Home
Mobile

சியாமி மிநோட் 2 ஸ்மார்ட்போன் குறித்த முக்கிய தகவல்கள்

By Siva

சீன நிறுவனத்தின் சியாமி மாடல்கள் இந்தியாவில் பெரும் வரவேற்பை இதுவரை பெற்றுள்ள நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்படும் மாடல் சியாமி மிநோட் 2. வரும் செப்டம்பர் 14ஆம் தேதி இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகவுள்ளதாக செய்திகள் வெளிவந்த போதிலும் இன்னும் இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை.

சியாமி மிநோட் 2 ஸ்மார்ட்போன் குறித்த முக்கிய தகவல்கள்

இந்நிலையில் சீனாவின் பிரபல இணையதளம் ஒன்று இந்த போன் குறித்த பல அரிய தகவல்களை வெளியிட்டுள்ளது. இந்த தகவல்கள் இந்த ஸ்மார்ட்போனின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரிலையன்ஸ் ஜியோ இலவசம் : உண்மை இது தானா.??

இனி சியாமி மிநோட் 2 குறித்து லீக் ஆன தகவல்களை தற்போது பார்ப்போம்

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

சியாமி மிநோட் 2 அறிமுகமாகும் தேதி என்ன தெரியுமா?

சியாமி மிநோட் 2 அறிமுகமாகும் தேதி என்ன தெரியுமா?

சியாமி நிறுவனம் தனது புதிய தயாரிப்பான சியாமி மிநோட் 2வை அறிமுகப்படுத்தும் தேதியை இன்னும் ஓரிரு நாட்களில் அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளது. மேலும் அந்த அறிவிப்பில் இன்னும் இந்த போன் குறித்த முக்கிய தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக செப்டம்பர் 14-ல் வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

சியாமி மிநோட் 2-ல் எத்தனை மாடல்?

சியாமி மிநோட் 2-ல் எத்தனை மாடல்?

இந்த ஸ்மார்ட்போன் இரண்டு வகைகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறதூ. ஒன்று சியாமி ஃபிளாக்ஷி. இதில் ஸ்னாப்டிராகன் 821 பிராஸசர் மற்றும் 6 GB ரேம் கொண்டதாக இருக்கும் என்றும் இன்னொன்று ஸ்னாப்டிராகன் 820 பிராஸாசர் உடன் 4 GB ரேம் கொண்டது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

டிஸ்ப்ளே எப்படி இருக்கும் தெரியுமா?

டிஸ்ப்ளே எப்படி இருக்கும் தெரியுமா?

2K வளைவு டிஸ்ப்ளெ கொண்ட இந்த மாடல் ஸ்மார்ட்போனில் QHD 2560 x 1440 பிக்சல் மற்றும் 5.7- இன்ச் டிஸ்ப்ளேவும் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் சாம்சங் நிறுவனத்தின் அமோல்ட் பேனலும் இதில் அமைந்துள்ளது.

கேமிராவில் என்னென்ன அம்சங்கள் இருக்குது தெரியுமா?

கேமிராவில் என்னென்ன அம்சங்கள் இருக்குது தெரியுமா?

இதுவரை வெளிவந்துள்ள தகவலின்படி பார்த்தால் சியாமி மிநோட் 2 ஸ்மார்ட்போனில் 13 எம்பி சென்சார் பின்புற கேமிரா உள்ளது. மேலும் இதில் டூயல் கேமிரா வசதி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதெல்லாம் சரி, இந்த போன் என்ன விலை?

அதெல்லாம் சரி, இந்த போன் என்ன விலை?

இவ்வளவு வசதிகள் உள்ள சியாமி மிநோட் 2 ஸ்மார்ட்போன் இந்திய மதிப்பில் ரூ.30,000 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் உண்மையெனில் இதுதான் சியாமி நிறுவனத்தின் விலையுயர்ந்த ஸ்மார்ட்போனாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi Mi Note 2 is all set to be launched on September 14 and the device is alleged to come with a dual curved edge display as in the Samsung Galaxy Note 7. Take a look at the fresh set of specs and pricing of the smartphone as per the rumors from here.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X