Home
Mobile

முரட்டு அம்சங்களுடன் புது Motorola போன்.. 12GB ரேம், 6720mAh பேட்டரி, 120Hz டிஸ்பிளே, 50MP கேமரா.. என்ன மாடல்?

மோட்டோரோலா (Motorola) நிறுவனமானது கடந்த 2021 ஆம் ஆண்டில் அதன் மோட்டோ ஜி100 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தி இருந்தது. அதனுடைய ப்ரோ வேரியண்ட் ஆனது கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் கழித்து.. இன்று (ஜூலை 3, 2025) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அது மோட்டோ ஜி100 ப்ரோ (Moto G100 Pro) ஸ்மார்ட்போனாகும்.

மோட்டோ ஜி100 ப்ரோ ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 1.5கே ரெசல்யூஷன் (2712 x 1220 பிக்சல்ஸ்), 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 4500 நிட்ஸ் வரை பீக் ப்ரைட்னஸ் மற்றும் கொரில்லா கிளாஸ் 7ஐ ப்ரொடெக்ஷன் உடனான 6.67-இன்ச் பிளாட் AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

முரட்டு அம்சங்களுடன் புது Motorola போன்.. என்ன மாடல்?

ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான மோட்டோரோலாவின் ஹலோ யுஐ ஸ்கின் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 சிப்செட்டால் இயக்கப்படுகிறது. இது 3 வகையான ரேம் + ஸ்டோரேஜ் விருப்பங்களில் வெளியாகியுள்ளது: 8ஜிபி மற்றும் 12ஜிபி - மற்றும் 256 ஜிபி அல்லது 512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள்.

கேமராக்களை பொறுத்தவரை இது 32 மெகாபிக்சல் செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது. பின்புறத்தில் இது 50 மெகாபிக்சல் சோனி LYT-600 ப்ரைமரி சென்சார் உடனான டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. இதில் 8-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸும் இணைக்கப்பட்டுள்ளது. பேட்டரியை பொறுத்தவரை இது 30W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் ஒரு பெரிய 6,720mAh பேட்டரியை கொண்டுள்ளது

கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போனில் இன்-ஸ்க்ரீன் பிங்கர் பிரிண்ட் சென்சாரும் உள்ளது. கூடவே இது டால்பி அட்மாஸால் இயக்கப்படும் டூயல் ஸ்பீக்கர்களையும் கொண்டுள்ளது. மேலும் நீடித்து நிலைக்கும் வகையில், இந்த ஸ்மார்ட்போன் IP68 மற்றும் IP69 நீர் மற்றும் தூசி எதிர்ப்பு ரேடிங்களையும் கொண்டுள்ளது மற்றும் MIL-STD 810H சான்றிதழையும் பெற்றுள்ளது. கடைசியாக இது அளவீட்டில் 161.21 x 74.74 x 7.87 மிமீ மற்றும் எடையில் 198 கிராம் உள்ளது.

மோட்டோ ஜி100 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: சீனாவில் மோட்டோ ஜி100 ப்ரோ ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆனது ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படின் தோராயமாக ரூ.16,650 க்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

இதேபோல 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படின் தோராயமாக ரூ.17900 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடைசியாக உள்ள 12 ஜிபி ரேம் + 512 ஜிபி ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படின் தோராயமாக ரூ.20480 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 4 கலர் ஆப்ஷன்களில் வெளியாகியுள்ளது: பைன் ஸ்மோக் ப்ளூ, டன்ட்ரா ப்ளூ, கிளவுட்ஸ் இங்க் பிளாக் மற்றும் சில்க் பர்பிள்.

சீனாவில் மோட்டோ ஜி100 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆக அறிமுகம்ஸ் செய்யப்பட்டுள்ள மாடல் உலகளவில் மோட்டோ ஜி86 என்கிற பெயரின் கீழ் அறிமுகமான மாடல் ஆகும். 6720எம்ஏஎச் பேட்டரியுடன் கூடிய வேரியண்ட் - மோட்டோ ஜி86 பவர் என்றும், சற்றே சிறிய 5200எம்ஏஎச் பேட்டரியுடன் கூடிய வேரியண்ட் மோட்டோ ஜி86 என்றும் அழைக்கப்படுகிறது.

முரட்டு அம்சங்களுடன் புது Motorola போன்.. என்ன மாடல்?

ஜூலை 9 அன்று இந்தியாவில் அறிமுகமாகும் மோட்டோ ஜி96 5ஜி ஸ்மார்ட்போன்: இந்தியாவில் மோட்டோ ஜி96 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது வருகிற ஜூலை 9 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அறிமுமாகும் என்று மோட்டோரோலா நிறுவனம் ஒரு எக்ஸ் தள பதிவின் வழியாக உறுதிப்படுத்தியுள்ளது.

மோட்டோ ஜி96 5ஜி ஸ்மார்ட்போன் என்ன விலைக்கு வரும்? பெரும்பாலும் இந்தியாவில் இது ரூ.20,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படவே அதிக வாய்ப்புள்ளது. ஆனால் சில லீக்ஸ் தகவல்கள் மோட்டோ ஜி96 5ஜி ஸ்மார்ட்போனின் 12GB ரேம் + 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் மாடலின் விலை சுமார் ரூ.22,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்கின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Moto G100 Pro With 6720mAh Battery Launched Check Out Price Specifications Features
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X