EPFO: உங்கள் PF கணக்கில் ரூ.81000 டெபாசிட்! உடனே Online இல் பேலன்ஸ் செக் செய்யுங்க.!
EPFO என்று அழைக்கப்படும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (Employees' Provident Fund Organization) பணி ஓய்விற்குப் பிறகு ஊழியர்களின் வாழ் வாதாரத்திற்காக அவர்களது சம்பளத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை வைப்பு நிதியாகப் பிடித்துக்கொள்ளும். பின்பு அதனை வட்டியுடன் ஊழியர்களின் வங்கிக் கணக்கிலேயே கூடுதல் பணமாகச் சேர்த்துவிடும். இப்படி உங்களிடமிருந்து பிடிக்கப்பட்ட பணத்திற்கான வட்டியை இந்த மாதம் நீங்கள் பெறப்போகிறீர்கள்.

EPFO பயனர்களுக்கு அதிகப்படியான வட்டி கிடைக்கப் போகிறதா?
அப்படி இந்த EPFO சேவையின் கீழ் சுமார் 7 கோடிக்கும் அதிகமான ஊழியர்கள் சந்தாதாரர்களாக இருக்கிறார்கள். EPFO பயனர்களுக்குச் சேர வேண்டிய 2022 ஆம் ஆண்டின் வட்டி தொகையை இந்த மாதத்தின் இறுதியில் வங்கி கணக்கில் சேர்க்கப் போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. மேலும் மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி என்னவென்றால், இந்த ஆண்டிற்கான வட்டி 8.1 சதவிகிதமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

உங்கள் கணக்கில் எப்போது இந்த தொகை வந்து சேரும்?
இந்த ஆண்டிற்கான மொத்த EPFO வட்டி தொகையையும் கணக்கு செய்து பார்த்ததில் ரூ. 72,000 கோடியை தாண்டுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த தொகை, EPFO கணக்கு வைத்துள்ள உரிய உறுப்பினர்களின் கணக்குகளில் வைப்பு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிட் காரணமாகச் சென்ற ஆண்டிற்கான வட்டி தொகை தாமதமாக 6 முதல் 8 மாதங்கள் கழித்து வந்தது. ஆனால், இம்முறை இந்த வட்டி தொகை சரியான நேரத்தில் வந்து சேரப் போகிறது.

யாருக்கெல்லாம் ரூ. 81,000 வரை வட்டி தொகை கிடைக்கும்?
இம்மாத இறுதியில் இந்த வட்டி தொகை உங்கள் கணக்கிற்கு வந்து சேரும் என்று கூறியுள்ளது. உங்கள் EPFO கணக்கில் ரூ. 10 லட்சம் இருந்தால், உங்களுக்கு ரூ. 81,000 வரை வட்டி தொகையாகக் கிடைக்கும். அதேபோல், உங்கள் EPFO கணக்கில் ரூ. 7 லட்சம் வைப்பு நிதி வைத்திருந்தால் உங்களுக்கு ரூ. 56,700 வட்டி தொகையாக வழங்கப்படும். ரூ. 5 லட்சம் வைந்திருக்கும் நபர்களுக்கு ரூ. 40,500 வரவு வைக்கப்படும். இந்த வட்டி தொகைகள் அவரவர் கணக்கில் கணக்கில் சரியாகச் செலுத்தப்படும்.

1. மிஸ்டு கால் மூலம் EPFO கணக்கில் இருக்கும் பேலன்ஸை அறிந்துகொள்வது எப்படி?
சரி, இப்போது உங்கள் EPFO கணக்கில் இருக்கும் தொகை எவ்வளவு என்று ஆன்லைன் மூலம் தெரிந்துகொள்ள சில வழிகள் உள்ளன. அவை என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.
உங்கள் PF கணக்கில் இருக்கும் தொகையின் விவரத்தைத் தெரிந்து கொள்ள நீங்கள் பதிவு செய்திருக்கும் மொபைல் எண்ணில் இருந்து 011-22901406 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் தர வேண்டும். பின்னர் EPFOவில் இருந்து உங்கள் மொபைல் எண்ணிற்கு, PF கணக்கின் பேலன்ஸ் தொகை விவரம் எஸ்எம்எஸ் ஆக அனுப்பப்படும். ஆனால், அதற்கு உங்கள் UAN, PAN மற்றும் ஆதார் விபரங்கள் இந்த கணக்குடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

2. ஆன்லைன் மூலம் EPFO கணக்கில் இருக்கும் தொகையை எப்படித் தெரிந்துகொள்வது?
முதலில் epfindia.gov.in என்ற இணையதள முகவரிக்குச் சென்று உள்நுழைந்து e-passbook என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். அதனை கிளிக் செய்வதினால் passbook.epfindia.gov.in என்ற புதிய இணையதள முகவரிக்கு நீங்கள் அழைத்துச் செல்லப்படுவீர்கள். அதில் உங்கள் பயனர் பெயர் (user name) அதாவது UAN எண், பாஸ்வோர்ட் (password) மற்றும் கேப்ட்ச்சா குறியீட்டை உள்ளிட வேண்டும். பிறகு, மெம்பெர் ID தேர்வு செய்தால் உங்கள் e-passbookகில் பேலன்ஸ் தொகை காண்பிக்கப்படும்.

3. UMANG ஆப்ஸ் மூலம் EPFO பேலன்ஸை எப்படி அறிந்துகொள்வது?
இதற்கு முதலில் Unified Mobile Application for New-age Governance (UMANG) ஆப்பை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும். பின்னர், ஓபன் செய்து EPFO என்பதைத் தேர்வு செய்துகொள்ள வேண்டும். அடுத்த பக்கத்தில் Employee-centric services என்ற தேர்வை கிளிக் செய்ய வேண்டும். பின்பு View Passbook என்ற விருப்பத்தைத் தேர்வு செய்து, உங்கள் UAN எண் மற்றும் பாஸ்வோர்டை உள்ளிட வேண்டும்.

பேலன்ஸ் செக் செய்யும் போது இதை மறக்காதீர்கள்.!
உங்கள் மொபைல் எண்ணிற்கு அனுப்பப்பட்டிருக்கும் OTP உள்ளிட்டு, கணக்கில் இருக்கும் தொகையின் விவரங்களை நீங்கள் தெரிந்துகொள்ளலாம். இந்த முறையைப் பின்பற்றி நீங்கள் உங்கள் EPFO கணக்கில் இருக்கும் இருப்புத் தொகை பற்றிய விபரங்களைக் கண்டறியலாம். உங்கள் EPFO கணக்கில் எவ்வளவு அதிகமாக இருப்புத் தொகை இருக்கிறதோ, அதற்கு ஏற்றார் போல தான் வட்டி தொகை கிடைக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications