபடுத்தும் என்று தெரிவிக்கின்றன. சில லீக்ஸ் தகவல்கள் நத்திங் போன் 3 ப்ரோ என்கிற மாடல் அறிமுகமாகும் என்கின்றன. ஆனால் அது நடப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன.


Click it and Unblock the Notifications








