அல்டரா ஸ்லிம் கேமராவுடன் எல்ஜி ஸ்மார்ட்போன்!

இந்த ஸ்மார்ட்போன் எல்டிஇ தொழில் நுட்பம் கொண்டதாக இருக்கும். அகன்ற திரை வசதியினை இந்த ஸ்மார்ட்போனில் பெறலாம். ட்ரூ எச்டி ஐபிஎஸ் + எல்சிடி திரை தொழில் நுட்பம் கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் 4.7 இஞ்ச் திரை 1280 X 768 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் வழங்கும்.
இதனால் தகவல்களை தெளிவாக பார்க்க முடியும். மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதி கொண்டதாக இருக்கும்.
மெமரி வசதியிலும் இந்த ஸ்மார்ட்போன் சிறப்பாக செயல்படும் என்று கருதப்படுகிறது. இதில் 32 ஜிபி வரை இந்த ஸ்மார்ட்போனில் இன்டர்னல் வசதியினை பயன்படுத்த முடியும்.
அதோடு இந்த ஸ்மார்ட்போன் பற்றி இன்னும் ஒரு சந்தோஷமான தகவல் என்னவென்றால் இதன் கேமரா. 13 மெகா பிக்ஸல் கொண்ட அல்ட்ரா ஸ்லிம் கேமாரவினை இந்த ஸ்மார்ட்போனில் பெறலாம்.
எல்ஜி நிறுவனத்தின் இந்த ஆப்டிமஸ் ஜி ஸ்மார்ட்போன், எச்டிசி ஸ்மார்ட்போனுக்கு சிறந்த போட்டியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
ஏனெனில் வருகிற 19ம் தேதி எச்டிசி நிறுவனம், விண்டோஸ்-8 இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போனை வழங்க இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இதனால் ஆன்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போனுக்கும், விண்டோஸ் இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போனுக்கும் இடையில் சரிசமமான போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications