அடுத்த 3வது நாளே.. OnePlus 13-க்கு வேட்டு வைக்கும் iQOO 13.. இந்திய அறிமுக தேதி அறிவிப்பு.. விலையும் லீக்!
ஒன்பிளஸ் 13 (OnePlus 13) ஸ்மார்ட்போனின் மிக முக்கியமான போட்டியாளர் ஆக பார்க்கப்படும் ஐக்யூ 13 (iQOO 13) ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுக தேதி (India Launch Date) டீஸ் செய்யப்பட்டு உள்ளது. இந்த டீஸர் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் சீன அறிமுக தேதி (China Launch Date), அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட உடனே வெளிவந்துள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. அதாவது ஒன்பிளஸ் 13 இந்திய சந்தைக்கு வருவதற்கு முன்பாகவே ஐக்யூ 13 ஆனது இந்தியாவில் தனது விற்பனையை ஆரம்பித்து.. ஒன்பிளஸின் மார்க்கெட்டை ஒருவழி செய்துவிடும் என்பது போல் தெரிகிறது.
ஐக்யூ 13 எப்போது இந்தியாவில் அறிமுகமாகும்? ஒன்பிளஸ் 13 மாடலை போலவே ஐக்யூ 13 மாடலும் கூட முதல் சீனாவில் தான் அறிமுகமாகும். இங்கே கவனிக்கப்பட வேண்டிய சுவாரசியமான விஷயம் என்னவென்றால்.. இவ்விரு மாடல்களுமே அக்டோபர் இறுதிக்குள் சீனாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

ஒன்பிளஸ் 13 அக்.31ஆம் தேதி அறிமுகமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மறுகையில் உள்ள ஐக்யூ 13 மாடலும் கூட இம்மாத இறுதிக்குள் சீனாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது; இருப்பினும் சரியான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதற்கிடையில் ஐக்யூ இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஆன நிபுன் மரியா, ஐக்யூ 13 ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகம் குறித்த டீஸர் போஸ்டரை பகிர்ந்து, ஒன்பிளஸ்-க்கு ஷாக் கொடுத்துள்ளார்!
நிபுன் மரியா ஷேர் செய்துள்ள டீஸர் ஆனது நேரடியாக ஐக்யூ 13 ஸ்மார்ட்போனின் பெயரை குறிப்பிடவில்லை என்றாலும் கூட, அது "அடுத்ததற்குத் தயாரா?" என்கிற கேள்வியை கேட்கிறது. இது மறைமுகமாக ஐக்யூ 13 ஸ்மார்ட்போனைத்தான் குறிக்கிறது என்று தெளிவாக தெரிகிறது. இந்த வார தொடக்கத்தில் வெளியான ஒரு அறிக்கை, ஐக்யூ 13 ஆனது இந்தியாவில் டிசம்பர் 3 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படலாம் என்று பரிந்துரைத்தது. தற்போது அது உண்மையாகும் என்பது போல் தெரிகிறது.
இது உண்மையாகும் பட்சத்தில், ஒன்பிளஸ் 13 சீனாவில் அறிமுகமான சில தினங்களில் ஐக்யூ 13 இந்தியாவில் அறிமுகமாகும்; ஆக இதற்கு முன்பாகவே ஐக்யூ 13 ஆனது சீனாவில் அறிமுகமாகி இருக்கும். பெரும்பாலும் ஐக்யூ 13 ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் ஆனது ஒன்பிளஸ் 13 மாடலை விட குறைவாகவே இருக்கும் என்பதால்.. சீன சந்தை மற்றும் இந்திய சந்தை ஆகிய இரண்டிலுமே ஐக்யூ 13 நல்ல வரவேற்பை பெற அதிக வாய்ப்புள்ளது.
ஐக்யூ 13 ஸ்மார்ட்போனில் என்னென்ன முக்கிய அம்சங்கள் இடம்பெறும்? இது பிஓஇ (BOE) நிறுவனத்தின் லேட்டஸ்ட் க்யூ10 பேனலை பேக் பெறும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது 2கே ரெசல்யூஷன் மற்றும் மென்மையான 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டை கொண்டிருப்பதோடு மட்டுமில்லாமல்.. க்யூQ10 டிஸ்பிளேவானது அதிக பிரகாசம், நீண்ட ஆயுட்காலம் மற்றும் போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது குறைந்த கலர் டீவியேஷன் ஆகியவற்றை கொண்டுள்ளது.
சிப்செட்டை பொறுத்தவரை, ஐக்யூ 13 ஸ்மார்ட்போன் ஆனது பிசி-லெவல் 2கே டெக்ஸ்ச்சர் சூப்பர்-ரெசல்யூஷன் மற்றும் நேட்டிவ் 144எப்பிஎஸ்கேமிங்கை ஆதரிக்கும் க்யூ2 என்ற சுயமாக மேம்படுத்தப்பட்ட கேமிங் சிப் உடன் இணைந்து.. வரவிருக்கும் ஸ்னாப்டிராகன் 8 எலைட்டை பேக் செய்யும். இது 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்படலாம்
சாஃப்ட்வேரை பொறுத்தவரை இது ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான ஒரிஜின்ஓஎஸ் 5 (உலகளவில் இது ஃபன்டச் ஓஎஸ் 15) உடன் வரும் என்று எதிர்பார்க்கிறோம். கேமராக்களைப் பொறுத்தவரை, இது மூன்று 50எம்பி கேமராக்களை கொண்ட ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டிருக்கும் - ஒரு ப்ரைமரி சென்சார், அல்ட்ராவைட் லென்ஸ் மற்றும் டெலிஃபோட்டோ லென்ஸ்.
பேட்டரியை பொறுத்தவரை இது 6150mAh செல் மூலம் சக்தியூட்டப்படும், இது 120W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும். கவனிக்க பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இது தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி68 ரேட்டிங்கை பெறலாம். மேலும் இந்த ஃபோனில் மெட்டல் ஃபிரேம் மற்றும் எக்ஸ்ட்ரா ஸ்டைலுக்கான "ஹாலோ" லைட் ஸ்ட்ரிப் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கிறோம்.
ஐக்யூ 13 ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? இந்தியாவில் இது சுமார் ரூ. 55,000 ரூபாய்க்கு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ஆனது கண்டிப்பாக ரூ.55,000-ஐ சுற்றிய பட்ஜெட்டில் இருக்காது; இது பெரும்பாலும் ரூ.65,000 க்கு மேல் என்கிற விலை நிர்ணயத்தை தான் பெறும். ஒன்பிளஸ் 13 பற்றிய கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications








