கோடாக் நிறுவனத்தின் 21 MP கேமிரா ஸ்மார்ட்போன் ஏக்ட்ராவின் 5 சிறப்பு அம்சங்கள்
உலகம் முழுவதும் கொடி கட்டி பறக்கும் கேமிரா நிறுவனமான கோடாக், முதன்முதலாக ஸ்மார்ட்போன் சந்தையில் கடந்த ஆண்டு இறங்கியது. இந்நிறுவனத்தின் முதல் மாடலானான IM5 மாடல் ஸ்மார்ட்போன் சந்தையில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

இருப்பினும் மனம் தளராத இந்நிறுஅனம் தற்போது மற்றொரு மாடலாக ஏக்ட்ரா (Ektra) என்ற மாடல் போனை வெளியிடவில்லை. இந்த மாடலின் கேமிரா திறன் 21 MP என்பது இதன் சிறப்பு ஆகும்,.
பாதியாக மடிக்கும் திறன் கொண்ட போனினை தயாரிக்கும் ஆப்பிள்..
கோடாக் நிறுவனம் கடந்த 1941ஆம் ஆண்டு வெளியிட்ட கேமிரா மாடலின் பெயர்தான் இந்த ஏக்ட்ரா. அதே பெயரில் தற்போது செண்டிமெண்ட்டாக ஸ்மார்ட்போனை இந்நிறுவனம் வெளியிடுகிறது. பழைய பெயரில் புதிய தலைமுறை மக்களுக்காக வெளீயிடும் இந்த ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களுக்கு பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒன் ப்ள்ஸ் 3 மாடலில் எதிர்நோக்கும் பிரச்சனைகளும் அதற்குரிய தீர்வுகளும்
இந்நிலையில் இந்த ஏக்ட்ரா ஸ்மார்ட்போன் மாடலில் என்னென்ன சிறப்பு அம்சங்கள் இருக்கின்றன என்பதை பார்ப்போமா?

ஆச்சரியப்பட வைக்கும் 21 MP கேமிரா
கோடாக் நிறுவனம் என்றாலே எல்லோருக்கும் கேமிராதான் ஞாபகம் வரும் என்பதால் இந்த ஏக்ட்ரா மாடலில் கேமிராவை அதிசயிக்கும் வகையில் வைக்கப்பட்டுள்ளது. 21 MP கேமிராவில் ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டெபிலைஷன், ஆட்டோ ஃபோகஸ், டூயல் டோன் LED ப்ளாஷ் மற்றும் 4K வீடியோ சப்போர்ட் ஆகிய சிறப்பு அம்சங்கள் உள்ளது. அதுமட்டுமின்றி 13 MP செல்பி கேமிராவும் இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பல்திறன் கொண்ட DSLR மோட்:
கோடாக் ஏக்ட்ரா ஸ்மார்ட்போனில் மேற்கண்ட கேமிரா அம்சங்கள் இருப்பதோடு கேமிராவின் தரத்தை மேம்படுத்த ஆப்ஸ்களும் உள்ளது. ஆட்டோ மோட், போர்ட்ரியாட், ஸ்போர்ட்ஸ், நைட் மோட், HDR, லேண்ட்ஸ்கேப் போன்ற பல்வேறு DSLR இதில் உள்ளது என்பது சிறப்பு அம்சங்கள் ஆகும்
புதிய ஸ்மார்வாட்ச் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

கேமிராவும் ஸ்மார்ட்போனின் அழகும்
பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் கேமிரா இருக்கும் இடம் சற்று புடைப்பாக இருப்பதால் ஸ்மார்ட்போனின் அழகே கெட்டுவிடும் வகையில் இருக்கும். ஆனால் இந்த கோடாக் ஏக்ட்ரா மாடலில் கேமிரா இருப்பதே தெரியாத அளவுக்கு மிக அழகாக இருக்கும் என்பது இதன் மற்றொரு சிறப்பு அம்சம்

கோடாக் ஏக்ட்ராவின் டிசைன் எப்படி?
கேமிரா மூலமே அழகு பெற்ற இந்த மாடலின் மற்ற அழகை பற்றி சொல்லவே தேவையில்லை. மெட்டல் மற்றும் பிளாஸ்டிக்கினால் ஆன இந்த மாடலின் சைட் லுக் மிகவும் அழகிய வடிவத்துடன் உள்ளது. மேலும் இந்த மாடலின் அடியில் லேசான வளைவு இதன் அழகை மேலும் மெருகூட்டுகிறது.

ஹார்ட்வேர் அம்சங்கள் எப்படி இருக்குது?
கோடாக் ஏக்ட்ரா மாடலில் 5 இன்ஸ் HD டிஸ்ப்ளே அமைந்துளது. மேலும் இதில் 2.3GHz ஹெலியோ X20 பிராஸசர் மற்றும் 3GB ரேம் உள்ளது. மேலும் இதன் இண்டர்னல் ஸ்டோரேஜ் 32GB வரை நீட்டித்து கொள்ளலாம். மேலும் 3,000mAh பேட்டரியும் இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்


Click it and Unblock the Notifications