வாய்ஸ் பவர் ஏக்டிவேட் கேமராவுடன் எல்ஜி ஸ்மார்ட்போன்!

இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய தொழில் நுட்ப அம்சமே 13 மெகா பிக்ஸல் கேமரா தான். புதிய அல்ட்ரா ஸ்லிம் வசதி கொண்ட கேமராவினை இந்த ஸ்மார்ட்போன் வழங்கும். அதோடு இதில் வாய்ஸ்-ஏக்டிவேட் பவர் வசதியும் வழங்கப்படும். அதாவது இந்த கேமராவினை பேசுவதன் மூலமும் இயக்க முடியும்.
இதன் திரையின் அளவும் அதிகமாக தான் உள்ளது. இது 4.7 இஞ்ச் திரை வசதி கொண்டது. இதனால் எந்த வித சிரமமும் இல்லாமல் தெளிவான தகவல்களையும், வீடியோக்களையும் பார்க்க முடியும்.
ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதி கொண்டு இயங்கும் இந்த எல்ஜி ஆப்டிமஸ் ஜி ஸ்மார்ட்போனில், குவாட் கோர் பிராசஸரை வழங்கும். இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனின் தொழில் நுட்பங்கள் சிறப்பாக செயல்படும்.
ஆப்பிள் மற்றும் சாம்சங் போன்ற முன்நிலை வகிக்கும் நிறுவனங்கள் தங்களது மின்னணு சாதனங்களை அறிமுகம் செய்யும் அதே சமயத்தில் எல்ஜி நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கிறதென்றால், நிச்சயம் இந்த ஸ்மார்ட்போன் உயர்ந்த தொழில் நுட்ப வசதிகளை வழங்கும். இந்த ஸ்மார்ட்போன் பற்றிய விலை விவரம் இன்னும் சரிவர வெளியாகவில்லை. கூடிய விரைவில் இதன் விலை பற்றிய விவரத்தினையும் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications