ஏராளமான வசதிகளை வழங்க வரும் ஆப்டிமஸ் எல்-3 ஸ்மார்ட்போன்!

Posted By:

ஏராளமான வசதிகளை வழங்க வரும் ஆப்டிமஸ் எல்-3 ஸ்மார்ட்போன்!

பல புதிய தொழில் நுட்பங்களை கொடுத்து மொபைல் மார்கெட்டில் உயர்ந்து இருக்கும் எல்ஜி நிறுவனம் புதிய எல்-3 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. வாடிக்கையாளர்களின் மனம் கவர இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் கூகுள் ஆன்ட்ராய்டு வி2.3 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும். 240 X 320 பிக்ஸல் திரை துல்லியத்தினை கொடுக்கும் 3.2 இஞ்ச் திரையினை இந்த ஸ்மார்ட்போன் பெற்றுள்ளதாக தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உயர்ந்த தொழில் நுட்பங்களை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 3.15 மெகா பிக்ஸல் கேமராவினையும் தரும். இதனால் இனிய தருணங்களை மனதில் பதக்க சிற்பபான புகைப்படங்களையும், வீடியோ ரெக்கார்டிங் வசதியகளையும் இந்த ஸ்மார்ட்போனில் பெறலாம். 2048 X 1536 பிக்ஸல் சிறந்த துல்லியத்தையும் இந்த கேமரா வழங்கும்.

பல புதிய புதிய தொழில் நுட்பங்கள் வந்தாலும் 3ஜி வசதியினை பயன்படுத்தும் ஆர்வம் வாடிக்கையாளர்களிடம் குறையவில்லை. இதனால் எல்ஜி நிறுவனம் இந்த எல்-3 ஸ்மார்ட்போனில் 3ஜி நெட்வொர்க் வசதியையும் கொடுக்கும்.

இந்த ஸ்மார்ட்போனில் ஜிபிஆர்எஸ் மற்றும் எட்ஜ் தொழில் நுட்பத்தினையும் சிறப்பாக பயன்படுத்தலாம். கூடுதலாக இதில் ஏ2டிபி புளூடூத் வசதியும் உள்ளது. ஸ்டான்டர்டு லித்தியம் அயான் பேட்டரி, இந்த ஸ்மார்ட்போனில் உள்ள உயர்ந்த தொழில் நுட்பஙக்ளை பயன்படுத்த சிறந்த முறையில் சப்போர்ட் செய்கிறது.

பிரவுசிங் வசதியின் அவசியம் இப்போது எல்லா இடங்களிலும் முக்கியத்துவம் பெற்று வருகிறது. இதை மனதில் கொண்டு எல்ஜி நிறுவனம் இந்த ஸ்மார்ட்போன்களில் பரவுசிங் சவுகரியத்தினை பெற வைபை வசதியை வழங்கியுள்ளது. அதிகார பூர்வமாக வெளிவராத இந்த ஸ்மார்ட்போன் கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot