2 மாதிரிகளில் அறிமுகமானது நோக்கியா 7 : பட்ஜெட்வாசிகள் ஹேப்பி அண்ணாச்சி.!

சியோமி, ஹூவாய் மற்றும் ஒப்போ ஸ்மார்ட்போன்களுக்கு சந்தையில் கடும் போட்டியை விளைவிக்கும் என்பதால் சந்தேகமே வேண்டாம்.

|

அறிமுகமாகியுள்ள நோக்கியா 7 ஆனது, நோக்கியா 8 ஸ்மார்ட்போனின் மற்றொரு பட்ஜெட் மாறுபாடு போன்று உள்ளது. அதாவது நோக்கியா 8, சற்று விலை அதிகமாக உள்ளதென்று நினைப்பவர்கள் நோக்கியா 7 ஸ்மார்ட்போனை தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.

முன்னர் வெளியான நோக்கியா 8 ஸ்மார்ட்போனில் உள்ள "கிட்டத்தட்ட" அனைத்து அம்சங்களையும் நோக்கியா 7 சாதனமும் கொண்டுள்ளது. இன்று (வியாழன்) சீனாவில் அறிமுகமாகியுள்ள நோக்கியா 7 நிச்சயமாக சியோமி, ஹூவாய் மற்றும் ஒப்போ ஸ்மார்ட்போன்களுக்கு சந்தையில் கடும் போட்டியை விளைவிக்கும் என்பதால் சந்தேகமே வேண்டாம்.

கண்ணாடி பின்புற கேஸ் அமைப்பு

கண்ணாடி பின்புற கேஸ் அமைப்பு

எச்எம்டி க்ளோபல் நிறுவனத்திடமிருந்து ஒரு கண்ணாடி பின்புற கேஸ் அமைப்புடன் வெளிவரும் முதல் தொலைபேசி நோக்கியா 7 ஆகும். நோக்கியா 6 ஆர்டி பதிப்பைப் போன்று பளபளப்பான அலுமினிய வடிவமைப்பை நோக்கியா 7 பெற்றுள்ளது.

அலுமினிய 7000 ப்ரேம்கள் செயல்முறை

அலுமினிய 7000 ப்ரேம்கள் செயல்முறை

பார்ப்பதற்கே உற்சாமகளிக்கும் இந்த சாதனம் அதன் கண்ணாடி பின்புறத்தில் ஒரு 3டி கர்வுடு வடிவமைப்பையும் கொண்டுள்ளது மற்றும் அது அலுமினிய 7000 ப்ரேம்கள் செயல்முறையைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் கூறுகிறது.

4ஜிபி / 6ஜிபி என்ற இரண்டு வகை ரேம்

4ஜிபி / 6ஜிபி என்ற இரண்டு வகை ரேம்

நோக்கியா 7 முக்கிய வன்பொருள் அம்சங்களுடன் வருகிறது. இது க்வால்காம் ஸ்னாப்டிராகன் 630 செயலி மூலம் இயக்கப்படுகிறது மற்றும் 4ஜிபி / 6ஜிபி என்ற இரண்டு வகை ரேம் மாதிரிகளில் வெளியாகியுள்ளது.

டிஸ்பிளே

டிஸ்பிளே

இரண்டு ரேம் மாதிரிகளும் 64 ஜிபி என்ற உள்சேமிப்பு கொண்டுள்ளது. நோக்கியா 7 அந்த 5.2 இன்ச் என்ற அளவை கொண்ட 1080பி தீர்மான டிஸ்பிளே கொண்டுள்ளது உடன் ஒரு கொரில்லா கிளாஸ் 3 லேயரும் கொண்டுள்ளது.

ஆண்ட்ராய்டு ஓரியோ

ஆண்ட்ராய்டு ஓரியோ

இந்த தொலைபேசி அதன் ஆயுள்தன்மையை பிரதிபலிக்கும் வண்ணம் ஐபி54 கொண்டு மதிப்பிடப்படுகிறது. அதாவது இக்கருவி நீர் எதிர்ப்பு ஆதரவு கொண்டுள்ளது. தற்போதைக்கு ஆண்ட்ராய்டு 7.1 நௌவ்கட் கொண்டு இயங்கும் இக்கருவி, வரவிருக்கும் மாதங்களில் ஆண்ட்ராய்டு ஓரியோ மேம்படுத்தல் பெறும்.

பொத்தீ

பொத்தீ

நோக்கியா 7 ஆனது பொத்தீ அம்சத்தை ஆதரிக்கிறது, அதாவது ஒரே நேரத்தில் முன் மற்றும் பின்புற கேமராக்களை பயன்படுத்தக்கூடிய திறன் கொண்டுள்ளது. நோக்கியா 8-ல் தான் இந்த அம்சத்தை நாம் முதலில் பார்த்தோம். இந்த அம்சத்தை செய்ஸ் தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கம் செய்துள்ளதாக நிறுவனம் கூறுகிறது. இருப்பினும், நோக்கியா 8 இரண்டு பின்புற கேமராக்கள் கொண்டுள்ளது ஆனால் நோக்கியா 7 ஒரே ஒரு ரியர் கேமராவுடன் தான் வருகிறதென்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

16 மெகாபிக்சல் சென்சார்

16 மெகாபிக்சல் சென்சார்

இதன் ரியர் கேமரா 1.12யூஎம் பிக்சல் அளவு கொண்ட 16 மெகாபிக்சல் சென்சார் பயன்படுத்துகிறது. இது எப்1.8 லென்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தை பொறுத்தமட்டில், நோக்கியா 7 ஒரு எப்2.0 லென்ஸ் பயன்படுத்தும் 5 மெகாபிக்சல் கேமரா கொண்டுள்ளது.

அற்புதமான தொலைபேசி

அற்புதமான தொலைபேசி

மொத்தத்தில், நோக்கியா 7 ஒரு அற்புதமான தொலைபேசியாக தோன்றுகிறது. ஒரு வேகமான செயலி, ரேம் மற்றும் சேமிப்பு மற்றும் மைக்ரோ எஸ்டி வழியிலான மெமரி நீட்டிப்பு, ஓஸோ ஆடியோ பதிவு போன்ற அம்சங்களுக்கான ஆதரவு ஆகியவைகளுடன் ஒரு நல்ல வன்பொருள் அம்சமும் கொண்டுள்ளது. மேலும் மிகவும் மெல்லிய பெஸல்கள், உலோக சட்ட மற்றும் பளபளப்பான கண்ணாடி என ஒரு கவர்ச்சிகரமான பிரீமியம் வடிவமைப்பையும் கொண்டுள்ளது. ஆக நிச்சயமாக இந்தியாவில் இந்த கருவி ஒரு அமோகமான வரவேற்பை பெறும்.

இந்திய விற்பனை

இந்திய விற்பனை

சீனாவில் 2499 யுவான் என்ற தொடக்க விலைநிர்ணயப்புள்ளியை பெற்றுள்ள்ள நோக்கியா 7 வருகிற அக்டோபர் 24 முதல் விற்பனைக்கு வருகிறது. நோக்கியா 7 எப்போது அதன் இந்திய விற்பனையை தொடங்கும் என்பதில் தெளிவான வார்த்தைகள் இல்லை என்கிறபோதிலும் விரைவில் நோக்கியா 7-ஐ இந்திய சந்தையில் எதிர்பார்க்க்கலாம்.

சுமார் ரூ.22,000/- முதல் ரூ.25,000/- என்ற புள்ளி

சுமார் ரூ.22,000/- முதல் ரூ.25,000/- என்ற புள்ளி

மறுகையில் நோக்கியா 6 ஸ்மார்ட்போனை போலவே சற்று தாமதமாகவும் இந்தியாவிற்கு வரலாம். எப்போது வரும் என்பது ஒருபக்கமிருக்க, எப்போது வந்தாலும் அதன் விலை நிர்ணயம் சுமார் ரூ.22,000/- முதல் ரூ.25,000/- என்ற புள்ளியில் இருக்கும் மற்றும் நோக்கியா 8 ஆனது ரூ.36,999/- என்ற விலை நிர்ணயத்தை பெறலாம்.

Best Mobiles in India

English summary
Nokia 7 with Bothie camera and Snapdragon 630 launched, in India price could be Rs 25,000. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X