ரூ.2000 போதும்.. NOKIA-வின் புது 4ஜி மொபைல் போன் இந்தியாவில் அறிமுகம்!
நோக்கியா (NOKIA) பிராண்டட் ஃபீச்சர் போன்களை தயாரிக்கும் உரிமத்தை கொண்டுள்ள எச்எம்டி க்ளோபல் (HMD Global) நிறுவனமானது, இந்திய சந்தையில், ஒரே நேரத்தில் மொத்தம் 3 புதிய மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. அவைகளில் ஒன்று - என்ட்ரி லெவல் 5ஜி ஸ்மார்ட்போன் ஆகும். மீதமுள்ள இரண்டும் - என்ட்ரி லெவல் பீச்சர் போன்கள் ஆகும்
5ஜி ஸ்மார்ட்போனை பொறுத்தவரை எச்எம்டி வைப் 5ஜி (HMD Vibe ) மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.8999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எச்எம்டி வைப் 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்களை உள்ளடக்கிய கட்டுரையை படிக்க இங்கே கிளிக் செய்யவும். இதனுடன் சேர்த்து அறிமுகம் செய்யப்பட்டுள்ள எச்எம்டி 101 4ஜி (HMD 101 4G) மற்றும் எச்எம்டி 102 4ஜி (HMD 102 4G) மாடல்களின் விலை மற்றும் அம்சங்களை அறிய தொடர்ந்து படிக்கவும்.

எச்எம்டி 101 4ஜி மற்றும் எச்எம்டி 102 4ஜி மொபைல் போன்களின் முக்கிய அம்சங்கள்:
- 2 இன்ச் (240 x 320 பிக்சல்ஸ் ரெசல்யூஷன்) QQVGA டிஸ்பிளே
- யுனிசாக் 8910 FF-S ப்ராசஸர்
- 16எம்பி இன்டர்னல் ஸ்டோரேஜ்
- மைக்ரோ எஸ்டி கார்டுடன் 32ஜிபி வரை விரிவாக்கக்கூடிய மெமரி
- எஸ்30பிளஸ் (RTOS)
- ஃபிளாஷ் கொண்ட QVGA கேமரா (எச்எம்டி 102 4ஜி மாடலில் மட்டும்)
- எப்எம் ரேடியோ (வயர்டு/வயர்லெஸ்)
- எம்பி3 பிளேயர்
- கிளவுட் ஆப்ஸ்
- லோக்கல் மொழிகளுக்கான ஆதரவு
- டூயல் பேண்ட் 900/1800MHz (டூயல் சிம்)
- ப்ளூடூத் 5.0
- யூஎஸ்பி டைப்-சி போர்ட்
- 3.5மிமீ ஆடியோ ஹெட்ஃபோன் ஜாக்
- டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ப்ரூஃப் (ஐபி52 ரேட்டிங்)
- 1000mAh நீக்கக்கூடிய பேட்டரி
- அளவீட்டில் 118.2×50.2×14.3மிமீ
- எடையில் 83.5கிராம்
எச்எம்டி 101 4ஜி மற்றும் எச்எம்டி 102 4ஜி மொபைல் போன்களின் விலை விவரங்கள்: எச்எம்டி 101 4ஜி மொபைல் போன் ஆனது டார்க் ப்ளூ, ரெட் மற்றும் ப்ளூ ஆகிய 3 கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது,. இதன் விலை ரூ.1,899 ஆகும்.
மறுகையில் உள்ள எச்எம்டி102 4ஜி மாடல் ஆனது டார்க் ப்ளூ, ரெட் மற்றும் பர்பிள் ஆகிய 3 கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை ரூ. 2,199 ஆகும். இந்த 2 மாடல்களுமே இன்று (செப்டம்பர் 11 ஆம் தேதி) முதல் இந்தியாவில் உள்ள முன்னணி சில்லறை விற்பனைக் கடைகள், முக்கிய இகாமர்ஸ் வலைத்தளங்கள் மற்றும் எச்எம்டி.காம் (HMD.com) வழியாக விற்பனையை தொடங்கின.
எச்எம்டி வைப் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள்: எச்எம்டி வைப் 5ஜி ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் பர்பிள் ஆகிய 2 கலர்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.8,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ஒரு சிறப்பு பண்டிகை கால விலை என்று எச்எம்டி நிறுவனம் கூறுகிறது. இதுவும் இன்று (செப்டம்பர் 11) முதல் இந்தியாவில் உள்ள முன்னணி சில்லறை விற்பனையாளர்கள், முக்கிய இ-காமர்ஸ் தளங்கள் மற்றும் எச்எம்டி.காம் (HMD.com) வழியாக விற்பனையை தொடங்கியது.


Click it and Unblock the Notifications








