டூயல் முன் மற்றும் பின்பக்க கேமராக்களுடன் ஹானர் 9 லைட்.!
4 ஜிபி ரேம்மற்றும் 3ஜிபி ரேம் + 64 ஜிபி உள்ளடக்க சேமிப்பு என மொத்தம் இரண்டு வகைகளில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவருகிறது.
ஹூவாய் நிறுவனம், நாளை (டிசம்பர் 13 அன்று) ஒரு அறிமுக நிகழ்ச்சியை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. இந்த விழாவில் நிறுவனத்தின் ஹானர் 9 லைட் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

இதனை தொடர்ந்து கூறப்படும் ஹானர் 9 லைட் ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் விலை நிர்ணயம் ஆகிய விவரங்கள் சீன வலைத்தளமான மைடிரைவர்ஸ் மூலம் கசிந்துள்ளன.

ஹானர் 9 லைட் ஸ்மார்ட்போனின் அம்சங்களை பொறுத்தவரை 2160 x 1080 பிக்சல்கள் அளவிலான தீர்மானம் கொண்ட ஒரு 5.65 அங்குல முழு திரை டிஸ்ப்ளே மற்றும் 18: 9 ஏ என்கிற திரை விகிதம் கொண்டிருக்கலாமென கூறப்படுகிறது.

இரண்டு வகை
மேலும் இக்கருவி ஹீலியோ கிரின் 659 சிப்செட் மூலம் இயக்கப்படும். 32 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு உடனான 4 ஜிபி ரேம்மற்றும் 3ஜிபி ரேம் + 64 ஜிபி உள்ளடக்க சேமிப்பு என மொத்தம் இரண்டு வகைகளில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவருகிறது.

இரட்டை பின்புற கேமரா
கேமரா துறையை பொறுத்தமட்டில், 13 மெகாபிக்சல் மற்றும் 20 மெகாபிக்சல் சென்சார்கள் கொண்ட ஒரு இரட்டை பின்புற கேமரா அமைப்பை ஹானர் 9 லைட் கொண்டுவரலாமென மதிப்பிடப்பட்டுள்ளது. முன்பக்கத்தை பொறுத்தமட்டில், தீர்மானம் அறியப்படாத இரட்டை கேமராக்கள் இடம்பெற வேண்டும்.

பேட்டரி திறன்
ஒரு 3,000எம்ஏஎச் பேட்டரி திறன் மூலம் சக்தியூட்டப்படும் இக்கருவியின் விலை மதிப்பினைப் பொறுத்தவரை, இதன் 3 ஜிபி ரேம் மாறுபாடானது சுமார் 1,299 யுவான்களுக்கும் மற்றும் இதன் 4 ஜிபி மாறுபாடானது 1,599 யுவான்களுக்கும் விற்பனை செய்யப்படலாம்.

ஹூவாய் என்ஜாய் 7எஸ்
இதற்கிடையில், ஹூவாய் என்ஜாய் 7எஸ் ஸ்மார்ட்போனின் அம்சங்களை வெளிப்படுத்துமொரு லீக்ஸ் தகவலும் இன்று வெளியாகியுள்ளது. வருகிற டிசம்பர் 18-ஆம் தேதி ஹூவாய் என்ஜாய் 7எஸ்அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications