Home
Mobile

அவசரமா Smartphone எதுவும் வாங்கிடாதீங்க.. இந்த டிசம்பரில் 7 புது போன்கள் வருது.. மாடல், விலை விவரங்கள்!

2024 ஆம் ஆண்டின் கடைசி மாதமான டிசம்பருக்கு வந்துவிட்டோம். ஸ்மார்ட்போன் சந்தையும் ஒரு பிரமாண்டமான இறுதிக்கட்டத்திற்கு தயாராகி வருகிறது. ஏனென்றால் கடந்த 11 மாதங்களாக பல பிராண்டுகள் தத்தம் சிறந்த ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தன. அதே போக்கு டிசம்பர் மாதத்திலும் நடக்கவுள்ளது. எந்தெந்த ஸ்மார்ட்போன்கள் (Upcoming Smartphone December 2024).. எந்த தேதியில் அறிமுகமாக உள்ளன? அவைகளின் விலை நிர்ணயம் எப்படியிருக்கும்?

01. ஐக்யூ 13 5ஜி (iQOO 13 5G): ஐக்யூ நிறுவனத்தின் இந்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் டிசம்பர் 3 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. முக்கிய அம்சங்களை பொறுத்தவரை இது 6.82-இன்ச் 2கே டிஸ்பிளே, 120W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 6,000mAh பேட்டரி, 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான IP68 மற்றும் IP69 ரேட்டிங் போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்யும்.

இந்த டிசம்பரில் 7 புது போன்கள் வருது.. மாடல், விலை விவரங்கள்!

ஐக்யூ 13 ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஐபி ரேம் + 256ஜிபி இன்டர்னல்ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.55,999 க்குள் அறிமுகம் செய்யப்படலாம். நினைவூட்டும் வண்ணம் இது ஐக்யூ 12 மாடலின் விலையை (ரூ.52,999) விட சற்றே அதிகமாகும். ஐக்யூ 13 -வின் சீன விலை நிர்ணயம் இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.47,200 முதல் தொடங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

02 & 03. விவோ எக்ஸ்200 சீரீஸ்: புகைப்பட ஆர்வலர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டி விட்டுருக்கும் விவோ எக்ஸ்200 சீரீஸ் ஆனது உயர்மட்ட கேமரா செயல்திறனை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீரிஸின் ப்ரோ மாடலில் 200MP சென்சார் இடம்பெறவுள்ளது. சரியான வெளியீட்டு தேதி அறிவிக்கப்படவில்லை என்றாலும் கூட, எப்படியும் இந்த டிசம்பரில் அறிமுகமாகிவிடும் எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, மீடியாடெக் டைமன்சிட்டி 9400 சிப்செட், 16ஜிபி வரையிலான ரேம் மற்றும் 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், வெண்ணிலா மாடலில் 50எம்பி சோனி கேமரா, ப்ரோ மாடலில் ஹை ரெசல்யூஷன் கொண்ட புகைப்படங்களுக்கான 200எம்பி சென்சார் ஆகியவைகளை கொண்டிருக்கும். விலையை பொறுத்தவரை, விவோ எக்ஸ்200 ரூ.60,000 - ரூ.70,000 குள்ளும், ப்ரோ மாடல் ரூ.70,000 - ரூ.80,000 குள்ளும் அறிமுகம் செய்யப்படலாம்.

04 & 05. டெக்னோ ஃபாண்டம் வி ஃபோல்ட் 2 (Tecno Phantom V Fold 2) மற்றும் டெக்னோ ஃபாண்டம் வி பிளிப் 2 (Tecno Phantom V Flip 2): டெக்னோ நிறுவனம், பட்ஜெட் விலையில் 2 புதிய போல்டபிள் போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளது டெக்னோ ஃபாண்டம் வி ஃபோல்ட் 2 ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 9000+ சிப்செட் மற்றும் 7.85-இன்ச் AMOLED மெயின் டிஸ்பிளேவும் வரும்.

மறுகையில் உள்ள டெக்னோ ஃபாண்டம் வி ஃபிளிப் 2 ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 8020 சிப்செட், 6.9-இன்ச் மெயின் டிஸ்பிளேவுடன் வரும். விலை நிர்ணயத்தை பொறுத்தவரை டெக்னோ ஃபாண்டம் வி ஃபோல்ட் 2 ஆனது.ரூ 89,990 க்கும், டெக்னோ ஃபாண்டம் வி ஃபிளிப் 2 ஆனது ரூ.59,990 க்கும் அறிமுகம் செய்யப்படலாம்.

06. போக்கோ எப்7 (Poco F7): இது சமீபத்தில் பிஐஎஸ் சான்றிதழ் இணையதளத்தில் காணப்பட்ட்டுள்ளதால். இதுவும் இந்த டிசம்பர் மாதத்திலேயே இந்தியாவில் அறிமுகமாக அதிக வாய்ப்புள்ளது. சரியான வெளியீட்டு தேதி குறித்த விவரங்கள் இல்லை. இது வலுவான செயல்திறனை மிட்-ரேன்ஜ் விலையில் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ரூ.32,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.

07. ஒன்பிளஸ் 13 (OnePlus 13): இது ஒரு இயர்-எண்ட் சர்ப்ரைஸ் ஆக இந்த டிசம்பர் மாதத்திலேயே அறிமுகம் செய்யப்படலாம் அல்லது அடுத்த 2025 தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்படலாம். இந்த குழப்பத்திற்கு காரணம், ஒன்பிளஸ் அதன் வழக்கமான வெளியீட்டு சுழற்சியை மாற்றி விட்டது. வழக்கமாக டிசம்பர் மாத வாக்கில் சீனாவில் அறிமுகமாகி பின்னர் ஜனவரி அல்லது பிப்ரவரி வாக்கில் இந்திய சந்தைக்கு வரும். ஆனால் இம்முறை ஒன்பிளஸ் 13 ஏற்கனவே சீனாவில் அறிமுகமாகி விட்டது.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO 13 Vivo X200 Tecno Phantom V Fold 2 Phantom V Flip 2 Poco F7 OnePlus 13 Launch December 2024
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X