பாதியாக மடிக்கும் திறன் கொண்ட போனினை தயாரிக்கும் ஆப்பிள்..

Written By:

கைகளில் வளையல் போன்று வளைந்து கொடுக்கும் புதிய வகை ஸ்மார்ட்போன்களைத் தயாரிக்க ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்திருக்கின்றது. அதன் படி வளையும் திறன் கொண்ட தொழில்நுட்பத்திற்கான காப்புரிமைகள் ஆப்பிள் நிறுவனம் சார்பில் பெறப்பட்டுள்ளது.

ஆப்பிள் பெற்றிருக்கும் புதிய காப்புரிமைகளை வைத்துப் பார்க்கும் போது விரைவில் மடிக்கும் தன்மை கொண்ட கருவி சார்ந்த தகவல்களை எதிர்பார்க்கலாம். தற்சமயம் இந்தக் காப்புரிமை குறித்து வெளியாகியிருக்கும் தகவல்களை மட்டும் இங்குத் தொகுத்திருக்கின்றோம்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
காப்புரிமை

காப்புரிமை

மடிக்கும் தன்மை கொண்ட ஸ்மார்ட்போன்களைத் தயாரிக்கும் காப்புரிமைகளை ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் (இந்த வாரம்) பெற்றிருப்பது தெரியவந்திருக்கின்றது.

பொருட்கள்

பொருட்கள்

கிளாஸ், செராமிக், ஃபைபர், அலுமினியம் அல்லது பிளாஸ்டிக் மூலம் இந்தக் கருவி தயாரிக்கப்படலாம். இதில் இருக்கும் கார்பன் நானோ டியூப்ஸ் கருவியின் வளையும் டிஸ்ப்ளேவினை இணைக்கும் பாகமாக இருக்கும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வளையும் திறன்

வளையும் திறன்

இந்தக் கருவியானது வளைக்கப்படும் போதும் எவ்வித சேதமும் ஏற்படாதவாறு இருக்கும். இவை உண்மையில் வளையும் கருவி என்பதால் ஆப்பிள் ஐபோன் 6 பிளஸ் கருவி போன்று இவை இருக்காது.

கார்பன்

கார்பன்

கன்டக்டிவ் கார்பன் நானோ டியூப்கள் பிளாஸ்டிக் பாலிமரினுள் பூட்டப்படும் என்பதால் சிக்னல் பாதைகளுக்கு எவ்வித இடையூறுமின்றிக் கருவியை வளைக்க முடியும். இந்தக் காப்புரிமை கருவியுடன் சேர்ந்து பல்வேறு அம்சங்களையும் வழங்கும்.

அம்சங்கள்

அம்சங்கள்

கார்பன் நானோ டியூப் அமைப்புகளுக்குள் கருவியினை இயக்க வழி செய்யும் சர்க்யூட் கேபிள், சர்க்யூட் போர்டு, சென்சார் உள்ளிட்டவை பொருத்தப்படும். இவை கருவியினை வளைந்த நிலையிலும் தங்கு தடையின்றி இயக்க வழி செய்யும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
Apple plans to reinvent flip phone with a screen that literally folds in half
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot