ரிலையன்ஸ் சலுகை : அழைப்புகளில் 95% கட்டணம் சேமிக்க முடியும்.!

Written By:

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ இண்டர்நெட் சேவை வெளியாக இருப்பதைத் தொடர்ந்து பல்வேறு தொலை தொடர்பு நிறுவனங்களும் இண்டர்நெட் விலையைக் குறைத்து வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் ரிலையன்ஸ் புதிய சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் அறிவித்திருக்கும் புதிய சேவையின் மூலம் ஆப்ஸ்களின் மூலம் மேற்கொள்ளப்பட்டும் அழைப்புகளின் கட்டணம் குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
குறைப்பு

குறைப்பு

அதன் படி ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்திருக்கும் புதிய சலுகைகளின் படி மற்ற செயலிகளை விட 95 சதவீதம் அழைப்பு கட்டணம் குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சலுகை ரிலையன்ஸ் 3ஜி மற்றும் 4ஜி வாடிக்கையாளர்கள் பயன்படுத்த முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திட்டம்

திட்டம்

காலிங் க நயா தரீகா ''Calling Ka Naya Tareeka'' எனும் புதிய வாய்ஸ் காலிங் சேவையை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி கொள்கிறோம். இந்தச் சலுகையின் மூலம் ஆப்களுக்கிடையேயான அழைப்புகளை இந்தியா மட்டுமின்றி உலகளவில் மேற்கொள்ள முடியும் என அந்நிறுவனத்தைச் சேர்ந்த குர்தீப் சிங் தெரிவித்தார்.

டேட்டா

டேட்டா

ரிலையன்ஸ் டேட்டா கட்டணங்களை பொருத்த வரை 200 எம்பி 4ஜி டேட்டா விலை ரூ.39 மட்டுமே. ஜியோசாட், வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் மெசன்ஜர், ஸ்கைப், கூகுள் ஹேங் அவுட்ஸ் போன்ற ஆப்ஸ் மூலம் சுமார் 300 நிமிடங்களுக்குப் போன் கால்களை மேற்கொள்ள முடியும்.

சேமிப்பு

சேமிப்பு

மற்ற 3ஜி அல்லது 4ஜி திட்டங்களைப் பயன்படுத்தி அழைப்புகளை மேற்கொள்ளும் போது நிமிடத்திற்கு ரூ.2 அல்லது 3 வரை செலவாகும் ஆனால் இந்தத் திட்டத்தில் 13 பைசாவில் அழைப்புகளை மேற்கொள்ள முடியும் என்றும் குர்தீப் சிங் தெரிவித்தார்.

பிரவுஸிங்

பிரவுஸிங்

இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் டேட்டாவை பயன்படுத்தி பிரவுஸிங் மற்றும் இணைய இசையை அனுபவிக்க முடியும், ஆனாலும் மொபைல் ஆப் மூலம் அழைப்புகளை மேற்கொள்ளும் போது கட்டணங்கள் குறையும்.

எச்டி

எச்டி

ரிலையன்ஸ் 4ஜி எல்டிஇ நெட்வர்க் பயன்படுத்தும் போது வாடிக்கையாளர்கள் தடையில்லா எச்டி தரம் கொண்ட தரவுகளை அனுபவிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Reliance makes app calling 95% cheaper Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot