மொத்த இந்தியாவும் ஆர்டர் போடுமே.. ரூ.8000 பட்ஜெட்டில் புதிய NOKIA 5ஜி போன் அறிமுகம்!
நோக்கியா (NOKIA) பிராண்டட் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஃபீச்சர் மொபைல் போன்களை தயாரிக்கும் உரிமத்தை கொண்டுள்ள எச்எம்டி க்ளோபல் (HMD Global) நிறுவனமானது - ரூ.10000 க்குள் என்கிற பட்ஜெட்டில், இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் ரூ.9000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அதன் புதிய 5ஜி ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
என்ன மாடல்? அது எச்எம்டி வைப் 5ஜி (HMD Vibe 5G) ஸ்மார்ட்போன் ஆகும். இந்திய மொபைல் சந்தையில் ரூ.10,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் சைனீஸ் மாடல்களாக இருக்கும் நிலைப்பாட்டில், அவைகளுடன் போட்டியிடும் நோக்கத்தின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ள எச்எம்டி வைப் 5ஜி - உண்மையிலேயே வொர்த்-ஆ! வாருங்கள் பார்க்கலாம்.

எச்எம்டி வைப் 5ஜி வொர்த்-ஆ? 5ஜி கனெக்டிவிட்டியை தேடும் நுகர்வோருக்கு ஒரு மலிவு விலை விருப்பமாக நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் - வேகமான மற்றும் நெக்ஸ்ட் ஜெனரேஷன் மொபைல் நெட்வொர்க் அணுக விரும்பும் பட்ஜெட் வாசிகளுக்கு ஒரு நல்ல "நம்பிக்கையான" தேர்வாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
எச்எம்டி வைப் 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை எச்எம்டி வைப் 5ஜி ஸ்மார்ட்போனானது 720 × 1604 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 20:9 விஆஸ்பெக்ட் ரேஷியோ, 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.67-இன்ச் HD+ LCD டிஸ்பிளேவை கொண்டு உள்ளது
சிப்செட்டை பொறுத்தவரை எச்எம்டி வைப் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டா-கோர் 6என்எம் யுனிசாக் டி760 சிப்செட கொண்டு இயங்குகிறது. இது குவாட் கோர் கோர்டெக்ஸ் ஏ76 மற்றும் ஆக்டா கோர் கோர்டெக்ஸ் ஏ55 ஆகியவைகளை உள்ளடக்கிய மாலி-ஜி57 எம்சி4 ஜிபியு உடன் இணைக்கப்பட்டுள்ளது.
ரேம் மற்றும் ஸ்டோரேஜை பொறுத்தவரை, எச்எம்டி வைப் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 4 ஜிபி LPDDR4x ரேம், 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. கூடுதலாக மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 256 ஜிபி வரை மெமரியை விரிவாக்கக்கூடிய ஆதரவையும் கொண்டுள்ளது
கேமராக்களை பொறுத்தவரை எச்எம்டி வைப் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் 50எம்பி ரியர் கேமரா மற்றும் 2எம்பி டெப்த் சென்சார் உள்ளது. இதற்கு LED ஃபிளாஷ் ஆதரவும் உள்ளது. முன்பக்கத்தில் 8எம்பி செல்பீ கேமராவை பேக் செய்கிறது
பேட்டரியை பொறுத்தவரை, எச்எம்டி வைப் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 18W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது. இதற்கான சார்ஜர் ரீடெயில் பாக்ஸ் உடன் வரும். கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இது டூயல் சிம் ஆதரவலா கொண்டுள்ளது, ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 2 வருட காலாண்டு செக்யூரிரி அப்டேட்களை பெறும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது
பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சார் உடன் வரும் எச்எம்டி வைப் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 3.5 மிமீ ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (9 பேண்ட்ள்), டூயல் 4ஜி வோல்ட், வைஃபை 802.11 ஏசி (2.4GHz + 5GHz), ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ் + க்ளோநாஸ், யூஎஸ்பி டைப்-சி ஆகியவைகளையும் கொண்டுள்ளது. கடைசியாக அளவீட்டில் 165×75.8×8.65மிமீ மற்றும் எடையில் 190 கிராம் உள்ளது.
எச்எம்டி வைப் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள்: எச்எம்டி வைப் 5ஜி ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் பர்பிள் ஆகிய 2 கலர்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.8,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ஒரு சிறப்பு பண்டிகை கால விலை என்று எச்எம்டி நிறுவனம் கூறுகிறது. இது இன்று (செப்டம்பர் 11) முதல் இந்தியாவில் உள்ள முன்னணி சில்லறை விற்பனையாளர்கள், முக்கிய இ-காமர்ஸ் தளங்கள் மற்றும் எச்எம்டி.காம் (HMD.com) வழியாக வாங்க கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








