இரவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதால் உடல்நிலை பாதிக்குமா?

By Super Admin
|

இரவில் நீண்ட நேரம் ஸ்மார்ட்போன், கம்ப்யூட்டர், லேப்டாப் போன்ற சாதனங்களை பயன்படுத்துவதால் தூக்கம் கெடுகிறது என்ற தகவல் பரவலாக இருந்து வருகிறது. ஆனால் எத்தனை பேர் இந்த தகவலை உண்மை என நம்பி, ஸ்மார்ட்போன் உபயோகத்தை குறைக்க தயாராக இருக்கின்றனர்.

இரவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதால் உடல்நிலை பாதிக்குமா?

ரிலையன்ஸ் சலுகை : அழைப்புகளில் 95% கட்டணம் சேமிக்க முடியும்.!

பொதுவாக ஸ்மார்ட்போன்கள் நீல நிற ஒளியை வெளியேற்றுகிறது. இந்த ஒளி, சூரிய வெளிச்சத்தையும் மீறி திரையில் பிரைட்டாக நமக்கு எழுத்துக்களை காட்ட உதவுகிறது. ஆனால் இவ்வகை நீல நிற ஒளி நமது தூக்கத்தை கெடுக்கின்றது ஒரு மாயைதான் என்றும் இதில் உண்மையில்லை என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தூங்கி-எழுதல் முறையில் எவ்வித பாதிப்பும் இல்லை

தூங்கி-எழுதல் முறையில் எவ்வித பாதிப்பும் இல்லை

ஸ்மார்ட்போன் உள்பட எலக்ட்ரானிக் பொருட்களை இரவினில் உபயோகிப்பதால் தூக்கத்தில் எவ்வித பாதிப்பும் இருப்பதில்லை. ஆனால் நீங்கள் உங்கள் லேப்டாப்பில் பார்க்கும் விஷயங்கள், சமூக வலைத்தள பதிவுகள், நீங்கள் பார்க்கும் மெயில்களில் உள்ள அம்சங்கள் வேண்டுமானால் தூக்கத்தை கெடுத்திருக்க வாய்ப்பு உண்டு.

எந்த வித்தியாசமும் இல்லை:

எந்த வித்தியாசமும் இல்லை:

இதை நிரூபணம் செய்வதற்காகவே இரவு 9 மணியில் இருந்து 11 மணி வரை எலக்ட்ரானிக் சாதனம் உபயோகிப்பவர்களிடம், புத்தகம் படிக்கும் பழக்கம் உடையவர்களிடம் சோதனை செய்து பார்க்கப்பட்டது. இதில் கிடைத்த ஆச்சரியத்தக்க உண்மை என்ன எனில், இருவருக்கும் தூக்கம் கொள்வதில் எந்த வித்தியாசமும் இல்லை என்பது தான்.

தூக்கத்தின் அளவு குறைகிறதா?

தூக்கத்தின் அளவு குறைகிறதா?

நமது உடலில் மெலடோனின் என்ற ஹார்மோன்கள் தூக்க சுழற்சியை ஒழுங்குபடுத்தும் ஒரு ஹார்மோன். ரெகுலரான தூக்கமோ, அல்லது குறைந்த நேர தூக்கமோ இருக்கும்போது இந்த ஹார்மோன்கள் பாதிக்கப்பட்டு உடல்நலக்குறைவு ஏற்பட காரணமாக அமைகின்றது. ஆனால் ஸ்மார்ட்போனில் இருந்து வெளிப்படும் நீல நிற ஒளிக்கதிர்கள் தூக்கத்தை கெடுப்பதாக பரப்பப்படுகிறது.

மெலடோனின் குறைபாடால் புற்றுநோய்

மெலடோனின் குறைபாடால் புற்றுநோய்

மெலடோனின் ஹார்மோன்கள் குறைவாக இருந்தால் நமது உடலின் பல பாகங்களில் கோளாறு ஏற்பட்டு புற்றுநோய், மார்பக நோய்கள் ஆகியவை ஏற்பட வழிவகுக்கின்றன. ஆனால் ஆராச்சியாளர்கள் ஸ்மார்ட்போன் உபயோகிப்பவர்கள், உபயோகிக்காதவர்கள் ஆகிய இரு தரப்பினர்களுக்கும் இந்த குறைபாடு இருப்பதை உறுதி செய்துள்ளனர்.

மன அழுத்தத்தால் மெலடோனின் குறைபாடு:

மன அழுத்தத்தால் மெலடோனின் குறைபாடு:

ஸ்மார்ட்போனில் இருந்து வெளிப்படும் நீல நிற கதிர்கள் உபயோகிப்பவர்களின் மனநிலையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குறைந்த மெலடோனின் குறைபாடு உள்ளவர்களின் மனநிலை இந்த கதிரால் வந்தது என கற்பனை செய்து கொள்கின்றனர். இதுவும் ஆய்வு மூலம் நிரூபணம் ஆகியுள்ளது.

கண்களை பாதிக்குமா?

கண்களை பாதிக்குமா?

பெரும்பாலும் இளையதலைமுறையினர்களின் மன அழுத்தமே அவர்களுடைய விழித்திரை கோளாறுக்கு காரணமாக அமைகின்றன என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஒருசிலருக்கு மன அழுத்தத்தால் கண்கள் முற்றிலும் பாதிக்கும் நிலையும் ஏற்படுவதுண்டு.

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
A recent study has proved that using your smartphone at night before sleep is no more a problem as it is not linked to causing any disorder as it was believed to. Take a look!

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X