Home
Mobile

சுத்தி சுத்தி அடி! சுந்தர் பிச்சைக்கு இன்னொரு பேட் நியூஸ்; Google தலையில் இடி இறக்கிய 2 புது Samsung போன்கள்!

கூகுள் (Google) நிறுவனத்திற்கும், அதன் சிஇஓ-வான சுந்தர் பிச்சைக்கும் நேரம் சரி இல்லை போல. நேற்று இரவு தான் "நம்ம அண்ணன்" எலான் மஸ்க் கூகுளுக்கு எதிரான ஒரு வேலையை பார்த்துவிட்டார். இதற்கிடையில் சாம்சங் (Samsung) நிறுவனமும் தன் பங்கிற்கு ஒரு வேலையை பார்த்துள்ளது.

அறியாதோர்களுக்கு, நேற்று இரவு எலான் மஸ்க் (Elon Musk), எக்ஸ்ஏஐ (xAI) என்கிற தனது புதிய ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் நிறுவனத்தை (Artificial intelligence company) தொடங்கி கூகுள் உட்பட செயற்கை நுண்ணறிவு தொடர்பான தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் மொத்த நிறுவனங்களின் வயிற்றிலும் புளியை கரைத்தார்.

Google தலையில் இடி இறக்கிய 2 புது Samsung போன்கள்!

இதற்கிடையில் இன்னும் இந்தியாவிற்கு வந்து சேராத, கூகுளின் முதல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனான பிக்சல் ஃபோல்ட் மாடலுக்கு சாம்சங் நிறுவனம் 'செக்' ஒன்றை வைத்துள்ளது. நினைவூட்டும் வண்ணம், சாம்சங் நிறுவனம் வருகிற ஜூலை 26 ஆம் தேதியன்று 2 புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவுள்ளது.

ஜூலை 26 ஆம் தேதியன்று கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 5 (Galaxy Z Fold 5) மற்றும் கேலக்ஸி இஸட் ஃபிளிப் 5 (Galaxy Z Flip 5) ஸ்மார்ட்போன்களை அறிமுகமாக உள்ளது. இவ்விரு ஸ்மார்ட்போன்களின் விலை நிர்ணயம் தான், தற்போது கூகுள் நிறுவனத்தின் தலையில் இடியாய் இறங்கியுள்ளது.

ஒரு புதிய அறிக்கையானது, கேலக்ஸி இஸட் ஃபிளிப் 5 ஆனது கூகுள் பிக்சல் ஃபோல்ட்-ஐ விட மிகவும் மலிவானதாக இருக்குமென்றும், கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 5 ஆனது "சரிக்கு சமமான" விலை நிர்ணயத்தை பெறுமென்றும் பரிந்துரைக்கிறது. டீலாப்ஸ் வழியாக கிடைக்கப்பெற்ற தகவலின்படி சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 5-இன் 256ஜிபி ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.1,08,900 க்கு அறிமுகமாகும்.

ஹை-எண்ட் வேரியண்ட் ஆன 512ஜிபி ஆப்ஷன் தோராயமாக ரூ.1,21,600 க்கு அறிமுகமாகும். மறுகையில் உள்ள சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 5-இன் 256ஐபி ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக தோராயமாக ரூ.1,72,400 க்கும், 512ஜிபி மற்றும் 1டிபி ஆப்ஷன்கள் முறையே சுமார் ரூ.1,85,100 க்கும், ரூ.2,06,900 க்கும் அறிமுகம் செய்யப்படலாம்.

நினைவூட்டும் வண்ணம், ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிமுகமாகிவிட்ட கூகுள் பிக்சல் ஃ போல்ட் இன்னும் இந்திய சந்தைக்கு வரவில்லை. இது ரூ.1.5 லட்சம் என்கிற இந்திய விலை நிர்ணயத்தை பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக எப்படி பார்த்தாலும் சாம்சங்கின் புதிய ஃபோல்ட் மற்றும் ஃபிளிப் மாடல்கள் இதற்கு கடும்போட்டியாக இருக்கும்.

மேற்கண்ட விலைகள் ஐரோப்பிய விலை நிர்ணயங்களாகும். இந்திய விலை நிர்ணயங்களில் நிச்சயம் சில மாற்றங்கள் இருக்கலாம். அதிர்ஷடம் இருந்தால் விலைகள் குறைக்கக்கூடப்படலாம். பிக்சல் ஃபோல்டின் முக்கிய போட்டியாளரான கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 5 மாடலின் எதிர்பார்க்கப்படும் அம்சங்களை பொறுத்தவரை, இது 7.6-இன்ச் ஃபுல்எச்டி+ டைனமிக் அமோஎல்ஐடி மெயின் டிஸ்பிளே + 6.2-இன்ச் டைனமிக் அமோஎல்ஐடி அவுட்டர் பேனலை கொண்டிருக்கலாம்.

மேலும் இது ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட், 12ஜிபி வரை ரேம், 1டிபி வரை இன்டர்னல் ஸ்டோரேஜ், 50எம்பி ப்ரைமரி கேமரா + 12எம்பி அல்ட்ரா-வைட் கேமரா + 12எம்பி டெலிஃபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டிருக்கலாம்.

முன்பக்கத்தில் 10 எம்பி செல்பீ கேமரா, கூடவே 4 எம்பி அண்டர்-டிஸ்ப்ளே சென்சார் ஒன்றும் இடம்பெறலாம். இது 25W வயர்டு மற்றும் 15W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,400mAh பேட்டரியை கொண்டிருக்கலாம். கடைசியாக இது ஐபிஎக்ஸ் வாட்டர் ரெசிஸ்டென்ட் ரேட்டிங்கையும் கொண்டிருக்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Samsung Galaxy Z Fold 5 and Flip 5 Smartphone Prices To Directly Compete with Google Pixel Fold
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X