ரிலையன்ஸ் ஜியோ இலவசம் : உண்மை இது தானா.??

By Meganathan
|

ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து இச்சேவைக் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு பதில் கிடைத்து வருகின்றது. இருந்தும் சில சந்தேகங்களுக்குத் தெளிவான பதில் கிடைக்காமலே இருக்கின்றது. ஜியோ அறிமுக விழாவில் பேசிய முகேஷ் அம்பானி அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் எல்லா நெட்வர்க்களுக்கும் இலவச வாய்ஸ் கால் மற்றும் எவ்வித ரோமிங் கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது எனத் தெரிவித்தார்.

எனினும் ஜியோ 4ஜி நெட்வர்க் என்பதால் அனைத்து வாய்ஸ் கால் அழைப்புகளும் வோல்டிஇ தொழில்நுட்பம் மூலம் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார். இங்கு தான் சந்தேகம் எழுந்துள்ளது.

கட்டணம்:

கட்டணம்:

ரிலையன்ஸ் ஜியோ மூலம் மேற்கொள்ளப்படும் அழைப்புகளுக்கு டேட்டாவில் குறைக்கப்படுகின்றது என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

பதில்:

பதில்:

இந்தச் சந்தேகத்திற்கு பதில் அளித்த ரிலையன்ஸ் அனைத்து வாய்ஸ் கால் சேவைகளும் இலவசமாகப் பெற முடியும். இதற்கான கட்டணமாக டேட்டாவில் எவ்வித பிடித்தமும் செய்யப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாய்ஸ் கால்:

வாய்ஸ் கால்:

இதனால் வாழ்நாள் முழுக்க அனைத்து வாய்ஸ் கால்களும் இலவசமாக வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் எவ்வித அச்சமும் கொள்ளத்தேவையில்லை.

வீடியோ கால்:

வீடியோ கால்:

வாய்ஸ் கால் சேவை மட்டுமில்லாமல் ஜியோ மூலம் வீடியோ கால்களும் வழங்கப்படுகின்றது. இதுவும் இலவசமாக வழங்கப்படுகின்றது. அனைத்து லோக்கல் மற்றும் எஸ்டிடி அழைப்புகளும் இலவசம் என்றாலும் வீடியோ கால்களுக்கு டேட்டா பிடித்தம் செய்யப்படும். இதனால் வீடியோ கால் மேற்கொள்ளும் போது டேட்டா குறையும்.

விளக்கம்:

விளக்கம்:

பயனர் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்ட போதிலும் ஜியோ சேவைகள் குறித்த விரிவான விளிக்கம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சிறப்பான சேவைகள் வழங்கப்பட்டாலும் வாடிக்கையாளர் சேவைகள் வழங்குவதில் அந்நிறுவனம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதே வல்லுநர்கள் கருத்தாக இருக்கின்றது.

Best Mobiles in India

English summary
Jio Confirms VoLTE Voice Calls Wont Count Against Your Data Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X