வீட்டுக்கு 2 வாங்கலாமே.. ரூ.5199 க்கு டைனமிக் பார் டிஸ்பிளே, 8GB ரேம், டூயல் AI கேமரா, 5000mAh பேட்டரி!
பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளமானது மன்த் எண்ட் மொபைல் பெஸ்டிவல் சேல் என்கிற பெயரின் கீழ் புதிய சிறப்பு விற்பனையை நடத்தும் மறுகையில் அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளமானது எந்த ஸ்பெஷல் சேலும் இல்லாமலேயே பல்வேறு மொபைல் போன்கள் மீது அட்டகாசமான தள்ளுபடி மற்றும் சலுகைகளை வழங்குகிறது.
ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போன் ஆனது முன்னெப்போதும் இல்லாத அளவில், மிகவும் மலிவான விலைக்கு வாங்க கிடைக்கும் மறுபக்கம் ஐடெல் ஸேனோ 10 (Itel ZENO 10) ஸ்மார்ட்போனும் மிகவும் 'சீப்' ஆன விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஐடெல் ஸேனோ 10 மாடலின் அசல் விலை என்ன? ஆபர் விலை என்ன? இது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இதோ விவரங்கள்:

தற்போது அமேசான் இந்தியா வழியாக, ஐடெல் ஸேனோ 10 ஸ்மார்ட்போன் (3ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ்) ஆனது 10% நேரடி தள்ளுபடியை பெற்று, அதன் அசல் எம்ஆர்பி விலையான ரூ.6,699 க்கு பதிலாக ரூ.5,999 க்கு வாங்க கிடைக்கிறது. கூடுதலாக ரூ.500 கூப்பன் டிஸ்கவுண்ட் மற்றும் ரூ.1000 பேங்க் டிஸ்கவுண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக இந்த ஸ்மார்ட்போனின் இறுதி ஆபர் விலையை ரூ.4499 க்கு கொண்டுவர முடியும்.
ஐடெல் ஸேனோ 10 ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டூயல் சிம் ஆதரவுடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் கொண்டு இயங்குகிறது. டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.56-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. சமீபத்திய ஐடெல் ஸ்மார்ட்போன்களை போலவே, இதிலும் செல்பீ கேமரா கட்அவுட்டை சுற்றி பேட்டரி சார்ஜிங் விவரங்கள் மற்றும் இன்கம்மிங் கால் எச்சரிக்கைகள் போன்ற அறிவிப்புகளைக் காட்டும் டைனமிக் பார் அம்சம் முள்ளது
சிப்செட்டை பொறுத்தவரை இது 3ஜிபி மற்றும் 4ஜிபி ரேம் ஆப்ஷன்களுடன் குறிப்பிடப்படாத ஆக்டா-கோர் சிப்செட்டில் இயங்குகிறது. விர்ச்சுவல் ரேம் அம்சம் வழியாக பயன்படுத்தப்படாத ஸ்டோரேஜில் இருந்து, இந்த ஸ்மார்ட்போனின் ரேம்-ஐ 8ஜிபி வரை விரிவாக்க முடியும். கேமராக்களை பொறுத்தவரை ஏஐ ஆதரவு கொண்ட 8எம்பி டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது
முன்பக்கத்தில், செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்கு 5 மெகாபிக்சல் கேமரா உள்ளது. பட்ஜெட் விலை மாடலாக இருந்தாலும் கூட இந்த போனில் பிங்கர் பிரிண்ட் சென்சார் உள்ளது மற்றும் இது ஃபேஸ் அன்லாக் அம்சத்தையும் ஆதரிக்கிறது. கடைசியாக இது 5,000mAh பேட்டரியை பேக் செய்கிறது.
பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான அமேசான் இந்தியாவில் (Amazon India) ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போன் மீது முழுதாக ரூ.13,000 வரை டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது 23% நேரடி தள்ளுபடியை பெற்று அதன் அசல் எம்ஆர்பி விலையான ரூ.42,999 க்கு பதிலாக ரூ.32,999 க்கு வாங்க கிடக்கிறது.
இதோடு சேர்த்து தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளின் கிரெடிட் கார்டுகளில் (Credit Card) ரூ.3000 தள்ளுபடியும் கிடைக்கிறது. இப்படியாக ஒன்பிளஸ் 12ஆர் 5ஜி ஸ்மார்ட்போனின் இறுதி ஆபர் விலையை ரூ.29,999 க்கு கொண்டுவர முடியும். அதாவது முழுதாக ரூ.13,000 விலை குறைக்க முடியும். இந்த ஆபர் ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனின் அனைத்து 3 கலர் (சன்செட் ட்யுன் கலர் உட்பட) ஆப்ஷன்களில் கிடைக்கிறது
ஒன்பிளஸ் 12ஆர் 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: 6.78-இன்ச் அமோஎல்இடி ப்ரோ எக்ஸ்டிஆர் டிஸ்பிளே (1.5கே ரெசல்யூஷன், எல்டிபிஓ தொழில்நுட்பத்துடன் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 ப்ரொடெக்ஷன்), குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட், 50எம்பி மெயின் சென்சார் + 8எம்பி வைட்-ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், 5500mAh பேட்டரி மற்றும் 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்.


Click it and Unblock the Notifications