வெட்கக்கேடு : ஜியோ செய்தால் அது சட்டமீறல், அதுவே ஏர்டெல் செய்தால் சேவையா.!

"பறக்குறதுக்கு ஆசைப்பட்டு இருக்குறத இழந்து விடக்கூடாது" என்ற வட்டாரப் பழமொழிக்கு ஏற்ற வண்ணம் ஏர்டெல் சில சாதுரியமான காரியங்களை செய்லபடுத்தி வருகிறது.

|

ஜியோ 4ஜி - இந்திய தொலைத்தொடர்பு துறைக்குள் நுழைந்து சேவைகள் என்ற பெயரின்கீழ் என்னென்ன அட்டகாசங்களையெல்லாம் (சலுகைகள்) செய்ய முடியுமோ செய்து சிறு நிறுவனங்கள் மட்டுமின்றி பெருநிறுவனமான ஏர்டெல் நிறுவனத்தின் பொழப்பில் மண்ணை அள்ளிப்போட்டது பற்றாது என்று தற்போது ஜியோ அதன் ஜியோபைபர் பிராண்ட்பேண்ட் சேவையில் வரும் தீபாவளி முதல் களம் காண உள்ளதென்ற செய்தி வாடிக்கையாளர்களை எவ்வளவுக்கு எவ்வளவு குஷிப்படுத்துகிறதோ அதே அளவிற்கு ஏர்டெல் நிறுவனத்தை பீதி அடைய செய்துள்ளது.

இது நடக்கும் என்று முன்னரே நன்கு அறிந்த ஏர்டெல் ஏற்கனவே அதன் பிராண்ட் பேண்ட் சேவைகளில் சிறந்த சலுகைகளை வழங்கி வந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் இந்தியாவின் மிக மலிவான ஜியோ சேவைகளின் முன்பு அது ஈடுகொடுக்காது என்பது வெளிப்படை. இதெல்லாம் ஒருபக்கமிருக்க "பறக்குறதுக்கு ஆசைப்பட்டு இருக்குறத இழந்து விடக்கூடாது" என்ற வட்டாரப் பழமொழிக்கு ஏற்ற வண்ணம் ஏர்டெல் சில சாதுரியமான காரியங்களை செய்லபடுத்தி வருகிறது. அவைகள் என்னென்ன.? இதன் மூலம் ஜியோ புயலில் இருந்து ஏர்டெல் நிறுவனத்தினால் தப்பி பிழைக்க முடியுமா.??

கட்டணத் திட்ட பிரிவில்

கட்டணத் திட்ட பிரிவில்

பார்தி ஏர்டெல் புதிய அறிமுகமான ஜியோவுடன் பொருத்துவதற்கு பலவகையில் முயற்சிக்கிறது. ஏர்டெல் இப்போது ஜியோவுடன் ஒப்பிடும் போது கட்டணத் திட்ட பிரிவில் ஓரளவு கடுமையான சாமாளிப்பை நிகழ்த்தி கொண்டிருக்கிறது என்றே கூறலாம்.

வோல்ட்

வோல்ட்

அதனை தொடர்ந்து இப்போது வோல்ட் (VoLTE) சேவைகளை உருட்டிவிட ஏர்டெல் திட்டமிட்டுள்ளது. மேலும் கிடைத்த ஆதாரங்களின்படி, ஏர்டெல் தற்போது சேவையை சோதிக்க பல்வேறு ஸ்மார்ட்போன்கள் விற்பனையாளர்களுடன் பணிபுரிகிறது.

உருட்டுவதற்கு முன்னர்

உருட்டுவதற்கு முன்னர்

வெளியான தகவலின்கீழ் வோல்ட் உள் கட்டமைப்பை சார்ந்த பணிகளில் ஏர்டெல் ஈடுபட்டு வருவதாகவும், சேவையை உருட்டுவதற்கு முன்னர் சேவை வழிகாட்டல்களை நடத்துவதாகவும் அறியப்படுகிறது. பிரதான சந்தையில் இந்த சேவை தொடங்கப்படும், பின்னர் பிற நகரங்களுக்கும் விரிவாக்கப்படும்.

சில ஸ்மார்ட்போன்களின்

சில ஸ்மார்ட்போன்களின்

ஏர்டெல் தற்போது, சந்தையில் ஏற்கனவே கிடைக்கக்கூடிய பல்வேறு இந்திய 4ஜி கைபேசிகளில் சேவையை பரிசோதித்து வருகிறது, மேலும் சில ஸ்மார்ட்போன்களின் மீதான சோதனை வெற்றிகரமாக கடந்துவிட்டன என்றும் கூறப்படுகிறது. எனவே, விரைவில் ஏர்டெல் நிறுவனத்தின் இந்த புதிய சேவையை எதிர்பார்க்கலாம்.

வழிப்பாதை

வழிப்பாதை

கடந்த ஆண்டு, ஏர்டெல் நிறுவனம் மற்றும் பின்லாந்து நிறுவனமான நோக்கியா ஆகியஇரட்ணடும் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டது என்பதும் உள்நாட்டு ரோமிங்கை அகற்ற ஏர்டெல் மூலம், அடுத்த மாதம் முதல் வோல்ட் சேவைகளின் வழிப்பாதை அமைக்கும் வேலை தொடங்கப்படலாம்.

பொருத்தமானதாக இருக்கும்

பொருத்தமானதாக இருக்கும்

ஏர்டெல் தற்போது லேகேசி சர்க்யூட்-ஸ்விட்ச் தொழில்நுட்பத்தின் (legacy circuit-switch technology) வழியாக குரல் அழைப்பை வழங்கி வருகிறது. அடுத்த 12-18 மாதங்களில் முக்கிய சந்தைகள் அல்லது பெரிய நகரங்களில் வோல்ட் சேவை மிகவும் பொருத்தமானதாக இருக்கும்" என்று சில மாதங்களுக்கு முன்பு கோபால் விஷால் கூறியதின் மூலம் இப்போது வோல்ட் சேவை அறிமுகம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்தவொரு பிணையத்திற்கும்

எந்தவொரு பிணையத்திற்கும்

இப்போது இந்தியாவில் வோல்ட் சேவைகளை வழங்கி வரும் ஒரே நிறுவனமாக ஜியோ திகழ்கிறது. இதன் மூலம் இந்தியாவில் எந்தவொரு பிணையத்திற்கும் முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோ நிறுவனம் இலவச குரல் அழைப்புகளை வழங்கி வருகிறது.

நோக்கியாவின் ஐ.எம்.எஸ்.

நோக்கியாவின் ஐ.எம்.எஸ்.

இலவச குரல் அழைப்புகளை வழங்குவதற்கான முடிவு அப்போதைய செயலதிகாரிகளால் பின்வாங்கப்பட்டது, ஆனால் அவர்களே இப்போது அதே சேவையை செயல்படுத்த முயல்கின்றனர். தற்செயலாக, ரிலையன்ஸ் ஜியோவின் வோல்ட் சேவைகள் நோக்கியாவின் ஐ.எம்.எஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பயன்படுத்தப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

கவனம்

கவனம்

ஏர்டெல் தவிர, வோடபோன் இந்தியாவும் வோல்ட் சேவைகளில் பணிபுரிவதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் உருட்டலாம் என்றும் மறுபக்கம் ஐடியா செல்லுலார் நிறுவனம் எரிக்சன் மற்றும் நோக்கியாவுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு ஒரு ஒப்பந்தத்தை வழங்குவதில் கவனம் செலுத்தி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

Read more about:
English summary
Bharti Airtel Started Testing VoLTE Services in Various 4G Supported Devices. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X