அதெப்படி திமிங்கலம்.. 48MP நகரும் கேமரா உடன் புது Apple iPhone.. எந்த மாடல்?
முன்னதாக ஐபோன் 18 சீரீஸின் (iPhone 18 Series) விலை விவரங்கள் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகி இருந்தது. அது ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் நெக்ஸ்ட் ஜெனரேஷன் ஐபோன் மாடல்களை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருபவர்களுக்கு ஒரு இன்ப செய்தியாக அமைந்து இருந்தது.
இதற்கிடையில் தற்போது, ஐபோன் 18 சீரிஸில் உள்ள ப்ரோ (iPhone 18 Pro) மாடல்கள், கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய கேமரா ஹார்ட்வேர் அப்டேட்களில் ஒன்றை பெறக்கூடும் என்கிற தகவல் கிடைத்துள்ளது. சமீபத்திய விநியோக சங்கிலி (Supply-chain) அறிக்கைகளின் படி, ஐபோன் 18 ப்ரோ மாடல்களில் ஒரு புதிய மாறக்கூடிய அபெர்ச்சர் கொண்ட மெயின் கேமரா (Variable-aperture main camera) இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஒரு சில ஆண்ட்ராய்டு பிளாக்ஷிப் மாடல்களில் மட்டுமே காணப்படும் - நெகிழ்வுத்தன்மையை வழங்கும் - ஒரு அம்சமாகும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இந்த மேம்பாடு மலிவானது அல்ல என்றும் கூறப்படுகிறது. ஆப்பிளின் ப்ரோ ஐபோன்களில் தற்போது பயன்படுத்தப்படும் பிரீமியம் 7பி லென்ஸை விட, இந்த புதிய நகரும் லென்ஸ் அமைப்பின் சராசரி விற்பனை விலை சுமார் 50% அதிகமாக இருக்கும் என்று தொழில்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்த அதிக வன்பொருள் செலவுகள் இருந்தபோதிலும், ஐபோன் 18 ப்ரோ சீரீஸின் விலைகளை ஆப்பிள் கணிசமாக உயர்த்த திட்டமிட்டுள்ளது என்பதற்கு, தற்போது வலுவான அறிகுறிகள் எதுவும் இல்லை. நிச்சயமாக, அறிமுக விலை அறிவிக்கப்பட இன்னும் பல மாதங்கள் உள்ளன. அதற்குள் விஷயங்கள் மாறலாம்.
ஆனால் தற்போதைக்கு, கூடுதல் செலவில் குறைந்தபட்சம் சிலவற்றையாவது ஆப்பிள் ஏற்க தயாராக இருக்கலாம் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. புதிய நகரும் லென்ஸ்-ஐ தவிர்த்து, ஐபோன் 18 ப்ரோ சீரிஸின் கேமரா செட்டப் ஆனது பல வழிகளில் வழக்கமானதாகவே இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய லீக்ஸ்களின் படி, ஆப்பிள் ட்ரிபிள் 48எம்பி செட்டப்பை தக்கவைத்து கொள்ளும் என்றும், இதில் மிகப்பெரிய மாற்றம் மெயின் கேமராவை மையமாக கொண்டிருக்கும் என்றும் தெரிகிறது. வேரியபிள் அபெர்ச்சர் (variable aperture) கொண்ட லென்ஸ், சென்சாருக்குள் நுழையும் ஒளியின் அளவை இயல்பாகவே சரிசெய்ய அனுமதிக்கும்.
இது குறைந்த ஒளி கொண்ட புகைப்படங்களை மேம்படுத்துவதோடு, பிரகாசமான சூழல்களில் டெப்த் ஆப் பீல்ட் (depth of field) மீது சிறந்த கட்டுப்பாட்டையும் வழங்கும். இது சிறப்பாக செயல்படுத்தப்பட்டால், பயனரிடமிருந்து எந்தவொரு கூடுதல் முயற்சியும் தேவைப்படாமல், இது அவர்களுக்கு அதிக நெகிழ்வுத்தன்மையை வழங்கும்.
பெரும்பாலான மக்கள், பின்னணியில் இயங்கும் இந்த ஹார்ட்வேரை பெரிதாக கவனிக்காமல் இருக்கலாம், ஆனால் இதன் விளைவாக வரும் புகைப்படங்கள் நிச்சயம் பயனடையக்கூடும். கேமராவை தவிர, ஐபோன் 18 ப்ரோ சீரீஸ் மாடல்கள் ஆனது ஆப்பிளின் நெக்ஸ்ட் ஜெனரேஷன் ஏ20 ப்ரோ சிப் மற்றும் ஐஓஎஸ் 27-இல் புதுப்பிக்கப்பட்ட கேமரா ஆப் வெர்ஷனுடன் அறிமுகமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஆப்பிள் நிறுவனம் இம்முறை, அடர் செர்ரி நிறத்தால் ஈர்க்கப்பட்ட ஒரு புதிய கலர் ஆப்ஷனை அறிமுகம் செய்யலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், தற்போதைக்கு, மாறக்கூடிய அபெர்ச்சர் கொண்ட கேமராவே ஐபோன் 18 ப்ரோ மாடல்களின் முக்கிய அம்சமாக உருவாகி வருகிறது.
ஆப்பிள் பொதுவாக, கேமரா ஹார்ட்வேர்களில பெரிய மாற்றங்களை செய்வதை விட, சாப்ட்வேர் மற்றும் கம்பியூடேஷனல் போட்டோகிராஃபி மேம்பாடுகளையே (software and computational photography improvements) நம்பியிருக்கிறது. இதுவே இந்த குறிப்பிட்ட லீக்கை வழக்கத்தை விட சற்று அதிகமாக தனித்து நிற்க செய்கிறது. Photo Courtesy: mymobileindia.com / ET News.


Click it and Unblock the Notifications