Home
Mobile

வெறும் 5.6mm ஸ்லிம் டிசைனில் iPhone Air இந்தியாவில் அறிமுகமானது.. என்ன விலை? எப்போது முதல் விற்பனை?

ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 17 சீரீஸின் கீழ் புத்தம் புதிய மாடல் ஆக ஐபோன் ஏர் (iPhone Air) என்கிற மாடலை அறிமுகம் செய்துள்ளது. இது ஐபோன் 17 பிளஸ் மாடலுக்கு பதிலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது இனிமேல் "ஏர்" மாடல்கள் ஆனது முந்தைய ஐபோன் சீரீஸ்களில் இடம்பெற்ற "பிளஸ்" மாடல்களுக்கு மாற்றாக அறிமுகமாகும்.

அவ்வளவு சாதாரணமாக ஆப்பிள் நிறுவனம் பெரிய மாற்றத்தை செய்துவிடாது. இதில் இருந்தே ஆப்பிளின் புத்தம் புதிய ஐபோன் ஏர் மாடலின் முக்கியத்துவத்தை மேலோட்டமாக நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. அதற்காக கண்களை மூடிக்கொண்டு வாங்கிவிட முடியுமா? ஐபோன் ஏர் மாடலில் அப்படி என்ன ஸ்பெஷல்? என்ன விலை? என்னென்ன அம்சங்கள்? எப்போது முதல் விற்பனை? இதோ விவரங்கள்:

iPhone 17 Air இந்தியாவில் அறிமுகமானது.. என்ன விலை?

ஐபோன் 17 ஏர் மாடலின் விரிவான அம்சங்கள்: ஐபோன் ஏர் என்பது ஆப்பிள் நிறுவனத்தின் புதிய அல்ட்ரா ஸ்லிம் மாடல் மட்டுமல்ல; ஒரு இசிம்-ஒன்லி மாடலும் ஆகும். அதாவது இசிம் ஆதரவை மட்டுமே கொண்டிருக்கும். டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 6.5-இன்ச் சூப்பர் ரெடினா XDR OLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும் இது 3,000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் ப்ரோமோஷன் (ProMotion) ஆகிய அம்சங்களையும் கொண்டுள்ளது

அதாவது மற்ற ஐபோன் 17 சீரீஸ் மாடல்களை போலவே, ஐபோன் ஏர் மாடலும் பயன்பாட்டை பொறுத்து 10-120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் விகிதங்களுக்கு இடையில் இயங்க முடியும். ஐபோன் ஏர் ஆனது இன்றுவரை அதன் மிக மெல்லிய ஐபோன் மாடல் என்றும், அளவீட்டில் 5.6மிமீ உள்ளதாகவும் ஆப்பிள் நிறுவனம் கூறுகிறது.

மேலும் இது 80 சதவீதம் மறுசுழற்சி செய்யப்பட்ட டைட்டானியம் பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் முதல் முறையாக, முன் மற்றும் பின்புறத்தில் செராமிக் ஷீல்ட் 2 ப்ரொடெக்ஷன் உள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் கூற்றுப்படி, இது ஐபோன் ஏர் மாடலை விரிசல்களில் இருந்து 4 மடங்கு அதிக எதிர்ப்பு திறனை வழங்கும்.

ஐபோன் ஏர் மாடல் ஆனது ப்ரோ மாடல்களை போலவே அதே ஏ19 ப்ரோ சிப்செட் கொண்டு இயக்கப்படுகிறது, இதில் சிக்ஸ்-கோர் சிபியு, சிக்ஸ்-கோர் ஜிபியு மற்றும் 16-கோர் நியூரல் எஞ்சின் ஆகியவைகள் அடங்கும். இது இரண்டாம் தலைமுறை டைனமிக் கேச்சிங்கையும் கொண்டுள்ளது, இதன் விளைவாக அதிகரித்த மாத் ரேட்ஸ் மற்றும் ஒருங்கிணைந்த இமேஜ் சம்மரி ஏற்படுகிறது. இந்த போன் ஆப்பிள் இன்டலிஜென்ஸ் அம்சங்களுக்கான ஆதரவுடனும் வருகிறது.

இது தவிர, ஐபோன் ஏர் மாடல் ஆனது ஆப்பிளின் புதிய என்1 சிப்பையும் கொண்டுள்ளது, இது வைஃபை 6, ப்ளூடூத் 6 மற்றும் த்ரெட் திறன்களை இயக்குகிறது. இதற்கிடையில், ஒரு புதிய சி1எக்ஸ் மோடமும் உள்ளது. இது இரண்டு மடங்கு வேகமான நெட்வொர்க்கிங் வேகத்தை வழங்குவதாகவும், ஐபோன் 16இ மாடலில் உள்ள சி1 மோடத்தை விட அதிக செயல்திறன் கொண்டதாகவும் இருக்குமென்று ஆப்பிள் கூறுகிறது.

கேமராக்களை பொறுத்தவரை. ஐபோன் ஏர் மாடலில் சிங்கிள் 48-மெகாபிக்சல் ஃப்யூஷன் பிரைமரி கேமரா உள்ளது. இது சென்சார்-ஷிப்ட் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன், எப்/1.6 அபெர்க்ஷர் மற்றும் 2எக்ஸ் டெலிஃபோட்டோ திறன்களை கொண்டுள்ளது. முன்பக்கத்தில், மற்ற ஐபோன் 17 மாடல்களைப் போலவே 18-மெகாபிக்சல் சென்டர் ஸ்டேஜ் கேமரா உள்ளது.

பேட்டரியை பொறுத்தவரை ஐபோன் ஏர் மாடலின் பேட்டரி விவரக்குறிப்புகளை ஆப்பிள் இன்னும் வெளியிடவில்லை. இருப்பினும் இது "நாள் முழுவதும்" பேட்டரி லைஃப்பை வழங்குவதாகவும், ஒரே சார்ஜில் 27 மணிநேரம் வரை வீடியோ பிளேபேக்கை வழங்குவதாகவும் கூறப்படுகிறது. மெங்கும் 30 நிமிட சார்ஜிங்கில் 50 சதவீதம் வரை சார்ஜ் ஆகும்.

ஐபோன் 17 ஏர் மாடலின் இந்திய விலை மற்றும் விற்பனை விவரங்கள்: ஆப்பிளின் புதிய ஐபோன் ஏர் மாடல் ஆனது 4 கலர்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது: ஸ்கை ப்ளூ, லைட் கோல்ட், கிளவுட் ஒயிட் மற்றும் ஸ்பேஸ் பிளாக். இந்தியாவில் பேஸிக் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.1,19,900 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அடுத்ததாக உள்ள 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,39,900 க்கும் மற்றும் கடைசியாக உள்ள 1டிபி ஆப்ஷன் ரூ.1,59,900 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஐபோன் ஏர் மாடல் ஆனது செப்டம்பர் 12 ஆம் தேதி முதல் ப்ரீ-ஆர்டர் செய்ய கிடைக்கும் மற்றும் டெலிவரி செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் தொடங்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
New iPhone Air With Ultra Slim Design Launched in India Price Specifications Features Sale Sep 19
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X