Home
Mobile

மோட்டோரோலோ மோட்டொ M ஸ்மார்ட்போனின் சிறப்பு அம்சங்கள்

By Siva

மோடோரோலோ நிறுவனத்தை லெனோவா நிறுவனம் கைப்பற்றிய பின்னர் வெளியிட்ட மோட்டோ Z மற்றும் மோட்டோ Z ப்ளே ஆகிய இரண்டு மாடல்களும் இந்திய வாடிக்கையாளர்களால் பெரிதும் வரவேற்கப்பட்ட நிலையில் தற்போது மிக விரைவில் புதிய மாடலான மோட்டோ M என்ற மாடல் வெளிவரவுள்ளது.

மோட்டோரோலோ மோட்டொ M ஸ்மார்ட்போனின் சிறப்பு அம்சங்கள்

தற்சமயம் வாங்கத் தலைசிறந்த ஸ்மார்ட்போன்கள், டாப் 10 பட்டியல்!

இந்த புதிய மாடலை லெனோவா நிறுவனம் நவம்பர் 8ஆம் தேதி வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே மாடலில் லெனோவா வைப் P2 மாடலும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த மாடலின் உள்ள புதுப்புது அம்சங்கள் என்னென்ன என்பது குறித்த கசிந்த தகவல்களை தற்போது பார்ப்போம்.

மோட்டோ M டிஸ்ப்ளே எப்படி இருக்கும்?

மோட்டோ M டிஸ்ப்ளே எப்படி இருக்கும்?

கிட்டத்தட்ட அனைத்து ஸ்மார்ட்போன்களில் இருப்பது போலவே இந்த ஸ்மார்ட்போனிலும் 5.5 இன்ச் HD டிஸ்ப்ளே உள்ளது. மேலும் இதன் பிக்சன் டென்சிட்டி 401 PPl என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய மெடியாடெக் ஹீலியா பிராஸசர்

புதிய மெடியாடெக் ஹீலியா பிராஸசர்

ஒரு ஸ்மார்ட்போனுக்கு பிராஸசர் எந்த அளவுக்கு முக்கியம் என்பது ஸ்மார்ட்போன் டெக்னாலஜி தெரிந்தவர்களுக்கு நன்கு புரியும். அந்த வகையில் இந்த மோட்டோ M ஸ்மார்ட்போனில் புதிய மெடியாடெக் ஹீலியா பிராஸசர் P15 சிப்செட் உள்ளது. மேலும் 2.2 GHz பிராஸசர் 8 கோரில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மோட்டோ M மாடலின் கேமிரா எப்படி?

மோட்டோ M மாடலின் கேமிரா எப்படி?

ஒரு ஸ்மார்ட்போனுக்கு மிக முக்கிய அந்த போனில் அமைந்துள்ள கேமிராதான் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இந்த மாடல் ஸ்மார்ட்போனில் 13 MP பின் கேமிரா உள்ளது LED ப்ளாஷ் வசதியுள்ள இந்த கேமிராவுடன் 8 MP செல்பி கேமிராவும் உள்ளது என்பது குறிப்பிடத்டஹ்க்கது.

3050mAH பேட்டரி

3050mAH பேட்டரி

இந்த மோட்டோ M ஸ்மார்ட்போனில் 5100 mAH பேட்டரி இருக்கும் என்று டுவிட்டர் உள்ளிட்ட ஒருசில சமூக இணையதளங்களில் செய்திகள் லீக் ஆகி வந்தாலும், இந்த பட்ஜெட் விலையில் இவ்வளவு உயர்ந்த பேட்டரி இருக்க வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது. மேலும் லெனோவா வைப் P2 மாடலில் 5100 mAH பேட்டரி இருப்பதால் மோட்டோ M ஸ்மார்ட்போனில் 3050mAH பேட்டரி இருக்கவே அதிக வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இது ஆண்ட்ராய்டு போனா?

இது ஆண்ட்ராய்டு போனா?

இதுவரை வெளிவந்த இந்த மாடலின் புகைப்படங்களில் இருந்து பார்க்கும்போது இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு மாடலாக இருக்க வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது. இருப்பினும் லெனோவா வைப் P2 ஆண்ட்ராய்டு மாடலில் உள்ள சிறப்பு அம்சங்கள் இந்த போனில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இதுகுறித்து முழுமையாக தெரிந்து கொள்ள இன்னும் ஓரிரு நாட்கள் பொறுத்திருப்போம்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Motorola Moto M is the upcoming smartphone from the Lenovo-owned company. The latest leaks suggest that the smartphone won't come with stock Android.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X