Home
Mobile

இந்த விலை ஸ்மார்ட்போன் நம்மூரில் எடுபடுமா? கிஸ்பாட் சிறப்பு பார்வை

By Super

இந்த விலை ஸ்மார்ட்போன் நம்மூரில் எடுபடுமா? கிஸ்பாட் சிறப்பு பார்வை
எப்போதும் உயர்ந்த தொழில் நுட்பங்களை கொடுத்து வாடிக்கையாளர்களின் மத்தியில் அதிக வரவேற்பினை பெறும் எல்ஜி நிறுவனம் புதிய ஸ்மார்ட்போனை வழங்கி உள்ளது. எல்ஜி ஆப்டிமஸ் சோல் என்ற புதிய ஸ்மார்ட்போனின் தொழில் நுட்ப விவரங்களை இங்கே விவரமாக காண்போம்.

இயங்குதளம்:

பொதுவாக எந்த ஸ்மார்ட்போனாக இருப்பினும் அதன் இயங்குதளம் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. எல்ஜி ஆப்டிமஸ் சோல்-730 என்ற இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 2.3.4 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும். இதில் ஆன்ட்ராய்டு

கூடுதல் தொழில் நுட்பம்:

இதில் சிறப்பாக வைபை தொழில் நுட்பத்தினையும் பயன்படுத்தலாம். இந்த ஸ்மார்ட்போன் 3ஜி நெட்வொர்க் வசதிக்கும் சிறப்பாக சப்போர்ட் செய்யும். புளூடூத், யூஎஸ்பி போன்ற சகல வசதிகளையும் இந்த ஸ்மார்ட்போன் வழங்கும். பொழுதுபோக்கு அம்சமாக இதில் மீடியா ப்ளேயர், எப்எம் ரேடியோ போன்ற வசதிகளை இந்த ஸ்மார்ட்போனில் பெற்று பயனடையலாம். ஆனால் இந்த ஸ்மார்ட்போனில் ப்ரீ-லோடடு கேமிங் சவுகரியம் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

பேட்டரி பேக்கப்:

எந்த ஒரு ஸ்மார்ட்போனிலும் இருக்கும் சிறப்பான தொழில் நுட்பத்திற்கு சரியான வகையில் சப்போர்ட் செய்யும் வகையில் பேட்டரி வசதியும் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த ஸ்மார்ட்போனில் 1,500 எம்ஏஎச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 3ஜி போன்ற தொழில் நுட்ப வசதிகளை பயன்படுத்தும் போது நீடித்து உழைக்கும்

தன்மை கொண்டது.

கிஸ்பாட் தீர்ப்பு:

இதன் திரை, துல்லியம், இலகு எடை, தொட்டவுடன் பட்டென பறக்கும் தொடுதிரை வசதி போன்றவையெல்லாம் இதன் சிறப்பு அம்சம். இதன் பேட்டரி தேவையான அளவு ஆற்றலை வழங்கும் என்றாலும், இன்னும் கொஞ்சம் அதிக ஆற்றல் கொண்ட பேட்டரியினை வழங்கி இருக்கலாம் என்றே தோன்றுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புற பேனலும் அவ்வளவு உறுதியானதாக இல்லை.

இவையெல்லாம் சிறிய குறைபாடாக தெரிகிறது. இந்த எல்ஜி சோல்-730 ஸ்மார்ட்போனை இந்தியாவில் ரூ.16,990 விலையில் பெறலாம். இந்த ஸ்மார்ட்போனின் விலையை பொருத்த வரை கொஞ்சம் காஸ்ட்லியாக தோன்றுகிறது. ஆனாலும் அதற்கேற்ற சிறப்பான தொழில் நுட்பத்தினையும் வழங்கும். ஆப்டிமஸ் வரிசை ஸ்மார்ட்போன்களில், இந்த ஆப்டிமஸ் சோல் இ-730 ஸ்மார்ட்போனும் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் என்று சொல்லலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X