Home
Mobile

OnePlus 13 ஸ்மார்ட்போனின் First Look.. பயங்கரமா எதிர்பார்த்த ரசிகர்களுக்கு பல்பு!

ஒருவழியாக ஒன்பிளஸ் 13 (OnePlus 13) ஸ்மார்ட்போன் பார்ப்பதற்கு எப்படி இருக்கும் என்பதை வெளிப்படுத்தும் புகைப்படம் ஒன்று லீக் ஆகியுள்ளது. இதை ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் பர்ஸ்ட் லுக் என்றும் எடுத்துக்கொள்ளலாம். ஏனென்றால் நேற்று வரையிலாக இது என்னென்ன அம்சங்களை பேக் செய்யும் என்கிற விவரங்கள் மட்டுமே வெளியான வண்ணம் இருந்தது. தற்போது தான் இதன் வடிவமைப்பை வெளிப்படுத்தும் முதல் போட்டோ லீக் ஆகியுள்ளது. இந்த போட்டோ வழியாக என்னென்ன அறிந்துகொள்ள முடிகிறது? ஒன்பிளஸ் 12-க்கும் ஒன்பிளஸ் 13-க்கும் இடையே பெரிய அளவிலான வேறுபாடுகள் உள்ளதா? இதோ விவரங்கள்:

2023 ஆம் ஆண்டில் அறிமுகமான ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனின் அப்கிரேடட் வெர்ஷன் ஆன ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ஆனது இந்த மாதமே சீனாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது (அதை தொடர்ந்து இந்தியாவிலும் அறிமுகமாகும்). அறிமுகத்திற்கு முன்னதாகவே ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் பல முக்கிய அம்சங்கள் உறுதிப்படுத்தப்பட்டு விட்டன என்றே கூறலாம்.

OnePlus 13 ஸ்மார்ட்போனின்  First Look.. ரசிகர்களுக்கு பல்பு!

ஆனால் டிசைன் தொடர்பாக எந்த தகவலும் வெளியாகாமலேயே இருந்தது. அந்த குறையையும் தீர்த்து வைக்கும்படியாக ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் அஃபிஷியல்லுக்கிங் ரெண்டர்கள் சமூக ஊடக தளங்களின் வழியாக வெளிவந்துள்ளது. அதன் வழியாக ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ஆனது பார்ப்பதற்கு 90% அப்படியே ஒன்பிளஸ் 12 மாடலை போலவே உள்ளது. அதாவது ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் வடிவமைப்பில் பெரிய அளவிலான மாற்றங்களை கொண்டுவராது என்பது போல் தெரிகிறது.

சீன சமூக ஊடக தளமான வெய்போ (Weibo) வழியாக டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (DCS - Digital Chat Station) பகிர்ந்த புகைப்படத்தின் வழியாக "உத்தேசிக்கப்படும்" ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ஆனது பிளாக் கலர் ஆப்ஷனில் காட்டப்பட்டுள்ளது, பெரும்பாலும் இது ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனில் இருந்து பல முக்கிய வடிவமைப்பு கூறுகளை கடன் வாங்குவதாக தோன்றினாலும், கேமரா மாட்யூலில் வித்தியாசத்தை காண முடிகிறது.

OnePlus 13 ஸ்மார்ட்போனின்  First Look.. ரசிகர்களுக்கு பல்பு!

ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் கேமரா மாட்யூல் ஆனது மீதமுள்ள ஃபிரேமில் இருந்து பிரிக்கப்பட்டு இடதுபுறத்தில் ஒரு தனித்துவமான சர்குலர் டிசைனை பெறுகிறது. மேலும், ஹசல்பிளாட் (Hasselblad) பிராண்டிங் ஆனது கேமரா ஐலாண்டில் இருந்து நகர்த்தப்பட்டு, இப்போது மேல் வலதுபுறத்தில் ஒரு மெட்டல் துண்டு போல் தெரிகிறது. ஆனால் கேமராக்களின் அமைப்புகள் மற்றும் ஒன்பிளஸ் லோகோவின் இடம் மாறாமல் உள்ளது.

ஒன்பிளஸ் 13-ல் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் புதிய லோக்கல் ரெஃப்ரெஷ் ரேட் அம்சம் உடனான 6.82-இன்ச் அளவிலான 2K 10-பிட் LTPO BOE X2 மைக்ரோ குவாட் கர்வ்டு OLED டிஸ்பிளேவை கொண்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இது வரவிருக்கும் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் உடனாக 24 ஜிபி வரையிலான ரேம் மற்றும் 1 டிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்படலாம்.

கேமராக்களை பொறுத்தவரை ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ஆனது 50-மெகாபிக்சல் சோனி LYT-808 ப்ரைமரி சென்சார், 50-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் யூனிட் மற்றும் 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 50-மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் ஆகியவைகளை உள்ளடக்கிய ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டிருக்கும் என்று ஊகிக்கப்படுகிறது. கடைசியாக இது 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 6,000mAh பேட்டரியை பேக் செய்யும்.

ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? முன்னதாக ஒன்பிளஸ் 12 மாடலுக்கும் ஒன்பிளஸ் 13 மாடலுக்கும் பெரிய அளவிலான விலை வித்தியாசம் இருக்காது, இரண்டுமே கிட்டத்தட்ட ஒரே விலை பிரிவின் கீழ் தான் அறிமுகமாகும் என்று கூறப்பட்டது. ஆனால் சமீபத்திய தகவல் ஒன்று முக்கிய அப்கிரேட்களின் காரணமாக இது ரூ.6000 (500 யுவான்) வரையிலான விலை அதிகரிப்பை காணலாம் என்கிறது. அதாவது ஆரம்ப கால லீக்ஸ்-களில் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் ஒன்பிளஸ் 12 (ரூ.65,000) உடன் ஒற்றுப்போகும் என்றே கூறப்பட்டது. ஆனால் தற்போது ஒன்பிளஸ் 13 ஆனது ரூ.70,000-ஐ தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. (Photo Credit: Weibo/DCS)

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 13 First Look Similar To OnePlus 12 With Fewer Changes See Leaked Render
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X