வேற லெவல் ஆபர்.. புதுசா 7300mAh போன் வந்ததும்.. பழைய iQOO மாடல் மீது முழுசா ரூ.9500 டிஸ்கவுண்ட்!
ஐக்யூ நிறுவனம் 7300mAh பேட்டரி கொண்ட புதிய ஐக்யூ இஸட்10 5ஜி (iQOO Z10 5G) ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதனுடன் ஐக்யூ இஸட்10எக்ஸ் 5ஜி (iQOO Z10x 5G) மாடலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், இவ்விரு ஸ்மார்ட்போன்களுக்கும் முன்பாக அறிமுகமான 2 ஐக்யூ ஸ்மார்ட்போன்கள் மீதும் ஆபர் அறிவிக்கப்பட்டுள்ளது
அவைகள் ஐக்யூ இஸட்9 5ஜி (iQOO Z9 5G) மற்றும் ஐக்யூ இஸட்9எக்ஸ் 5ஜி (iQOO Z9x 5G) மாடல்கள் ஆகும். ஐக்யூ இஸட்9எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் மீதான ஆபரை பற்றி முந்தைய கட்டுரையில் பார்த்தோம் (அதை படிக்க இங்கே கிளிக் செய்யவும்). இந்த கட்டுரையில் ஐக்யூ இஸட்9 5ஜி மீதான ஆபரை பற்றி பார்ப்போம்.

பிரபல இகாமர்ஸ் வலைத்தளம் ஆன அமேசான் இந்தியாவில் ஐக்யூ இஸட்9 5ஜி ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது அதன் அசல் எம்ஆர்பி வலையான ரூ.26,999 க்கு பதிலாக, 35% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.17,499 க்கு வாங்க கிடைக்கிறது. அதாவது ரூ.9500 விலை குறைப்பின் கீழ் வாங்க கிடைக்கிறது.
புதிய ஐக்யூ இஸட்10 5ஜி ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள்: பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி மாடலின் விலை ரூ.21,999 என்றும், 8ஜிபி ரேம் + 256ஜிபி மாடலின் விலை ரூ.23,999 என்றும் மற்றும் டாப்-எண்ட் 12ஜிபி ரேம் + 256ஜிபி மாடலின் விலை ரூ.25,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய ஐக்யூ இஸட்10 5ஜி ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் இந்தியாவில் ஐக்யூ இஸட்10 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது க்ளேசியர் சில்வர் (Glacier Silver) மற்றும் ஸ்டெல்லர் பிளாக் (Stellar Black) என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது .இது ஏப்ரல் 16 ஆம் தேதி முதல் அமேசான் இந்தியா (Amazon.in) மற்றும் ஐக்யூ இந்தியா இஸ்டோர் வழியாக விற்பனைக்கு வரும்.
ஐக்யூ இஸட்10 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்:
- டூயல் சிம் (நானோ + நானோ)
- 2392 x 1080 பிக்சல்ஸ், எச்டிஆர் 10 பிளஸ், 20:9 ஸ்க்ரீன் ரேஷியோ 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் வரையிலான எச்பிஎம், 5000 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ் உடனான 6.77-இன்ச் எப்எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளே
- அட்ரெனோ 720 ஜிபியு உடனான 2.5GHz வரையிலான ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 4என்எம் மொபைல் பிளாட்ஃபார்ம்
- 128ஜிபி / 256ஜிபி UFS 2.2 ஸ்டோரேஜ் உடனான 8ஜிபி / 12ஜிபி LPDDR4X ரேம்
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான பன்டச்ஓஎஸ் 15
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- சோனி IMX882 சென்சார், எப்/1.79 அபெர்க்ஷர் உடனான 50எம்பி ப்ரைமரி கேமரா
- எப்/2.4 அபெர்க்ஷர் உடனான 2எம்பி டெப்த் சென்சார்
- ஆரா லைட், 30 fps 4கே வீடியோ ரெக்கார்ட்
- எப்/2.0 அபெர்க்ஷர் உடனான 32MP செல்பீ கேமரா (30 fps 4கே வீடியோ ரெக்கார்ட்)
- 90W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 7300mAh பேட்டரி
- இன் டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார், இன்ப்ராரெட் சென்சார்
- யூஎஸ்பி டைப்-C ஆடியோ, பாட்டம்-போர்ட்டு ஸ்பீக்கர்
- இராணுவ தர MIL-STD-810H சான்றிதழ்
- தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான ஐபி65
- 5ஜி (SA / NSA)
- டூயல் 4ஜி வோல்ட்இ
- வைஃபை 6 802.11 ax
- ப்ளூடூத் 5.2
- ஜிபிஎஸ் / க்ளோனாஸ் / பெய்டு, யூஎஸ்பி டைப்-சி
- அளவீட்டில் 7.92மிமீ
- எடையில் 199 கிராம்


Click it and Unblock the Notifications








