அமேசானில் பவர்பேங்க் ஆர்டர் செய்தவருக்கு கிடைத்த மிகப்பெரிய கிஃப்ட்.!
அமேசான் தளத்தை இந்தியாவில் அதிகளவு மக்கள் பயன்படுத்துகிறார், குறிப்பாக வீட்டு உபயோக பொருட்கள் முதல் ஸ்மார்ட்போன், லேப்டாப் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களை விற்பனை செய்துவருகிறது அமேசான் வலைதளம்.

இந்நிலையில் கேரளாவில் ரூ.1400-க்கு ஆர்டர் செய்யப்பட்ட பவர் பேங்கிற்கு பதிலாக ரூ.8000 மதிப்பிலான மொபைல் டெலிவரிசெய்யப்பட்டதோடு மட்டுமல்லாமல் ஒரு இன்ப அதிர்ச்சியையும் அளித்துள்ளது அமேசான் நிறுவனம்.

கேரளா மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர் நபில் நஷீத், இவர் கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி அன்று அமேசான் தளம் மூலம் ரூ.1400 மதிப்புடைய பவர் பேங்க் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். பின்பு நபில் நஷீத்திற்கு கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினம் அன்று அமேசான் டெலிவரி செய்த பொருளை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அதாவது ரூ.1400 மதிப்புடைய பவர் பேங்க்கிற்கு பதிலாக நபில் நஷீத்திற்கு ரூ.8000 மதிப்புடைய redmi 8A Dual எனும் மொபைலை தவறுதலாக டெலிவரி செய்யப்பட்டுள்ளது. ஆனால் வந்தவரை லாபம் என நினைக்காமல் நபில் தனது ட்விட்டர் வழியாக அமேசான் டேக் செய்து, சுதந்திர தினத்தன்று எனக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தியதற்கு நன்றி,நான் பவர் பேங்க் தான் ஆர்டர் செய்தேன், ஆனால் எனக்கு ரெட்மி மொபைல் வந்துள்ளது, இதை நான் என்ற செய்ய வேண்டும் சொல்லுங்கள் என்று பதிவிட்டுள்ளார்

இதை பார்த்த அமேசான் நிறுவனம் நீங்களே அதை உபயோகப்படுத்துங்கள் அல்லாது சுதந்திர தினத்திற்கு யாருக்காவது தானம் செய்யுங்கள் என பதிலளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சியோமி ரெட்மி 8ஏ டூயல் ஸ்மார்ட்போன் மாடல் 6.22-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1600 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது. சியோமி ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 439சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன்வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

இந்த ஸ்மார்ட்போனில் 2ஜிபி/3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் மிட்நைட் கிரே, சீ ப்ளூ மற்றும் ஸ்கை வைட் போன்ற வண்ண விருப்பங்களில் கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன, மேலும் 8எம்பி செல்பீ கேமரா,எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவுஎன பல்வேறு அம்சங்கள் இவற்றுள் அடக்கம். குறிப்பாக கூகுள் லென்ஸ் ஆதரவைக் கொண்டுள்ளன இந்த ஸ்மார்ட்போனின் கேமராக்கள்.

சியோமி ரெட்மி 8ஏ டூயல் ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 18வாட் சார்ஜிங் ஆதரவு, யுஎஸ்பி டைப்-சி போர்ட், வைஃபை, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.


Click it and Unblock the Notifications