NOKIA பெயரை கெடுத்துறாத ராசா.. டீன்-ஏஜ் பசங்களை கண்ட்ரோல் செய்யும் அம்சங்களுடன் HMD Fusion X1 அறிமுகம்!
நோக்கியா (NOKIA) பிராண்டட் மொபைல் மற்றும் ஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் உரிமம் கொண்டுள்ள எச்எம்டி க்ளோபல் (HMD Global) நிறுவனமானது 2 புதிய ஸ்மார்ட்போன்கள் மற்றும் 4 புதிய ஃபீச்சர் போன்கள் என மொத்தம் 6 புதிய எச்எம்டி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. கூடவே எச்எம்டி ஆம்பெட் பட்ஸ் என்கிற TWS இயர்பட்ஸையும் அறிமுகம் செய்துள்ளது.
புதிய ஃபீச்சர் போன்களை பொறுத்தவரை எச்எம்டி பார்கா 3210 (HMD Barca 3210), எச்எம்டி 2660 பிளிப் (HMD 2660 Flip), எச்எம்டி 130 மியூசிக் (HMD 130 Music) மற்றும் எச்எம்டி 150 மியூசிக் (HMD 150 Music) ஆகிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

புதிய ஸ்மார்ட்போன்களை பொறுத்தவரை எச்எம்டி க்ளோபல் நிறுவனமானது டீன்-ஏஜ் வாடிக்கையாளர்களை குறிவைத்து எச்எம்டி பியூஷன் எக்ஸ்1 (HMD Fusion X1) என்ற மாடலை அறிமுகம் செய்துள்ளது. கூடவே எச்எம்டி பார்கா ஃப்யூஷன் ( HMD Barca Fusion) மாடலையும் வெளியிட்டு உள்ளது. இக்கட்டுரையில் எச்எம்டி பியூஷன் எக்ஸ்1 மற்றும் எச்எம்டி பார்கா ஃப்யூஷன் ஸ்மார்ட்போன்களை பற்றி விரிவாக காண்போம்.
எச்எம்டி ஃப்யூஷன் எக்ஸ்1 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் (HMD Fusion X1 Features): சிப்செட்டை பொறுத்தவரை இது ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட்டை (Snapdragon 4 Gen 2 chipset) பேக் செய்கிறது. இது 8ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை ஸ்டோரேஜ் உடன் வருகிறது. டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.56 இன்ச் எச்டி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
கேமராக்களை பொறுத்தவரை இது 108 மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவை (108MP Primary Camera) கொண்டுள்ளது . இதனுடன் குறிப்பிடப்படாத 2 மெகாபிக்சல் சென்சாரும் உள்ளது. முன்பக்கத்தில் 50 மெகாபிக்சல் செல்பீ கேமரா (50MP Selfie Camera) உள்ளது. பேட்டரியை பொறுத்தவரை இது 33W பாஸ்ட் சார்ஜ் ஆதரவு உடனான 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது.
எச்எம்டி க்ளோபல் நிறுவனத்தின் கூற்றுப்படி, எச்எம்டி ஃப்யூஷன் எக்ஸ்1 ஸ்மார்ட்போன் ஆனது இளம் தலைமுறை மக்களுக்கு உதவும் நோக்கம் கொண்ட நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் (First smartphone designed to help younger users) ஆகும். இது இளம் வயதினர் உட்பட இளம் பயனர்கள் இண்டர்நெட்டை பாதுகாப்பாக ஆராய உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன்கீழ் பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளின் லோக்கேஷன் சேஃப்டி அம்சங்களை (Location Safety Features) அணுகலாம், காண்டாக்ட்களை அங்கீகரிக்கலாம், குறிப்பிட்ட ஆப்களுக்கான அணுகலை தடுக்கலாம் (அல்லது அதற்கான அட்டவணையை செட் செய்யலாம்) மற்றும் தங்கள் குழந்தையின் ரியல்டைம் லோக்கேஷனை பார்க்கலாம். இந்த அம்சங்கள் எச்எம்டி-யின் எக்ஸ்ப்ளோரா பெற்றோர் கட்டுப்பாடுகள் சேவையின் ( HMD's Xplora parental controls service) ஒரு பகுதியாக கிடைக்கும்
எச்எம்டி பார்கா ஃப்யூஷன் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் (HMD Barca Fusion Features): இதுவும் 108 மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவை கொண்டுள்ளது. இதுதவிர்த்து இந்த மாடலின் மற்ற அம்சங்களை எச்எம்டி நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. இருப்பினும் இது எச்எம்டி ஃப்யூஷன் எக்ஸ்1 இன் ரீ பிராண்டட், தீம்டு வெர்ஷன் ஆக தெரிகிறது. இவ்விரு ஸ்மார்ட்போன்களின் விலைகளும் அறிவிக்கப்படவில்லை.
எச்எம்டி ஆம்ப்ட் பட்ஸ் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: இது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.18,100 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எச்எம்டி-யின் இந்த வயர்லெஸ் ஹெட்செட் ஆனது 2025 ஏப்ரல் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பிளாக், சியான் மற்றும் பிங்க் (Black, Cyan and Pink) கலர்களில் வாங்க கிடைக்கும். எச்எம்டி ஆம்ப்ட் பட்ஸ் ஹெட்செட் ஆனது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுமா என்பது (India Launch) குறித்து எச்எம்டியிடம் இருந்து எந்த விதமான தகவலும் இல்லை.


Click it and Unblock the Notifications