ரூ.6,999க்கு அறிமுகமாகியுள்ள இண்டெக்ஸ் ELYT e-1 மாடல் ஸ்மார்ட்போன்

Written By:
  X

  உள்ளூர் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான இண்டெக்ஸ் டெக்னாலஜி நிறுவனம் சமீபத்தில் ELYT சீரீஸ் வகை ஸ்மார்ட்போன்கலை வெளியிட்டு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் தற்போது ELYT e-1 என்ற புதிய மாடல் ஸ்மார்ட்போன் ஒன்றை பட்ஜெட் விலையில் தங்களது வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது.

  ரூ.6,999க்கு அறிமுகமாகியுள்ள இண்டெக்ஸ் ELYT e-1 மாடல் ஸ்மார்ட்போன்

  4G சப்போர்ட் மற்றும் VolLTE வசதியுடன் கூடிய இந்த ஸ்மார்ட்போன் ரூ.;6999 என்பது மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் இந்த புதிய மாடல் ஸ்மார்ட்போன் தற்போது அனைத்து ரீடெயில் கடைகளிலும் கிடைக்கின்றது

  இந்த புதிய ELYT e-1 மாடல் ஸ்மார்ட்போன் இன்ச் HD (720x1280 பிக்சல்) அமைப்புடன் ஐபிஎஸ் டிஸ்ப்ளேவை கொண்டது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 1.2 GHz ஸ்னாப்டிராகன் 410 குவாட்கோர் பிராஸசரை கொண்டது.

  அறிமுகம் : எச்டிசி ஒன் எக்ஸ்10 (விலை மற்றும் அம்சங்கள்).!

  2GB ரேம் மற்றும் அட்ரெனோ 306 GPU கொண்ட இந்த போனில் 16 GB இன்னர் ஸ்டோரேஜ் உள்ளது. தேவைப்பட்டால் 128 GB வரை எஸ்டி கார்ட் போட்டு பயன்படுத்தி கொள்ளலாம். இந்த ELYT e-1 மாடல் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 6.0 வகையை சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது

  இந்த புதிய ELYT e-1 மாடல் ஸ்மார்ட்போனின் கேமிரா பக்கம் சென்றால் இந்த போனின் கேமிரா 8 MP பின்பக்க கேமிராவுடன் LED பிளாஷை கொண்டது. டூயல் சிம் வசதியுடன் 2200 mAh பேட்டரி தன்மையுடன் உள்ள இந்த மொபைல் போன் 220 மணி நேரம் சார்ஜ் நிற்கும் என்றும், தொடர்ந்து 5.5 மணி நேரம் பேசும் வகையில் சார்ஜ் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.மேலும் இந்த போனில் 3.3mm ஆடியோ ஜேக், வைபை, ஜிபிஎஸ், எப்/எம் ரேடியோ மற்றும் யூஎஸ்பி 2.0 ஆகியவையும் உள்ளது.

  அதுமட்டுமின்றி இந்த ELYT e-1 மாடல் ஸ்மார்ட்போன் மாடலில் பிங்கர் பிரிண்ட் சென்சார், ஆம்பியண்ட் லைட், பிராக்சிமிட்டி சென்சார் ஆகியவையும் உள்ளது. இந்த போன் 142.4x71.5x8.7mm அளவிலும் 145 கிராம் எடையும் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

  Read more about:
  English summary
  Intex has flagged off its new ELYT series in the smartphone category. Intex ELYT-e1 is the first smartphone to be launched in the ELYT series that supports 4G VoLTE and is priced at Rs. 6,999. The smartphone features an 8-megapixel rear and selfie camera both with LED flash for better low-light photo and video recording.

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more