அசுஸ் அதிரடி : இனி இன்டெக்ஸ், லாவா & மைக்ரோமேக்ஸ் காலி.!
ரூ.5,000 - ரூ.7,000/- என்ற விலை நிர்ணயம் கொண்ட இந்திய நிறுவன கருவிகளான இன்டெக்ஸ், லாவா மற்றும் மைக்ரோமேக்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு கடும் நெருக்கடி.!
பெரும்பாலான ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் மிட்-ரேன்ஜ் பிரிவு கருவிகள் இம்மாத இறுதியில் நடைபெறும் மொபைல் வேர்லட் காங்கிரஸ் 2017 நிகழ்வில் வெளியாகவுள்ளது. வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நோக்கியா, மோட்டரோலா மற்றும் சியோமி கருவிகளுடன் இப்போது அசுஸ் நிறுவனத்தின் பட்ஜெட் கருவியொன்றும் எம்டபுள்யூசி 2017 நிகழ்வில் வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இத்தாலிய வலைத்தளம் ஒன்றின் மூலம் வெளியாகியுள்ள இந்த தகவலின்படி அசுஸ் நிறுவனம் அதன் சென்போன் 3 கோ கருவியை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உடன் இக்கருவி சார்ந்த அம்சங்களும் வெளியாகியுள்ளன. அதை பற்றிய விரிவான தொகுப்பே இது.!

டிஸ்ப்ளே, சேமிப்பு
மெட்டாலிக் பாடி கொண்டுள்ள சென்போன் 3 கோ கருவியில் ஒரு 5 அங்குல 720பி டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 410 சிப்செட், 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க சேமிப்பு இருக்கலாம்.

மெகாபிக்சல்
கேமரா பற்றிய விரிவான தகவல்களின் கீழ் கருவி 1.4 மைக்ரோமீட்டர் பிக்சல் அளவு மற்றும் டூவல் டோன் பிளாஷ் எல்இடி கொண்ட 13 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் எல்இடி ப்ளாஷ் கொண்ட 5 மெகாபிக்சல் செல்பீ கேமரா கொண்டிருக்கும்.

ஸ்மார்ட் ஆம்ப்
இக்கருவியை கைரேகை சென்சார் அம்சம் சிறப்பாக இல்லை என்றாலும் கூட மற்ற அம்சங்கள் ஆன அழைப்பின் போது, ரெக்கார்ட் செய்யும்போது குறுக்கிடும் பிற சப்தங்களை தடுக்கும் டூவல் எம்இஎஸ் மைக்ரோபோன்ஸ் மற்றும் தெளிவான ஒலியை வழங்கும் "ஸ்மார்ட் ஆம்ப்" கொண்ட ஐந்து - மேக்னட் ஸ்பீக்கர் ஆகிய அம்சங்கள் திறன் மிகுந்தவைகளாக உள்ளன.

விலை
சென்போன் 3 போன்றே தோற்றமளிக்கும் இக்கருவி ஒரு முழு உலோக யூனிபாடி மற்றும் 2.5டி கர்வுடு கிளாஸ் கொண்டுள்ளது. சீன உற்பத்தியாளர்கள் தற்போது இக்கருவிக்கு ரூ.10,000 - ரூ.20,000/- என்ற விலை நிர்ணயத்தை வழங்கலாம் என்று தெரிகிறது.

போட்டி
வெளியான புகைப்படத்தின்கீழ் இக்கருவி தங்கம், ரோஸ் கோல்ட் மற்றும் நீல நிறங்களில் கிடைக்கும் என்று தெரிகிறது. இந்த 'கோ' சீரிஸ் கைபேசிகள் ஆனது ரூ.5,000 - ரூ.7,000/- என்ற விலை நிர்ணயம் கொண்ட இந்திய நிறுவன கருவிகளான இன்டெக்ஸ், லாவா மற்றும் மைக்ரோமேக்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு பெரும் போட்டியை அமையும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

மேலும் படிக்க
இந்தியாவில் கிடைக்கும் டாப்-10 4ஜி ஸ்மார்ட்போன்கள்.!


Click it and Unblock the Notifications