iPhone 17 இந்தியாவில் அறிமுகமானது.. என்ன விலை? எப்போது முதல் விற்பனை?
ஆப்பிள் நிறுவனத்தின் 2025 ஐபோன் மாடல்களாக ஐபோன் 17 சீரீஸ் இந்தியா உட்பட உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சீரிஸின் கீழ் வெண்ணிலா வேரியண்ட் ஆக ஐபோன் 17 (iPhone 17), ஸ்லிம் மற்றும் லைட் வெயிட் வேரியண்ட் ஆக ஐபோன் ஏர் (iPhone Air) அறிமுகம் செய்யப்பட்டுள்ளன
மேலும் ப்ரோ மாடல்களாக - ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஆக எதிர்பார்த்தபடியே ஐபோன் 17 சீரிஸின் கீழ் மொத்தம் 4 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த கட்டுரையில் வெண்ணிலா வேரியண்ட் ஆன ஐபோன் 17 மாடலின் விலை, அம்சங்கள் மற்றும் விற்பனை குறித்து விரிவாக பார்க்கலாம்:

ஐபோன் 17 மாடலின் விரிவான அம்சங்கள்: ஐஓஎஸ் 26 (iOS 26) கொண்டு இயங்கும் ஐபோன் 17 மாடல் ஆனது டூயல் சிம் (நானோ + இசிம்) ஆதரவுடன் வருகிறது. டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 120ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட் உடனான பெரிய 6.3-இன்ச் சூப்பர் ரெடினா XDR OLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
மேலும் ஐபோன் 17 மாடலின் டிஸ்பிளேவானது - புதிய ப்ரோமோஷன் (ProMotion) பேனலை ஆதரிக்கிறது. இது ஐபோன் 16 ப்ரோ மாடல்களில் மாடல்களில் இருந்து ஏற்றுக்கொள்ளப்பட்ட அம்சமாகும். மேலும் 3000 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ், மேம்படுத்தப்பட்ட செராமிக் ஷீல்ட் 2 பாதுகாப்பு மற்றும் ஆஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே ஆகிய அம்சங்களையும் ஆதரிக்கிறது.
தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி68 ரேட்டிங்கை கொண்டுள்ள ஐபோன் 17 மாடலின் கேமராக்களை பொறுத்தவரை - இது டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் எப் /1.6 அபெர்க்ஷர் மற்றும் சென்சார்-ஷிப்ட் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) உடனான 48 மெகாபிக்சல் ஃப்யூஷன் பிரைமரி கேமரா உள்ளது
இந்த சென்சாரால் 52மிமீ குவிய நீளம் கொண்ட 2எக்ஸ் டெலிஃபோட்டோ கேமராவாகவும் செயல்பட முடியும். இதனுடன் எப்/2.2 அபெர்க்ஷர் மற்றும் மேக்ரோ திறன்களை கொண்ட 48 மெகாபிக்சல் ஃப்யூஷன் அல்ட்ரா-வைட் கேமராவும் உள்ளது. முன்பக்கத்தில், நீங்கள் ஒரு புதிய சென்டர் ஸ்டேஜ் செல்ஃபி கேமராவை பெறுவீர்கள்.
சிப்செட்டை பொறுத்தவரை ஐபோன் 17 மாடல் ஆனது ஏ19 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 16-கோர் நியூரல் எஞ்சினை கொண்டுள்ளது. ஆப்பிளின் கூற்றுப்படி, பவர் எபிஷியன்ட் ஏஐ இன்பெரென்ஸ் (Power-efficient AI inference), அதிகரித்த மெமரி பேண்ட்வித் மற்றும் மேம்பட்ட செயல்திறனை வழங்கும்.
ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 17 மாடலின் ஸ்டோரேஜையும் அதிகரித்துள்ளது, பேஸிக் ஸ்டோரேஜ் ஆக 256ஜிபி உள்ளது. நிறுவனத்தின் கூற்றுப்படி, ஐபோன் 17 மாடல் ஆனது ஐபோன் 16 உடன் ஒப்பிடும்போது எட்டு மணிநேரம் வரை கூடுதல் பேட்டரி ஆயுளை வழங்கும். மேலும் இது வேகமாக சார்ஜிங்கையும் ஆதரிக்கிறது. ஆப்பிளின் கூற்றுப்படி சில நிமிடங்களில் 50 சதவீதம் சார்ஜ் ஆகும்; 10 நிமிட சார்ஜ் எட்டு மணிநேர பயன்பாட்டை வழங்கும்.
ஐபோன் 17 மாடலின் இந்திய விலை மற்றும் விற்பனை விவரங்கள்: இந்தியாவில், ஐபோன் 17 மாடலின் ஆரம்ப விலை ரூ. 82,900 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது லாவெண்டர், மிஸ்ட் ப்ளூ, சேஜ், ஒயிட் மற்றும் பிளாக் ஆகிய கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும். ஐபோன் 17 மாடலுக்கான ப்ரீ-ஆர்டர் வருகிற செப்டம்பர் 12 ஆம் தேதி தொடங்கும், மேலும் டெலிவரிகள் செப்டம்பர் 19 ஆம் தேதி உலகளவில் தொடங்கும்.


Click it and Unblock the Notifications