Home
Mobile

வெயிட்டான விலை: அதை விட வெயிட்டான அம்சங்களுடன் வெளிவரும் 2 Infinix போன்கள்.!

இன்பினிக்ஸ் நிறுவனம் விரைவில் Infinix Zero 20 மற்றும் Infinix Note 12 (2023) போன்களை அடுத்த மாதம் துவக்கத்தில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த இரண்டு போன்களும் அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு போன்

அதேபோல் இந்த இரண்டு போன்களும் முதலில் சர்வதேச சந்தையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதன்பின்பு தான் இந்தியாவில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது ஆன்லைனில் கசிந்த இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் அம்சங்களை சற்று
விரிவாகப் பார்ப்போம்.

EPFO: உங்கள் PF கணக்கில் ரூ.81000 டெபாசிட்! உடனே Online இல் பேலன்ஸ் செக் செய்யுங்க.!

 இன்பினிக்ஸ் ஜீரோ 20

இன்பினிக்ஸ் ஜீரோ 20

இன்பினிக்ஸ் ஜீரோ 20 ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும். மேலும் 1,080x2,400 பிக்சல்ஸ்,
90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

இன்பினிக்ஸ் ஜீரோ 20  கேமரா

இன்பினிக்ஸ் ஜீரோ 20 கேமரா

புதிய இன்பினிக்ஸ் ஜீரோ 20 ஸ்மார்ட்போன் 108எம்பி மெயின் கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி செல்பி கேமராவுடன்இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

இன்பினிக்ஸ் ஜீரோ 20 பேட்டரி

இன்பினிக்ஸ் ஜீரோ 20 பேட்டரி

இன்பினிக்ஸ் ஜீரோ 20 ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் 45 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர், மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு, யுஎஸ்பி டைப்-சி போர்ட், வைஃபை, புளூடூத் வி5.0,மீடியாடெக் ஹீலியோ ஜி99 சிப்செட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் ஜீரோ 20 மாடல்.

 இன்பினிக்ஸ் நோட் 12 (2023)

இன்பினிக்ஸ் நோட் 12 (2023)

இன்பினிக்ஸ் நோட் 12 (2023) ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் அறிமுகமாகும். மேலும் 1,080x2,400 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவரும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

மீடியாடெக் ஹீலியோ ஜி99 சிப்செட்

மீடியாடெக் ஹீலியோ ஜி99 சிப்செட்

இன்பினிக்ஸ் நோட் 12 (2023) ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி99 சிப்செட் வசதி உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியுடன் வெளிவரும் இந்த அட்டகாசமான மொபைல். குறிப்பாக இந்த போன் 50எம்பி கேமரா ஆதரவு கொண்ட ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.மேலும் 16எம்பி செல்பி கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி, 33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இன்பினிக்ஸ் நோட் 12 (2023).

என்ன விலை?

என்ன விலை?

இணையதளத்தில் வெளிவந்த தகவலின்படி, புதிய இன்பினிக்ஸ் ஜீரோ 20 ஸ்மார்ட்போன் (இந்திய மதிப்பில்) ரூ.21,000-விலையில் அறிமுகமாகும். பின்பு இன்பினிக்ஸ் நோட் 12 (2023) ஸ்மார்ட்போன் (இந்திய மதிப்பில்) ரூ.14,999-விலையில் அறிமுகமாகும். குறிப்பாக இந்த இரண்டு போன்களும் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
New Infinix Zero 20, Note 12 (2023) Specifications leaked online: Price, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X