Home
Mobile

ரூ.20,000 டிஸ்கவுண்ட்.. கடையை காலி செய்யும் Honor.. ஐந்து 5G Phone-களையும் அள்ளிட்டு போகும் கஸ்டமர்ஸ்!

ஐடெல் டேஸ் (Itel Days) என்கிற ஐடெல் மொபைல் போன்கள் மற்றும் ஸ்மார்ட்போன்கள் மீதான பிரத்யேக விற்பனையோடு சேர்த்து, அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளமானது ஹானர் டேஸ் (Honor Days) என்கிற ஹானர் ஸ்மார்ட்போன்கள் மீதான ஒரு பிரத்யேக சிறப்பு விற்பனையையும் அறிவித்துள்ளது.

ஹானர் டேஸ் விற்பனையின் கீழ் மொத்தம் ஐந்து ஹானர் 5ஜி ஸ்மார்ட்போன்கள் மீது ரூ.6000 - ரூ.20,000 வரையிலான நேரடி தள்ளுபடி கிடைக்கிறது. இன்று (அதாவது நவம்பர் 26 ஆம் தேதி) தொடங்கிய இந்த பிரத்யேக விற்பனை ஆனது நவம்பர் 30 ஆம் தேதி வரை நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலத்தில், எந்தெந்த ஹானர் ஸ்மார்ட்போன்கள் மீது எவ்வளவு டிஸ்கவுண்ட் கிடைக்கும்? இதோ விவரங்கள்:

ரூ.20,000 டிஸ்கவுண்ட்.. கடையை காலி செய்யும் Honor!

ஹானர் 200 லைட் 5ஜி (Honor 200 Lite 5G) ஸ்மார்ட்போன் ரூ.24,999 க்கு பதிலாக ரூ.6000 தள்ளுபடிக்கு பிறகு ரூ.18,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல ஹானர் மேஜிக் 6 ப்ரோ 5ஜி (Honor Magic 6 Pro 5G) ஸ்மார்ட்போன் ரூ.1,09,999 க்கு பதிலாக ரூ.20,000 தள்ளுபடிக்கு பிறகு ரூ.89,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஹானர் 200 5ஜி (Honor 200 5G) ஸ்மார்ட்போன் ரூ.39,999 க்கு பதிலாக ரூ.13,000 தள்ளுபடிக்கு பிறகு ரூ.26,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல ஹானர் 200 ப்ரோ 5ஜி (Honor 200 Pro 5G) ஸ்மார்ட்போன் ரூ.59,999 க்கு பதிலாக ரூ.12,000 தள்ளுபடிக்கு பிறகு ரூ.47,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடைசியாக ஹானர் எக்ஸ்9பி 5ஜி (Honor X9b 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.30,999 க்கு பதிலாக ரூ.6,000 தள்ளுபடிக்கு பிறகு ரூ.24,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. முன்னரே குறிப்பிட்டபடி மேற்கண்ட 5 ஹானர் 5ஜி ஸ்மார்ட்போன்கள் மீதான சலுகைகள் நவம்பர் 30 ஆம் தேதி வரை மட்டுமே அணுக கிடைக்கும்.

ஹானர் 200 5ஜி மற்றும் ஹானர் 200 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்களின் முக்கிய அம்சங்கள்: ஹானர் 200 5ஜி மாடலானது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7-இன்ச் FHD+ OLED கர்வ்டு டிஸ்பிளேவையும், ஹானர் 200 ப்ரோ 5ஜி மாடலானது சற்றே பெரிய 6.78-இன்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

ப்ராசஸரை பொறுத்தவரை, ஹானர் 200 5ஜி ஆனது குவால்காமின் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. ஹானர் 200 ப்ரோ 5ஜி ஆனது ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 சிப்செட் உள்ளது. கேமராக்களை பொறுத்தவரை, ஹானர் 200 5ஜி மற்றும் ஹானர் 200 ப்ரோ 5ஜி ஆகிய இரண்டுமே ஒரே மாதிரியான கேமராக்களை கொண்டுள்ளன.

அதாவது 50 மெகாபிக்சல் ப்ரைமரி ரியாத் கேமராவுடன், அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸுடன் கூடிய 12 மெகாபிக்சல் சென்சார் மற்றும் 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ ஷூட்டர் ஆகியவற்றை கொண்டுள்ளன. ஆனால் ஸ்டாண்டர்ட் வேரியண்ட்டில் சோனி IMX906 ப்ரைமரி சென்சார் பொருத்தப்பட்டுள்ளது, ப்ரோ மாடலில் எச்9000 ப்ரைமரி சென்சார் பேக் செய்யப்பட்டுள்ளது.

செல்பீ கேமராவை பொறுத்தவரை இரண்டுமே 50 மெகாபிக்சல் செல்பீ கேமராக்களை கொண்டுள்ளன. ஆனால் ப்ரோ வேரியண்டில் செல்பீ கேமராவுடன் கூடுதலாக 3டி டெப்த் கேமரா உள்ளது. பேட்டரியை பொறுத்தவரை, ஹானர் 200 5ஜி சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் இரண்டுமே 100W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5200mAh பேட்டரியை கொண்டுள்ளன. ஆனால் ஹானர் 200 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் 66W வயர்லெஸ் மற்றும் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் செய்வதற்கான ஆதரவு உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Offer on Honor 5G Smartphones in Amazon Honor Days Sale 2024 Ends on November 30
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X