அப்பவே சொன்னோம் கேட்டீங்களா? ரொம்ப மலிவு விலை.. மொத்த எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் Samsung போன்!

|

Samsung Galaxy M04 ஆனது Galaxy A04e இன் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த Galaxy A04e ஸ்மார்ட்போனானது இந்தியாவைத் தவிர வேறு சில சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட்டது. இதே ஸ்மார்ட்போன் இந்தியாவில் கேலக்ஸி எம்04 என விரைவில் அறிமுகமாக இருக்கிறது. இதில் என்ன சுவாரஸ்யம் என்று பார்க்கலாம்.

கேலக்ஸி எம்04 ஸ்மார்ட்போன்

கேலக்ஸி எம்04 ஸ்மார்ட்போன்

சாம்சங் நிறுவனம் தரமான மலிவு விலை ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. மலிவு விலை ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கப்படும் அனைத்து அம்சங்களும் மிகுதியாகவே இதில் இருக்கும் என முன்னதாகவே தெரிவித்திருந்தோம். அதன்படி தற்போது கேலக்ஸி எம்04 ஸ்மார்ட்போன் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து வெளியான தகவலை பார்க்கலாம்.

Samsung Galaxy M04 மற்றும் Galaxy A04e

Samsung Galaxy M04 மற்றும் Galaxy A04e

சாம்சங் நிறுவனம் Samsung Galaxy M04க்கான பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. Samsung Galaxy M04 ஆனது Galaxy A04e இன் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

மலிவு விலை ஸ்மார்ட்போன்

மலிவு விலை ஸ்மார்ட்போன்

ஏ04இ முன்னதாகவே அறிமுகமான காரணத்தால் அதன் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக வெளியாகும் கேலக்ஸி எம்04 இன் அம்சங்களை ஓரளவு கணிக்க முடிகிறது. Galaxy M04 ஆனது மலிவு விலை ஸ்மார்ட்போனாக அறிமுகமாகும் என்பது ஏறத்தாழ முடிவு செய்யப்பட்டு விட்டது.

பக்கா மலிவு விலை ஸ்மார்ட்போன்

பக்கா மலிவு விலை ஸ்மார்ட்போன்

சாம்சங் நிறுவனம் வரும் மாதங்களில் Samsung Galaxy M04 ஸ்மார்ட்போனை வெளியிடும் என தகவல்கள் தெரிவிக்கிறது. சாம்சங் கேலக்ஸி எம்04 ஆனது கேலக்ஸி ஏ04இ இன் மறுபெயரிடப்பட்ட பதிப்பு என MySmartPrice இன் அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவைத் தவிர வேறு சில சந்தைகளில் முன்னதாக அறிமுகப்படுத்தப்பட்டது. இது மலிவு விலை ஸ்மார்ட்போனாகும். எனவே Galaxy M04-ம் பக்கா மலிவு விலை ஸ்மார்ட்போனாக இருக்கும் என்பது எளிதாக யூகிக்க முடிகிறது.

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

Samsung Galaxy M04 ஆனது 4ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 எஸ்ஓசி சிப்செட் மூலம் இயக்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது. ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் பொறுத்தவரை, கேலக்ஸி எம்04 ஆனது 6.5 இன்ச் எச்டி+ எல்சிடி டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும் எனவும் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.

ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்

ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்

10 வாட்ஸ் சார்ஜிங் அடாப்டர் இந்த ஸ்மார்ட்போன் பாக்ஸ் இல் இடம்பெறும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான OneUI கோர் 4.1 மூலம் இயக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

கேமரா விவரங்கள்

கேமரா விவரங்கள்

ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்களை பொறுத்தவரையில் இதில் டூயல் ரியர் கேமரா இடம்பெறும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் கேமரா இதுவாக இருக்கும் என்று வெளியான தகவலை வைத்தே கணித்துவிடலாம் இதன் விலை என்னவென்று. இந்த ஸ்மார்ட்போனில் 13 எம்பி பிரதான கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் கேமரா இடம்பெறும் என கூறப்படுகிறது. ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 5 எம்பி சென்சார் இடம்பெறும் என தகவல்கள் கூறுகிறது.

கடுமையான போட்டி

கடுமையான போட்டி

சாம்சங் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக Samsung Galaxy M04 குறித்த எந்தவித தகவலையும் வெளியிடவில்லை. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என கூறப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் பக்கா மலிவு விலை ஸ்மார்ட்போனாக இருக்கும் எனவும் மலிவு விலைப் பிரிவில் உள்ள ஸ்மார்ட்போன்களுக்கு கடுமையான போட்டியை இது ஏற்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Best Low Price Smartphone Expected From Samsung: Galaxy M04 to be launched in India soon!

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X