வாங்குனா இப்படி ஒரு 5G போனை வாங்கணும்.. சீக்கிரம் விற்பனைக்கு கொண்டு வாங்க! கலக்கும் Samsung.!
சாம்சங் நிறுவனம் விரைவில் இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த போனின் அம்சங்கள் புளூடூத் SIG தரவுத்தளத்தில் காணப்பட்டது. அதேபோல் இதன் மாடல் எண்கள் கூட வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

5ஜி ஆதரவு
5ஜி ஆதரவுடன் தனித்துவமான அம்சங்களுடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ14 ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. சரி இப்போது ஆன்லைனில் கசிந்த சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

6.8-இன்ச் எஇல்சிடி டிஸ்பிளே
இணையத்தில் கசிந்த தகவலின்படி, சாம்சங் கேலக்ஸி ஏ14 ஸ்மார்ட்போன் ஆனது 6.8-இன்ச் எஇல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 2408 x 1080 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா
குறிப்பாக சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி போன் ஆனது 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களுடன் வெளிவரும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதேபோல் செல்பி கேமராவிற்கான வாட்டர் டிராப் நாச்சைக் கொண்டிருக்கிறது இந்த சாம்சங் போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவுடன் இந்த போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

ஹீலியோ ஜி80 சிப்செட்
சாம்சங் கேலக்ஸி ஏ14 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி80 சிப்செட் வசதி இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த சாம்சங் 5ஜி போன் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இதன் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி போன் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டு வெளிவரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டிகார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

5000 எம்ஏஎச் பேட்டரி
அதேபோல் சாம்சங் கேலக்ஸி ஏ14 போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த சாம்சங் போன். மேலும் தனித்துவமான வடிவமைப்பில் அறிமுகமாகும் இந்த சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன்.

டூயல் சிம், 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், புளூடூத், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ14 ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இந்த போன் இந்தியாவில் ரூ.20,000-க்குள் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications