Home
Mobile

நவ.1 முதல் விற்பனை.. வாய் பிளக்க வைக்கும் விலையில் OnePlus 13 அறிமுகம்.. சீனாக்காரன் செஞ்சி விட்டான்!

2024 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் ஒன்றான ஒன்பிளஸ் 13 (OnePlus 13) மாடல், இன்று சீனாவில் அறிமுகமானது. முந்தைய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களை போலவே இதுவும், முதலில் சீனாவில் அறிமுகமாகி பின்னர், இந்தியா உட்பட உலகளாவிய சந்தைகளில் அறிமுகமாகும். ஆனால் இது முந்தைய மாடல்களை போன்ற விலை நிர்ணத்தை பெறவில்லை.

எக்கச்சக்கமான பிரீமியம் அம்சங்களை பேக் செய்வதன் விளைவாக ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் மிகவும் அதிகமாக உள்ளது. சீனாவில் இது அப்படி என்ன விலைக்கு அறிமுகமாகி உள்ளது? இதில் அப்படி என்னென்ன பிரீமியம் அம்சங்கள் உள்ளன? இதன் இந்திய விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? இதோ விவரங்கள்:

வாய் பிளக்க வைக்கும் விலையில் OnePlus 13 அறிமுகம்!

ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 3168×1440 பிக்சல்ஸ், 1-120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1600 நிட்ஸ் டிபிக்கல் ப்ரைட்னஸ், 4500 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ், 2160ஹெர்ட்ஸ் ஹை-ஃப்ரெக்வன்சி PWM டிம்மிங், டால்பி விஷன், கிரிஸ்டல் ஷீல்ட் சூப்பர் செராமிக் கிளாஸ் ப்ரொடெக்ஷன் உடனான 6.82-இன்ச் 2கே+ LTPO AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது

சிப்செட்டை பொறுத்தவரை இது 900MHz அட்ரெனோ 830 ஜிபியு உடன் 4.32GHz ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 4என்எம் மொபைல் பிளாட்ஃபார்ம் ப்ராசஸரை கொண்டுள்ளது. இது 12ஜிபி / 16ஜிபி / 24ஜிபி LPDDR5X ரேம் மற்றும் 256ஜிபி / 512ஜிபி / 1டிபி UFS 4.0 ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது

கேமராக்களை பொறுத்தவரை இது 1/1.4-இன்ச் சோனி LYT-808 சென்சார், எப்/1.6 அபெர்க்ஷர், ஓஐஎஸ் உடனான 50எம்பி ப்ரைமரி கேமரா + 114° அல்ட்ரா-வைட் கேமராவுடன் 1/1.27-இன்ச் சாம்சங் JN1 சென்சார், எப்/2.2 அபெர்க்ஷர் 3.5செமீ மேக்ரோ உடனான 50எம்பி கேமரா + 1/1.95-இன்ச் LYT600, எப்/2.6அபெர்க்ஷர், ஓஐஎஸ், 3x ஆப்டிகல் ஜூம், 6x இன்-சென்சார் ஜூம், 120x டிஜிட்டல் ஜூம் உடனான 50எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா ஆகியவைகளை கொண்டுள்ளது

ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் ஹசல்பிளாட் (Hasselblad) கேமரா செட்டப் ஆனது 4கே 60fps வரை மற்றும் 8K வீடியோ ரெக்கார்டிங்கை ஆதரிக்கும். முன்பக்கத்தில் சோனி IMX615 சென்சார் கொண்ட 32எம்பி செல்பீ கேமரா (எப்/2.4 அபெர்க்ஷர், 4கே வரை 30 fps வீடியோ ரெக்கார்டிங்) உள்ளது

பேட்டரியை பொறுத்தவரை இது 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங், மேக்னட்டிக் சார்ஜிங் சப்போர்ட் உடனான 6000mAh பேட்டரியை கொண்டுள்ளது கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை இது இன்-டிஸ்ப்ளே அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார், அகச்சிவப்பு சென்சார், தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP68 + IP69 ரேட்டிங் ஆகியவைகளை கொண்டுள்ளது

கூடவே இது ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 4-மைக்ரோஃபோன்கள், யூஎஸ்பி டைப்-சி போர்ட், டால்பி அட்மோஸ் ஆதரவு, வைஃபை Wi-Fi 7 802.11 ax 2X2 MIMO, ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ் (L1+L5 டூயல் பேண்ட்) + க்ளோநாஸ் ஆகியவைகளையும் கொண்டுள்ளது. கடைசியாக இது அளவீடுகளில் 162.9×76.5×8.5 ​​மிமீ (கிளாஸ்) / 8.8 மிமீ (லெதர்) உள்ளது. எடையில் 213 கிராம் (கிளாஸ்) / 210 கிராம் (லெதர்) உள்ளது.

ஒன்பிளஸ் 13-ன் விலை விவரங்கள்: சீனாவில் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி மாடலின் விலை 4499 யுவான்களுக்கு (அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.53,150-க்கு) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல 12ஜிபி ரேம் + 512ஜிபி மாடல் சுமார் ரூ.57,875-க்கும், 16ஜிபி ரேம் + 512ஜி மாடல் சுமார் ரூ.62,590-க்கும், 24ஜிபி ரேம் + 1டிபி மாடல் சுமார் ரூ.70,860-க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

சீனாவில் ஏற்கனவே ப்ரீ ஆர்டர் செய்ய கிடைக்கும் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ஆனது நவம்பர் 1 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் உலகளவில் அறிமுகம் குறித்து எந்த தகவலும் வெளிப்படுத்தப்படவில்லை. எப்படி பார்த்தாலும் இது 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாத தொடக்கத்தில் அல்லது இறுதியில் தான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். இந்தியாவில் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.77,000ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 13 Launched in China Price Full Specifications Sale Starts From 2024 November 1
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X