அசல் விலையை விட கம்மி விலைக்கு iPhone 17, iPhone 17 Pro-வை வாங்குவது எப்படி? இந்த Sale Offer-ஐ யூஸ் பண்ணுங்க!
2025 ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மார்ட்போன்கள் ஆன ஆப்பிளின் ஐபோன் 17 சீரீஸ் மாடல்கள் நேற்று (செப்.9 ஆம் தேதி) இரவு உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டன. இதன்கீழ் ஸ்டாண்டர்ட் ஐபோன் 17 (iPhone 17), ஐபோன் 17 ப்ரோ (iPhone 17 Pro), ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் (iPhone 17 Pro Max) மற்றும் புத்தம் புதிய ஐபோன் ஏர் (iPhone Air) ஆகிய மாடல்கள் அறிமுகமாகி உள்ளன.
நேற்று நடந்த அறிமுகத்தின் போது, அனைத்து மாடல்களுமே வருகிற செப்டம்பர் 12 ஆம் தேதி முதல் ப்ரீ-ஆர்டர் செய்ய கிடைக்கும் என்பதும், பின்னர் ஒரு வாரம் கழித்து, அதாவது செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் டெலிவரி செய்ய திட்டமிடப்பட்டு என்பதும் உறுதி செய்யப்பட்டு இருந்தது. தற்போது ஐபோன் 17 சீரீஸ் மாடல்களை வாங்குவோர்களுக்கு என்னென்ன ஆபர் கிடைக்கும் என்கிற விவரங்கள் பகிரப்பட்டுள்ளன.

ஐபோன் 17 சீரிஸ் ப்ரீ-ஆர்டர் மற்றும் விற்பனை தேதிகள்: இந்திய நேரப்படி செப்டம்பர் 12 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5:30 மணிக்கு ஐபோன் 17 சீரிஸ் மாடல்கள் முன்பதிவு செல்லையா கிடைக்கும். பின்னர் இந்த புதிய ஐபோன்கள் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும். ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் இந்தியாவில் உள்ள அதிகாரப்பூர்வ ஆப்பிள் ஸ்டோர் வலைத்தளத்தில் தங்களுக்கு பிடித்த மாடல்களை ஆர்டர் செய்யலாம்.
இந்தியாவை தவிர, ஆஸ்திரேலியா, கனடா, சீனா, கொலம்பியா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், மலேசியா, மெக்ஸிகோ, சிங்கப்பூர், தென் கொரியா, தாய்லாந்து, துருக்கி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் வியட்நாம் உள்ளிட்ட 63 க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்கள் செப்டம்பர் 12 ஆம் தேதி முதல் ஐபோன் 17, ஐபோன் ஏர், ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ஆகியவற்றை ப்ரீ-ஆர்டர் செய்யலாம்.
மேற்குறிப்பிட்ட எல்லா நாடுகளிலுமே ஐபோன் 17 சீரிஸ் மாடல்கள் ஆனது செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும். குறிப்பிட்ட சில நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் மட்டுமே செப்டம்பர் 26 ஆம் தேதி முதல் வாங்க கிடைக்கும் என்று ஆப்பிள் அறிவித்துள்ளது.
இந்தியாவில் ஐபோன் 17 சீரிஸ் மாடல்களின் விலை மற்றும் விற்பனை சலுகைகள்: ஆப்பிள் ஐபோன் 17 மாடலின் பேஸிக் 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.82,900 க்கும், ஹைஎண்ட் 512 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,02,900 க்கும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது
ஐபோன் ஏர் மாடலின் பேஸிக் 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,19,900 க்கும், 512 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,39,900 க்கும் மற்றும் ஹைஎண்ட் 1டிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,59,900 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஐபோன் 17 ப்ரோ மாடலின் பேஸிக் 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,34,900 க்கும், 512 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,54,900 க்கும் மற்றும் ஹைஎண்ட் 1டிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,74,900 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மாடலின் பேஸிக் 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,49,900 க்கும், 512 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,69,900 க்கும், 1டிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,89,900 க்கும் மற்றும் ஹைஎண்ட் 2டிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.2,29,900 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஆப்பிள் வலைத்தளம் மூலம் ஐபோன் 17 சீரிஸை முன்கூட்டியே ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், ஆக்சிஸ் வங்கி மற்றும் ஐசிஐசிஐ பேங்க் கார்டுகளை பயன்படுத்தி வாங்கும் போது 6 மாதங்கள் வரை நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பமும், ரூ.5,000 வரை தள்ளுபடியும் கிடைக்கும்.
ஆப்பிள் இந்தியா வலைத்தளத்தில், ஐபோன் 17-க்கான இஎம்ஐ திட்டங்கள் மாதத்திற்கு ரூ. 12,983 இல் தொடங்குகின்றன, அதே நேரத்தில் ஐபோன் 17 ஏர் மாதத்திற்கு ரூ.19,150 இல் தொடங்குகிறது. ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்க்கான இஎம்ஐ விருப்பங்கள் முறையே ரூ.21,650 மற்றும் ரூ.24,150 இல் தொடங்குகின்றன. கூடுதலாக, ஆப்பிள் நிறுவனமானது தகுதியான டிவைஸ்களுக்கு ரூ. 64,000 வரை எக்ஸ்சேஞ்ச் சலுகையையும் வழங்குகிறது.
ஐபோன் 17 மாடல்களை முன்கூட்டியே ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்கள், ஆப்பிள் பிகேசி (மும்பை), ஆப்பிள் சாக்கெட் (டெல்லி), ஆப்பிள் ஹெப்பால் (பெங்களூரு) மற்றும் ஆப்பிள் கோரேகான் பார்க் (புனே) உட்பட இந்தியா முழுவதும் உள்ள ஆப்பிள் ரீடெயில் ஸ்டோர்களில் இருந்து தங்கள் டிவைஸ்களை பெறலாம். மேலும் ஆப்பிளின் புதிய ஐபோன் 17 சீரீஸ் மாடல்களை பிரபல இகாமர்ஸ் வலைத்தளங்கள் ஆன அமேசான் (Amazon), பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் விஜய் சேல்ஸ் (Vijay Sales) ஆகிய தளங்கள் மூலமாகவும் வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








