Home
Mobile

புதிய 3 விண்டோஸ் ஸ்மார்ட்போன்கள் ஒப்பீடு!

By Super
புதிய 3 விண்டோஸ் ஸ்மார்ட்போன்கள் ஒப்பீடு!

முதலில் விண்டோஸ் இயங்குதளத்தில் நோக்கிய நிறுவனம் அடுத்தடுத்து ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வந்தது.

இப்போது பல நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு விண்டோஸ் இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கிறன்றன. சர்வதேச நிகழ்ச்சியான ஐஎஃப்ஏ கண்காட்சியில் சாம்சங் நிறுவனம் புதிய ஏட்டிவ் எஸ் என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் பற்றி கூற வேண்டிய பெரிய விஷயமே, இது விண்டோஸ் இயங்குதளத்தில் இயங்கும் என்பது தான். இதனால் விண்டோஸ் இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன்களில் சாம்சங் மற்றும் நோக்கியாவிற்கிடையே கடும் போட்டி நிழவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நோக்கியா லுமியா-900 லுமியா-800 மற்றும் சாம்சங் இப்போது அறிமும் செய்திருக்கும் ஏட்டிவ் எஸ் ஆகிய இந்த ஸ்மார்ட்போன்களின் தொழில் நுட்ப விவரங்கள் பற்றி பார்க்கலாம்.

ஸ்மார்ட்போன்களின் எடை:

ஏட்டிவ் எஸ் ஸ்மார்ட்போன் 135 கிராம் எடை கொண்டதாக இருக்கும். இதனால் கையாள்வதற்கு ஏதும் சிரமம் இருக்காது. லுமியா-800 ஸ்மார்ட்போன் 142 கிராம் எடையினையும், லுமியா-900 160 கிராம் எடை கொண்டதாக இருக்கும். இங்கே கூறப்பட்டுள்ள மற்ற 2 நோக்கியா ஸ்மார்ட்போன்களையும் விட, சாம்கங் ஏவிட் எஸ் ஸ்மார்ட்போன் குறைந்த எடை கொண்டதாக தெரிகிறது.

திரை ஒப்பீடு:

ஒரு ஸ்மார்ட்போனை கையில் எடுத்த உடன் நம்மை கவர்வது திரை. ஏவிட் எஸ் ஸ்மார்ட்போன் 4.8 இஞ்ச் அமோலெட் உயர்ந்த துல்லியம் கொண்ட திரையினை கொண்டதாக இருக்கும். இதில் 1280 X 720 பிக்ஸல் திரை துல்லியத்தினை பெறலாம். மேலும் இதன் திரை கொரில்லா க்ளாஸை பாதுகாப்பு கவசமாக கொண்டிருக்கிறது. இதனால் கீறள்கள் பற்றி அவ்வளவாக பயமில்லை.

லுமியா-800 ஸ்மார்ட்போன் 3.7 இஞ்ச் அமோலெட் ஸ்மார்ட்போன் தொடுதிரை வசதி கொண்டதாக இருக்கும். இதில் 480 X 800 பிக்சஸ் திரை துல்லியத்தினை பெறலாம். இதிலும் கொரில்லா கிளாஸ் ப்ரொடெக்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்து நோக்கியா லுமியா-900 ஸ்மார்ட்போன் 480 X 900 பிக்ஸல் திரை துல்லியத்தினை வழங்கும் 4.3 இஞ்ச் திரை கொண்டதாக இருக்கும்.

லுமியா-900 ஸ்மார்ட்போனின் திரை துல்லியம் மிக குறைவானதாக தெரிகிறது. ஏனெனில் இந்த லுமியா-900 ஸ்மார்ட்போன் 4.3 இஞ்ச் திரை கொடுக்கப்பட்டுள்ளது என்கிற போது, இதன் துல்லியம் இன்னும் கொஞ்சம் அதிகமானதாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.

இயங்குதளம்:

ஏவிட் எஸ் ஸ்மார்ட்போன் விண்டோஸ் போன்-8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதி கொண்டதாக இருக்கும். லுமியா-900 மற்றும் லுமியா-800 ஸ்மார்ட்போன் விண்டோஸ் போன்-7.5 மேங்கோ ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதியினை கொடுக்கும்.

பிராசஸர்:

இயங்குதளம் பற்றி பார்க்கும் போது நிச்சயம் பிராசஸரையும் அலச வேண்டும். ஏவிட் எஸ் ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் எஸ்-4 ப்ஷல் எம்எஸ்எம்8960 சிப்செட் வசதியினை கொண்டதாக இருக்கும். இதில் இருக்கும் டியூவல் கோர் க்ரெயிட் பிராசஸர் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும்.

லுமியா-800 ஸ்மார்ட்போன் 1.4 ஜிகாஹெர்ட்ஸ் வேகம் கொண்ட ஸ்கார்பியன் பிராசஸரினை கொடுப்பதோடு, எம்எஸ்எம்8255 ஸ்னாப்டிராகன் சிப்செட்டை வழங்கும். லுமியா-900 ஸ்மார்ட்போன் குவால்காம் ஏபிகியூ8055 ஸ்னாப்டிராகன் சிப்செட், 1.5 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டியூவல் கோர் க்ரெயிட் பிராசஸரை பெறலாம்.

கேமரா:

கேமரா வசதியினை பற்றி தெரிந்து கொள்வது மிக அவசியமான ஒன்றாகிறது. ஏவிட் எஸ் ஸ்மார்ட்போன் 8 மெகா பிக்ஸல் கேமராவை வழங்கும். ஆட்டோஃபோக்கஸ், லெட் ப்ளாஷ் மற்றும் ஜியோ டேகிங் போன்ற வசதயினை வழங்கும். ஏவிட் ஸ்மார்ட்போனில் 1.9 மெகா பிக்ஸ்ல முகப்பு கேமராவும் இருக்கும்.

காரல் ஸியஸ் ஆப்டிக்ஸ் கொண்ட 8 மெகா பிக்ஸல் கேமராவினை நோக்கியா லுமியா-900 மற்றும் லுமியா-800 ஸ்மார்ட்போன்களில் எளிதாக பெறலாம். ஆனால் லுமியா-900 ஸ்மார்ட்போனில் உள்ள 1 மெகா பிக்ஸல் முகப்பு கேமரா, லுமியா-800 ஸ்மார்ட்போனில் கொடுக்கப்படவில்லை.

மெமரி வசதி:

ஸ்டோரேஜ் வசதி மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. ஏவிட் எஸ் ஸ்மார்ட்போனை பொருத்தவரை 16 ஜிபி மற்றும் 32 ஜிபி இன்டர்னல் மெமரி வசதியினை பெறலாம். இந்த ஸ்மார்ட்போனில் விரிவுபடுத்தி கொள்ளும் மெமரி வசதிக்கு மைக்ரோஎஸ்டி ஸ்லாட் சிறப்பாக துணை புரியும். லுமியா-800 மற்றும் லுமியா-900 ஸ்மார்ட்போனில் 16 ஜிபி வரை இன்டர்னல் மெமரி வசதியினை பயன்படுத்தலாம். இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலுமே விரிவுபடுத்தி கொள்ளும் மெமரி வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

பேட்டரி:

ஏவிட் எஸ் ஸ்மார்ட்போன் 2,300 எம்ஏஎச் பேட்டரியின் மூலம் லித்தியம் அயான் பேட்டரியை கொண்டதாக இருக்கும். இந்த பேட்டரியின் மூலம் 9.5 மணி நேரம் டாக் டைம் வசதியினையும், 335 மணி நேரம் ஸ்டான்-பை டைமினையும் வழங்கும். ஏவிட் எஸ் ஸ்மார்ட்போனில் வைபை நெட்வொர்க் மற்றும் என்எப்சி தொழில் நுட்ப வசதியினை எளிதாக பெறலாம்.

1,450 எம்ஏஎச் பேட்டரியினையின் மூலம் லுமியா-800 ஸ்மார்ட்போனிலும் 9.5 டாக் டைம் மற்றும் 335 மணி நேரம் ஸ்டான்-பை டைமையும் பெறலாம். லுமியா-900 ஸ்மார்ட்போன் 1,830 எம்ஏஎச் பேட்டரி இருக்கும் என்பதால், இதில் 7 மணி நேரம் டாக் டைம் மற்றும் 300 மணி நேரம் ஸ்டான்-பை டைமை பெறலாம்.

விண்டோஸ் இயங்குதளம் கொண்ட இந்த 3 ஸ்மார்ட்போன்களிலும், தொழில் நுட்ப வசதிகளில் நிறைய வேறுபாட்டினை பார்க்க முடிகிறது. இன்னும் சிறிது நாட்கள் காத்திருந்து இந்த ஸ்மார்ட்போன்களின விலை பற்றிய தகவல்களையும் தெரிந்து கொள்ள முடியும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X