Home
Mobile

நோக்கியா பி1 - இதெல்லாம் அப்படியே நடந்தால்.. ஒரு ஆர்டர் உறுதி.!

ஒருவேளை வெளியான அம்சங்கள் உண்மையாக இருப்பின் நம்மில் பலர் நிச்சயமாக நோக்கியா பி1 கருவியை ஆர்டர் செய்வது மிக உறுதி.!

By Muthuraj

ஒருகாலத்தில் நம்மையெல்லாம் அதிக அளவிலாக எதிர்பார்க்க வைத்த "அர்ஜுன் அம்மா யாரு.?" என்ற விளம்பர கேள்வியை விட 100 மடங்கு அதிக எதிர்பார்ப்பை கிளப்பி கொண்டிருக்கிறது - நோக்கியா ஆண்ட்ராய்டு அக்கருவி எது.? - என்ற கேள்வி. இந்த கேள்விக்கு இந்த மாதம் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் 2017 நிகழ்வில் பதில் கிடைக்கும் அதாவது அந்நிகழ்வில் இரண்டு புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்கள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நோக்கியா பி1 -  இதெல்லாம் அப்படியே நடந்தால்.. ஒரு ஆர்டர் உறுதி.!

அந்த இரண்டு கருவிகளில் ஒரு கருவி பட்ஜெட் ஸ்மார்ட்போனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதாவது நோக்கியா பி1 கருவி,மற்றொன்று ஸ்னாப்டிராகன் 835 மூலம் இயங்கும் நோக்கியாவின் பிளாக்ஷிப் கருவியாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட் கருவியாக இருக்கும் என்று நம்பப்படும் நோக்கியா பி1 சாதனம் பற்றிய சமீபத்திய லீக் வீடியோ ஒன்றின் கீழ் அக்கருவி சார்ந்த திகைப்பாக அம்சங்கள் வெளியாகியுள்ளது. ஒருவேளை வெளியான அம்சங்கள் உண்மையாக இருப்பின் நம்மில் பலர் நிச்சயமாக நோக்கியா பி1 கருவியை ஆர்டர் செய்வது மிக உறுதி.!

நோக்கியா பி1

நோக்கியா பி1

வெளியான லீக் தகவலில் இருந்து நோக்கியா பி1 ஒரு உலோக மற்றும் கண்ணாடி வடிவமைப்பு கொண்ட மற்றும் கேமரா அர்ப்பணிப்பு கொண்ட கருவியாக வெளியாகலாம். சரி மேலும் என்னென்ன தகவல்கள் கிடைத்துள்ளது என்பதை காண்போம்

வடிவமைப்பு

வடிவமைப்பு

இக்கருவி ஒரு கூர்மையான வடிவமைப்பை பெற்றிருக்கும் அதாவது உலோக மற்றும் கண்ணாடி கட்டுமான அடிப்படையில் இருக்கும் என்கிறது வதந்திகள். கடந்த காலத்தில் மி மிக்ஸ் கருவி சார்ந்த லீக்ஸ் தகவல் போல இக்கருவி ஒரு பீங்கான் பின்பக்கம் கொண்டிருக்கலாம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கைரேகை சென்சார்

கைரேகை சென்சார்

உடன் லீக்ஸ் வீடியோ மூலம் இக்கருவி கைரேகை சென்சார் மற்றும் ஹோம் பட்டன் ஆகிய இரண்டையும் ஒரே பொத்தானில் நிகழ்த்தும் என்பது போலும் காட்டுகிறது.

செயலி, டிஸ்ப்ளே

செயலி, டிஸ்ப்ளே

நோக்கியா பி1 கருவியானது கார்னிங் கொரில்லா கண்ணாடி 5 பாதுகாப்பு கொண்ட ஒரு 5.3 அங்குல இக்ஸோ (IGZO) டிஸ்ப்ளே கொண்டிருக்கும் உடன் ஸ்னாப்டிராகன் 835 செயலி மூலம் இயங்கும் என்கிறது வெளியான லீக் வீடியோ. மற்றும் ஸ்மார்ட்போன் ஐபி55 அல்லது ஐபி57 சான்றிதழ் கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சேமிப்பு, கேமிரா, ஆண்ட்ராய்டு, பேட்டரி

சேமிப்பு, கேமிரா, ஆண்ட்ராய்டு, பேட்டரி

128ஜிபி அல்லது 256ஜிபி என்ற சேமிப்பு விருப்பம் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நோக்கியா பி1 ஒரு கேமரா முன்னுரிமை கொண்ட சாதனமாக இருக்க அதிக வாய்ப்புண்டு. கசிவின் அடிப்படையில் இந்த கருவி ஒரு பிரத்யேக ஷட்டர் விசை கொண்ட கார்ல் ஜெய்ஸ் லென்ஸ் கொண்ட ஒரு 22.6எம்பி பின்புற கேமிரா கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது மற்றும் 3500எம்ஏஎச் பேட்டரி திறன் கொண்டு ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் மூலம் இயங்கலாம்.

விலை

விலை

விலை சார்ந்த விவரங்களை பொறுத்தம்மட்டில் நோக்கியா பி1 கருவியின் 128ஜிபி மாதிரி மற்றும் 256ஜிபி மாதிரி முறையே சுமார் 800 அமெரிக்க டாலர்கள் மற்றும் 950 அமெரிக்க டாலர்கள் என்ற விலைக்கு விற்கப்படலாம்.

கடும் போட்டி

கடும் போட்டி

அதாவது நோக்கியா பி1 கருவியானது வரவிருக்கும் சாம்சங் கேலக்ஸி எஸ்8, கூகுள் பிக்சல் சாதனங்கள் மற்றும் ஆப்பிள் ஐபோன் ஆகியவைகளுக்கு கடும் போட்டியாக எதிர் நிற்கும். மற்றும் கேலக்ஸி எஸ்8 அறிமுகமான உடனேயே நோக்கியா பி1 சந்தைக்குள் நுழையும் வாய்ப்பு அதிகம் உள்ளது. ஏனைய விவரங்களுக்கு நாம் எம்டபுள்யூசி 2017 நிகழ்வு வரை காத்திருப்பதை தவிர வேறு வழியே இல்லை.

மேலும் படிக்க

மேலும் படிக்க

தரச்சான்றிதழ்களை கடந்த இரண்டு புதிய நோக்கியா ஆண்ட்ராய்டு.!

Best Mobiles in India

English summary
Nokia P1 rumour roundup: Metal and Glass design, Snapdragon 835 and more. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X