அறிமுகம் : நோக்கியா 6X; விலையை சொன்னால் நிச்சயமாக நம்ப மாட்டீர்கள்.!
நோக்கியா மொபைல்களை தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள எச்எம்டி குளோபல் நிறுவனமானது, அதன் நோக்கியா எக்ஸ்6 ஸ்மார்ட்போனை இன்று அறிமுகம் செய்துள்ளது.
நோக்கியா மொபைல்களை தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள எச்எம்டி குளோபல் நிறுவனமானது, அதன் நோக்கியா எக்ஸ்6 ஸ்மார்ட்போனை இன்று அறிமுகம் செய்துள்ளது. பார்ப்பதற்கு அட்டகாசமானதொரு ஹை-எண்ட் ஸ்மார்ட்போன் போன்றே இருக்கும் நோக்கியா எக்ஸ்6 ஆனது மிட்-ரேன்ஜ் விலை பிரிவின் கீழ் வெளியாகுமென்று கூறினால் நீங்கள் நம்புவீர்களா.?

நம்பித்தான் ஆக வேண்டும். பார்ப்பதற்கு சமீபத்தில் வெளியான, ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எக்ஸ் போன்றே காட்சி அளிக்கும் இந்த நோக்கியா 6எக்ஸ் ஆனது, ஐபோன் எக்ஸ்-ஐ போன்றே மேல்பக்கம் நட்ச வடிவமைப்பு மற்றும் பெஸல்லெஸ் டிஸ்பிளே ஆகியவைகளை கொண்டுள்ளது.

விலை நிர்ணயம்.?
அதிகாரபூர்வமான வெளியீட்டு விலையின் படி, நோக்கியா எக்ஸ்6 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் + 32 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு மாடல் ஆனது ரூ.13,800/-க்கும், 4 ஜிபி ரேம் + 32 ஜிபி சேமிப்பு மாடல் ஆனது ரூ.16,000/-க்கும் மற்றும் இறுதி மாறுபாடு ஆன 6 ஜிபி ரேம் + 64 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு மாடல் ஆனது ரூ.18,100/-க்கும் அறிமுங்கமாகி உள்ளது.

இந்திய வெளியீடு.?
சீனாவில் ரூ.20,000/-க்குள் வெளியாகியுள்ள இதே ஸ்மார்ட்போன், அதன் இந்திய வெளியீட்டை சந்திக்கும் போது, ரூ.20,000/-க்கு மேல் என்கிற விலை நிர்ணயத்தை கொண்டிருக்கும். ஆனால் அந்த புள்ளியானது நோக்கியா 6.1 மற்றும் நோக்கியா 7 பிளஸ் ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களின் விலைப்புள்ளிக்கு இடையே வைக்கப்படும் என்பதையும் மறக்க வேண்டாம். இருப்பினும் இதன் இந்திய விற்பனை எப்போது என்பது பற்றிய எந்த விவரமும் இல்லை.

சேமிப்பு மாடல்.?
அம்சங்களை பொறுத்தவரை, நோக்கியா X6 ஆனது 5.8 அங்குல FHD+ (1080 x 2280 பிக்சல்) டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 19: 9 என்கிற அளவிலான காட்சி விகிதம் மற்றும் 2.5 டி கர்வ்டு கிளாஸ் அமைப்பையும் கொண்டுள்ளது. இது சக்திவாய்ந்த க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 636 SoC சிப்செட் உடனான ஆக்டா-கோர் செயலியுடன் இணைக்கப்பட்டுள்ளது. மைக்ரோ எஸ்டி அட்டை விரிவாக்கத்துடன் கூடிய, 6 ஜிபி / 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி / 64 ஜிபி சேமிப்பு மாடல்களில் வெளியாகியுள்ளது.

இரட்டை கேமரா.?
நோக்கியா எக்ஸ்6 ஆனது எச்டிஆர் மற்றும் பொக்கே மோட் ஆகிய திறன்களை உள்ளடக்கிய 16 எம்பி முதன்மை மற்றும் 5 எம்பி மோனோகிராம் சென்சார் என்கிற இரட்டை கேமரா கட்டமைப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தை பொறுத்தவரை, செல்பீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான எப் / 2.0 துளை உடனான ஒரு 16 எம்பி செல்பீ கேமராவை கொண்டுள்ளது. இது பேஸ் அன்லாக் அம்சத்தை ஆதரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பொத்தீ அம்சம்.?
மேலும் இதன் கேமரா சிறந்த முடிவுகளை வழங்குவதற்காக மேம்படுத்தப்பட்ட ஏஐ திறன்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. எல்லாவற்றிக்கும் மேலாக மிகவும் சிறப்பான கேமரா அம்சமான பொத்தீ ஆனது, நோக்கியா எக்ஸ்6-ல் இடம்பெற்றுள்ளது. இது ஒரே நேரத்தில் முன் மற்றும் பின்புற கேமராக்களை பயன்படுத்தி புகைப்படங்களை எடுக்க உதவும் ஒரு அம்சமாகும். இணைப்பு ஆதரவுகளை பொறுத்தவரை, நோக்கியா எக்ஸ்6 ஆனது, இரட்டை சிம் ஆதரவு, 4ஜி வோல்ட், வைஃபை, ப்ளுடூத் வி5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ ஓஎஸ்.?
க்விக் சார்ஜ் 3.0 பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்திற்கான ஆதரவு கொண்ட நீக்கமுடியாத லி-அயன் 3,060mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் நோக்கியா எக்ஸ் 6 ஆனது ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ ஓஎஸ்-ன் கீழ் இயங்குகிறது. இதன் இந்திய வெளியீடு எப்போது.? அம்சங்களில் மாற்றங்கள் இருக்குமா.? என்னென்ன சேமிப்பு மாடல்களில் வெளியாகும்.? விலை நிர்ணயம் என்னவாக இருக்கும்.? போன்ற பல அப்டேட்ஸ்களுக்கு, தமிழ் கிஸ்பாட் தளத்தின் மொபைல் பிரிவின் கீழ் இணைந்திருக்கவும்.


Click it and Unblock the Notifications








