Home
Mobile

வந்துட்டான் குட்டி காளை.. 5.5-இன்ச் டிஸ்பிளே, டச் ஐடி உடன் புது iPhone.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?

ஆப்பிளின் நெக்ஸ்ட் ஜெனரேஷன் ஐபோன் மாடல்கள் ஆன ஐபோன் 18 ப்ரோ மற்றும் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் ஆகிய மாடல்களில் "நகரும்" ப்ரைமரி கேமரா இடம்பெறும் என்கிற தகவல் வெளியான வேகத்தில், ஆப்பிளின் முதல் போல்டபிள் ஐபோன் குறித்த முக்கிய அப்டேட்டும் வெளியாகி உள்ளது.

இதன் மூலம், கடந்த பல ஆண்டுகளாக வதந்திகளில் மட்டுமே சிக்கி வரும் போல்டபிள் ஐபோன் ஆனது இந்த 2026 ஆண்டு நிச்சயமாக அறிமுகம் செய்யப்படலாம் என்கிற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இதை உறுதி செய்யும் படியாக, பல வதந்திகள் வலுப்பெற்று வரும் நிலையில், இது குறித்த சமீபத்திய தகவல் ஒரு கேஸ் (Case) தயாரிப்பாளரிடமிருந்து வந்துள்ளது.

5.5-இன்ச் டிஸ்பிளே, டச் ஐடி உடன் புது iPhone.. எந்த மாடல்?

ஆப்பிளின் முதல் போல்டபிள் ஐபோனின் மாடல் பெயர் என்னவாக இருக்கலாம்? இது ஐபோன் அல்ட்ரா (iPhone Ultra) என்கிற பெயரின் கீழ் மார்க்கெட்டிங் செய்யப்பட்டு, ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் சீரிஸில் மிகவும் பிரீமியம் மாடலாக (அதாவது விலை உயர்ந்த மாடலாக) நிலைநிறுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபோன் அல்ட்ரா கேஸ்: சீன சமூக ஊடகத்தளமான வெய்போவில் (Weibo) வெளிவந்த லீக்டு கேஸ் ரெண்டர்கள் ஆனது, அது ஐபோன் அல்ட்ரா மாடலுக்கு சொந்தமானதாக இருக்கக்கூடும் என்று பரிந்துரைக்கிறது. இந்த கேஸ் -ன் டிசைன் ஆனது முன்னதாக வெளியாக பல அறிக்கைகளுடன், பல விவரங்களுடன் ஒத்துப்போகின்றன.

இதன் மூலம் ஐபோன் அல்ட்ரா மாடலானது, ஐபோன் ஏர் மாடலில் அறிமுகப்படுத்தப்பட்ட வடிவமைப்பை போன்ற கேமரா ஐலேண்டில் (camera island) டூயல் கேமரா செட்டப் உடன், புக் ஸ்டைல் போல்டிங் வடிவமைப்பை கொண்டிருப்பதாக தெரிகிறது. இந்த டிசைனில் கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு விஷயம் - உள்ளமைக்கப்பட்ட மேக்சேஃப் (MagSafe) காந்தங்கள் இல்லை

இது உண்மையாக இருந்தால், மேக்நட் வயர்லெஸ் சார்ஜிங் ஆக்சஸெரீஸ்களை பயன்படுத்த பயனர்களுக்கு பொருத்தமான கேஸ் தேவைப்படலாம். இருப்பினும், இந்த தவறு கேஸின் வடிவமைப்பால் ஏற்பட்டதா அல்லது டிவைஸின் இன்டர்னல் ஹார்ட்வேரால் ஏற்பட்டதா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.

ஐபோன் அல்ட்ரா மாடலின் மேல் விளிம்பில் ஆப்பிள் வால்யூம் பட்டன்களையும், வலது பக்கத்தில் பவர் பட்டனையும் வைத்திருப்பதாக இந்த கேஸ் ரெண்டர்கள் தெரிவிக்கின்றன. பவர் பட்டனுக்கு கீழே உள்ள ஒரு வெட்டுப்பகுதி, ஆன்டெனா பேண்டை பொருத்துவதற்காக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

முந்தைய லீக்ஸ்களின் படி, ஐபோன் அல்ட்ரா மாடல் ஆனது விரிக்கப்பட்ட நிலையில் வெறும் 4.7 மிமீ தடிமனும், மடிக்கப்பட்ட நிலையில் 9.23 மிமீ தடிமனும் இருக்கலாம். இது சந்தையில் உள்ள மிக மெல்லிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக அமையக்கூடும். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை, ஏனெனில் ஆப்பிள் இந்த வடிவமைப்பை செம்மைப்படுத்த பல ஆண்டுகளாக முயற்சி செய்துள்ளது

ஐபோன் அல்ட்ரா என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இது 5.5-இன்ச் எக்ஸ்டர்னல் டிஸ்பிளேவையும், பெரிய 7.8-இன்ச் இன்டர்னல் டிஸ்பிளேவையும் கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கேமராக்களை பொறுத்தவரை இது 48எம்பி ப்ரைமரி கேமராவை பேக் செய்யலாம்.

இது அடுத்த தலைமுறை ஏ20 ப்ரோ சிப்செட் மற்றும் சுமார் 5500mAh பேட்டரி ஆகியவைகளையும் கொண்டிருக்கலாம். மேலும் ஃபேஸ் ஐடியை மட்டுமே சார்ந்திருப்பதற்கு பதிலாக, ஐபோன் அல்ட்ரா மாடலில் பவர் பட்டனில் ஒருங்கிணைக்கப்பட்ட பிங்கர் பிராண்ட் ஸ்கேனர் மூலம் டச் ஐடி மீண்டும் கொண்டுவரப்படலாம் என்றும் சில அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

கிஸ்பாட்டின் கருத்து: ஆப்பிள் நிறுவனத்தின் முதல் போல்டபிள் ஐபோன் மாடல் மீது எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகள் இருந்தாலும்.. இதன் நீடித்து உழைக்கும் தன்மை, விலை மற்றும் மென்பொருள் அம்சங்கள் உள்ளிட்ட பல முக்கிய கேள்விகளுக்கு இன்னும் பதில் இல்லை. மேலும் இந்த விலை - இன்னொரு முக்கியமான கேள்வியாகும். நினைவூட்டும்வண்ணம் ஐபோன் ஏர் மாடலின் விலை அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. ஆனால் அதன் அம்சங்கள் அதற்கு வொர்த் ஆனதாக இல்லை. இதே சம்பவம் ஐபோன் அல்ட்ரா மாடலில் நடந்தால்.. ஆப்பிளுக்கு அடுத்த தோல்வி நிச்சயம்! Photo Courtesy: www.gadgetpilipinas.net

Best Mobiles in India

English summary
iPhone Ultra Apple First Foldable iPhone Case Leak Reveals Dual Camera Touch ID and More
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X