Home
Mobile

வெறும் ரூ.1599 என்ற நம்பமுடியதா விலையில் அறிமுகமான லாவா பல்ஸ்! எதிர்பாரா அம்சம் இதுதான்!

லாவா நிறுவனம் இன்று தனது சமீபத்திய பியுச்சர் போன் மாடலான லாவா பல்ஸ் என்ற போனை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. இதய துடிப்பு மற்றும் இரத்த அழுத்த சென்சார் கொண்ட உலகின் முதல் தொலைபேசி பல்ஸ் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய போனை நம்பமுடியாத மலிவு விலையில் லாவா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

புதிய லாவா பல்ஸ் போன்

புதிய லாவா பல்ஸ் போன்

பிரமிக்க வைக்கும் ரோஸ் கோல்ட் நிறத்தில் வரும் இந்த புதிய லாவா பல்ஸ் போனில் இதய துடிப்பு மற்றும் இரத்த அழுத்த சென்சார்கள் கொடுக்கப்பட்டுள்ளது. லாவா பல்ஸின் சென்சார் அளவீடுகள் தற்போதைய மின்னணு இதயத் துடிப்பு மற்றும் டிஜிட்டல் சாதனங்களை அளவிடும் இரத்த அழுத்தத்தைப் போன்ற துல்லியத்தைக் கொண்டுள்ளன என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

துடிப்பு ஸ்கேனர்

துடிப்பு ஸ்கேனர்

இந்த தனித்துவமான பியூச்சர் போன் அதன் பயனருக்கு சில நொடிகளில் அவர்களின் இதய ஆரோக்கியத்தைத் துல்லியமாக அளவிட்டு காட்டுகிறது. பயனர் வெறுமனே விரல் நுனியை 'துடிப்பு ஸ்கேனரில்' வைத்தால் மட்டும் போதுமானது, அவர்களின் இரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பை உடனடியாக திரையில் காண்பிக்கப்படும். எதிர்கால குறிப்புகளுக்காக இந்தத் தரவை போனில் சேமித்துக்கொள்ளவும் பல்ஸ் அனுமதிக்கிறது.
அமேசானில் பவர்பேங்க் ஆர்டர் செய்தவருக்கு கிடைத்த மிகப்பெரிய கிஃப்ட்.!

நம்பமுடியாத விலை

நம்பமுடியாத விலை

உங்களுடைய இதய துடிப்பு மற்றும் இரத்த அழுத்த தரவுகளை நீங்கள் செய்திகளின் மூலம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் லாவா பல்ஸ் போன் அனுமதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கைபேசி தற்பொழுது அமேசான், பிளிப்கார்ட் மற்றும் நாட்டின் 1000 திற்கும் அதிகமான சில்லறை கடைகள் மற்றும் ஆன்லைனில் கடைகளிலும் கிடைக்கிறது. இப்படி சிறப்பான அம்சங்களுடன் வரும் தொலைபேசி வெறும் ரூ .1599 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

லாவா பல்ஸ் சிறப்பம்சம்

லாவா பல்ஸ் சிறப்பம்சம்

  • 2.4' இன்ச் டிஸ்ப்ளே
  • ஸ்டீரியோ ஒலியை ஆதரிக்கிறது
  • 32 எம்.பி ரேம் மற்றும் 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய ஸ்டோரேஜ்
  • பாலிகார்பனேட் பாடி வடிவமைப்பு
  • மிலிட்டரி கிரேடு சான்றளிக்கப்பட்ட போன்
  • கேமரா
    • கேமரா
    • நம்பர் டாக்கர்,
    • தொடர்புகளைச் சேமிப்பதற்கான புகைப்பட ஐகான்
    • ரெக்கார்டிங் கொண்ட வயர்லெஸ் எஃப்எம்
    • இரட்டை சிம் ஆதரவு
    • 1800 mAh பேட்டரி
    • 1 ஆண்டு ரீபிளேஸ்மென்ட் உத்தரவாதம்

Best Mobiles in India

English summary
Lava Pulse feature phone launched with Heart rate and Blood Pressure sensor at cheap price : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X