ஐபோன் 8-ல் பெரிய ஸ்க்ரீன், ரியர் டச் ஐடி இடம்பெறும் வாய்ப்புகள் அதிகம்.!

ஐபோன் 8 ஆனது சாம்சங் கேலக்ஸி எஸ்8 மற்றும் எல்ஜி ஜி6 டிஸ்ப்ளேக்களை விட நீளமான 18.5: 9 திரை விகிதம் கொண்டிருக்கும் என்கிறது.

|

கடக்கும் ஒவ்வொரு மாதமும், 2107-ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஆப்பிள் ஐபோன் 8 அம்சங்ககள் பற்றிய விவரங்கள் தெளிவாகி வருகின்றன, மேலும் சமீபத்திய கசிவுகள் நம்பப்படுமானால், இந்த ஆண்டு வெளியாகும் ஆப்பிள் ஐபோன் 8 சாதனம் கைரேகை ஸ்கேனர் பின்புறத்திற்கு நகர்த்துவதன் மூலம் ஆல் டிஸ்பிளே திரையும் கொண்டிருக்கும் என்று நம்பப்படுகிறது.

ஐபோன் 8-ல் பெரிய ஸ்க்ரீன், ரியர் டச் ஐடி இடம்பெற வாய்ப்புகள் அதிகம்.!

(சீன வலைதளமான ஐபோனரோஸ் (iPhoneros) புதிய வெளிப்பாட்டின் படி, ஐபோன் 8 ஆனது சாம்சங் கேலக்ஸி எஸ்8 மற்றும் எல்ஜி ஜி6 டிஸ்ப்ளேக்களை விட நீளமான 18.5: 9 திரை விகிதம் கொண்டிருக்கும் என்கிறது.

வெட்கக்கேடு : ஜியோ செய்தால் அது சட்டமீறல், அதுவே ஏர்டெல் செய்தால் சேவையா.!

இந்த விகிதமானது உற்பத்தியாளர்கள் ஒரு ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளே அளவை அதிகரிக்க அனுமதிக்கிறது என்பதால் இந்த நகர்வை ஆப்பிள் வாடிக்கையாளர்கள் வரவேற்கலாம். அதே நேரத்தில் அது ஒரு கைப்பிடியைக் கட்டுப்படுத்த போதுமானதாக இருப்பதோடு விசைப்பலகை இன்னும் வசதியாகவும் பயன்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிது.

இருப்பினும் இதற்கான பயன்பாட்டின் தயாரிப்பாளர்கள் தங்கள் பயனர் இடைமுகங்களை மறுவடிவமைக்க வேண்டும், காட்சிக்கு மேலே உள்ள நேவிகேஷன் (ஐஓஎஸ்-ல் உள்ள பேக் பொத்தானைப் போல) பொத்தான்களை அடைய கடினமாக இருக்கும்.

வெட்கக்கேடு : ஜியோ செய்தால் அது சட்டமீறல், அதுவே ஏர்டெல் செய்தால் சேவையா.!

முன்னரே கசிந்த வரைபடங்கள் செயல்திறன் மற்றும் பிற வடிவமைப்பு தகவல்களுடன், செங்குத்து கேமரா வடிவமைப்பு, கேமரா ப்ளாஷ் ஆகியவற்றை வெளிப்படுத்தின. தற்போது வெளியாகியுள்ள கசிவுகளின் சட்டபூர்வமான தன்மையைப் பொறுத்தவரை,சீன மூலமான ஐபோனரோஸ் தளத்திலிருந்து கடந்த காலங்களில் வந்த படங்கள் சரியான தகவல்களை வழங்கியுள்ளது என்பதால் இந்த அம்சங்கள் நிஜமானதாக மாற வாய்ப்புகள் அதிகம் உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

Read more about:
English summary
New alleged leaked images of Apple iPhone 8 reveal large display, rear Touch ID. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X