இந்த மாதம் வெளியாகும் ஆப்டிமஸ் எல்-7 ஸ்மார்ட்போன்!

மே மாதம் வெளியிடுவதாக முன்பே சில தகவல்கள் கசிந்தன. அதை வைத்து பார்க்கும் போது இந்த மாதம் எல்ஜி நிறுவனத்தின் எல்-7 ஸ்மார்ட்போன் வெளியாகும் என்று கூறலாம். புதிய எல்ஜி ஸ்மார்ட்போனுக்காக காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த தகவல் தேவையானதாக இருக்கும்.
வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிகம் வரவேற்பு பெற்று வருகிறது ஆப்டிமஸ் வரிசை ஸ்மார்ட்போன்கள். இதனால் ஆப்டிமஸ் குடும்பத்தை சேர்ந்த இந்த ஸ்மார்ட்போனை இயக்கும் போது நிச்சயம் வாடிக்கையாளர்களை பெருமையாக உணர வைக்கும்.
இதில் ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டமும் கொடுக்கப்பட்டுள்ளதால், நவீன வசதிகளுக்கு குறைவே இருக்காது என்று சொல்லலாம். 4.3 இஞ்ச் அகன்ற திரை வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் சிறப்பான கேமரா வசதியினையும் கொடுக்கும்.
அட்ரினோ கிராஃபிக்ஸ் சிப் வசதியும் இந்த ஸ்மார்ட்போன் வழங்கும். கூடுதலாக நிறைய தொழில் நுட்பங்களை கொடுக்க இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் இன்னும் இரண்டு வாரத்தில் வெளியாகும் என்பது வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி தான்.
இதன் விலையை இன்னும் நிர்ணயிக்க முடியவில்லை. இந்த எல்ஜி ஆப்டிமஸ் எல்-7 ஸ்மார்ட்போன் வெளி வந்த பின்பு தான், இதன் விலை பற்றி கூற முடியும்.


Click it and Unblock the Notifications