Moto G96 5G விலை இவ்ளோ தானா.. கண்ண மூடிட்டு வாங்க 5 காரணங்கள்.. July 9 வரை தாராளமா வெயிட் பண்ணலாம்!
எப்போது அறிமுகம்? என்னனென்ன அம்சங்கள்? என்ன விலைக்கு வரும்? என்று.. நாளுக்கு நாள் எதிர்பார்ப்புகளை எகிற வைத்த பல டீஸர்களுக்கு பிறகு.. மோட்டோரோலா நிறுவனம் அதன் மோட்டோ ஜி96 5ஜி (Moto G96 5G) ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுக தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் மோட்டோ ஜி96 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது வருகிற ஜூலை 9 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அறிமுமாகும் என்று மோட்டோரோலா நிறுவனம் ஒரு எக்ஸ் தள பதிவின் வழியாக உறுதிப்படுத்தி உள்ளது (அதே நாளில் தான் சாம்சங் கேலக்ஸி அன்பேக்டு 2025 நிகழ்வு நடக்க உள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது).

ஜூலை 9 அறிமுக தேதியோடு சேர்த்து மோட்டோ ஜி96 5ஜி ஸ்மார்ட்போனின் சில முக்கிய அம்சங்கள், கலர் ஆப்ஷன்கள் மற்றும் விற்பனை விவரங்களும் வெளிப்படுத்தப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் ஜூலை 9 ஆம் தேதி வரை காத்திருந்து ஏன் மோட்டோ ஜி96 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கலாம் என்பதற்கான 5 காரணங்கள் இதோ:
முதல் காரணம் - 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்பிளே: பிளாட் ஆன டிஸ்பிளேக்களை கொண்ட 2025 ஜி-சீரிஸ் மாடல்களை போலல்லாமல், மோட்டோ ஜி96 5ஜி ஸ்மார்ட்போனானது 6.67-இன்ச் கர்வ்டு-எட்ஜ் பிஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 10-பிட் கலர், 1600 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் கொரில்லா கிளாஸ் 5 ப்ரொடெக்ஷனை ஆதரிக்கிறது. இந்த விலைப்பிரிவில் இது மிகவும் அட்வான்ஸ்டு ஆன டிஸ்பிளேவாகும்.

இரண்டாவது காரணம் - அல்ட்ரா-பிரீமியம் டிசைன்: மோட்டோ ஜி96 5ஜி ஸ்மார்ட்போனானது லெதர்-டெக்ச்சர்டு பேக் பேனலை கொண்டுள்ளது. இது மிகவும் க்ளீன் ஆன மற்றும் பிரீமியம் ஆன லுக்கை அளிக்கிறது. முன்பக்கத்தில் உள்ள கர்வ்டு டிஸ்பிளே ரிச் பீலிங்கை வழங்குகிறது.
இந்த ஸ்மார்ட்போன் நான்கு கலர்களில் வாங்க கிடைக்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது: க்ரீன், லைட் ப்ளூ, ப்ளூ மற்றும் பிங்க். ஜூலை 9 அறிமுகத்திற்கு பின்னர் இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் வழியாக விற்பனைக்கு வரும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மூன்றாவது காரணம் - 50எம்பி ஓஐஎஸ்-எனேபிள்டு கேமரா: மோட்டோ ஜி96 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரவு உடனான 50-மெகாபிக்சல் பிரைமரி கேமராவை கொண்டுள்ளது. இது சோனி LYT-700C சென்சாரை பயன்படுத்துகிறது, இது பொதுவாக மிட்-ரேன்ஜ் முதல் அப்பர் மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன்களில் காணப்படும் ரசென்சார் ஆகும்.
நான்காவது காரணம் - ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜெனரல் 2 சிப்செட்: மோட்டோ ஜி96 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜெனன் 2 சிப்செட்டால் இயக்கப்படுகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகமான மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸிலும் இதே சிப்செட் தான் உள்ளது. இது 7-சீரிஸ் வரிசையில் லேட்டஸ்ட் சிப்செட் ஆக இல்லாவிட்டாலும் இன்னுமும் டீசன்ட் ஆன பெர்பார்மென்ஸ்-ஐ வழங்குகிறது மற்றும் ஸ்மார்ட்போனை பட்ஜெட் விலைப்பிரிவிற்குள் தக்கவைக்க உதவுகிறது.

ஐந்தாவது காரணம் - ஐபி68 நீர் மற்றும் தூசி எதிர்ப்பு: கடைசியாக மோட்டோ ஜி96 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஐபி68 ரேட்டிங்கை கொண்டுள்ளது. அதாவது இது தூசிக்கு எதிராக செயல்படும் மற்றும் நீர் எதிர்ப்பையும் வழங்கும். ஐபி68ரேட்டிங் என்றால் இந்த ஸ்மார்ட்போன் 1.5 மீட்டர் நீரில் மூழ்கும்போது 30 நிமிடங்கள் தாக்குப்பிடிக்கும் திறன் கொண்டதாக இருக்கும்.
மோட்டோ ஜி96 5ஜி ஸ்மார்ட்போன் என்ன விலைக்கு வரும்? பெரும்பாலும் இந்தியாவில் இது ரூ.20,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படவே அதிக வாய்ப்புள்ளது. ஆனால் சில லீக்ஸ் தகவல்கள் மோட்டோ ஜி96 5ஜி ஸ்மார்ட்போனின் 12GB ரேம் + 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் மாடலின் விலை சுமார் ரூ.22,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்கின்றன.


Click it and Unblock the Notifications








