மீண்டும் NOKIA ராஜ்ஜியம்.. 1600mAh பேட்டரி, IP54, Qi2 சார்ஜிங் உடன் புதிய HMD பட்ஸ் அறிமுகம்.. என்ன விலை?
நோக்கியா (NOKIA) பிராண்டட் மொபைல் போன் மற்றும் ஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் உரிமத்தை கொண்டு உள்ள எச்எம்டி க்ளோபல் (HMD Global) நிறுவனமானது எச்எம்டி ஆம்ப்ட் பட்ஸ் (HMD Amped Buds) என்கிற டிடபுள்யூஎஸ் ஹெட்செட்டை (TWS headset) அறிமுகம் செய்து உள்ளது.
எம்எம்டி நிறுவனத்தின் இந்த லேட்டஸ்ட் ட்ரூலி வயர்லெஸ் ஸ்டீரியோ ஹெட்செட் (Truly Wireless Stereo Headset) ஆனது 1600mAh பேட்டரி உடன் வருகிறது மற்றும் இது சார்ஜிங் கேஸ் உடன் சேர்த்து 95 மணிநேர பிளேபேக்கை (95 Hours Playback) வழங்குவதாக கூறப்படுகிறது. சுவாரசியமாக எச்எம்டி ஆம்ப்ட் பட்ஸ்-ன் சார்ஜிங் கேஸை இணக்கமான ஸ்மார்ட்போனின் ரியர் பேனலில் வைப்பதன் மூலம் பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போனின் பேட்டரியையும் சார்ஜ் செய்யலாம்.

எச்எம்டி ஆம்ப்ட் பட்ஸ் ஹெட்செட்டின் அம்சங்கள்: பெரும்பாலான டிடபுள்யூஎஸ் ஹெட்செட்களை போலவே, எச்எம்டி ஆம்ப்ட் பட்ஸ் ஆனதும் சிலிகான் இயர் டிப்ஸ் (silicone ear tips) மற்றும் ஒரு ஸ்டெம் கொண்ட இன்-இயர் டிசைனை (in-ear design) கொண்டுள்ளது. ஒவ்வொரு இயர்போனிலும் 10 மிமீ ட்ரைவர் மற்றும் 3 மைக்ரோஃபோன்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இவைகள் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (Active noise cancellation - ANC) மற்றும் என்விராய்ன்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன் (Environmental noise cancellation - ENC) அம்சங்களுக்கான ஆதரவை செயல்படுத்துகின்றன. மேலும் எச்எம்டி ஆம்ப்டு பட்களை ஒரே நேரத்தில் 2 டிவைஸ்ளுடன் இணைக்க முடியும். கூடவே இது கூகுள் பாஸ்ட் பேர் (Google Fast Pair) ஆதரவையும் வழங்குகிறது.
இந்த இயர்போன்கள் தூசி மற்றும் ஸ்பிளாஸ் (dust and splash) எதிர்ப்பிற்காக ஐபி54 ரேட்டிங்கை (IP54 Rating) கொண்டுள்ளன, அதே நேரத்தில் இதன் சார்ஜிங் கேஸ் ஆனது ஐபிஎக்ஸ்4 ரேட்டிங்கை (IPX4 Rating) கொண்டுள்ளன. எச்எம்டி-யின் இந்த வயர்லெஸ் ஹெட்செட் ஒரு மெலிதான கேஸை (Slim Case) கொண்டுள்ளது. இது 1600mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
இது யூஎஸ்பி டைப்-சி போர்ட் (USB Type C Port) வழியாக சார்ஜ் செய்யும் ஆதரவையும் கொண்டுள்ளது. ஏஎன்சி ஆஃப் (ANC OFF) செய்யப்பட்டால், எச்எம்டி ஆம்ப்ட் பட்ஸ் ஆனது 8 மணிநேர பேட்டரி லைஃப்-ஐ வழங்கும் என்று எச்எம்டி கூறுகிறது. மேலும் ஏஎன்சி இயக்கப்படும்போது (ANC ON) 4 மணிநேரமாக குறையும்.
எச்எம்டி ஆம்ப்டு பட்ஸ்-ன் சார்ஜிங் கேஸ் ஆனது.. க்யூஐ2 வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவை (Qi2 Wireless Charging Support) வழங்கும் - எச்எம்டி ஸ்கைலைன் (HMD Skyline) அல்லது சமீபத்திய ஐபோன் (Latest iPhones) மாடல்கள் போன்ற இணக்கமான ஸ்மார்ட்போனுடன் இணங்ககூடிய சிறிய பவர் பேங்காகவும் (Small Power Bank) செயல்படும்.
எச்எம்டி ஸ்கைலைன் ஸ்மார்ட்போனின் பேட்டரியை இது 13.8 சதவிகிதம் (வயர்லெஸ்) மற்றும் 20.7 சதவிகிதம் (வயர்டு) அதிகரிக்கும். இதேபோல ஆப்பிள் ஐபோன் 16 ப்ரோ மாடலின் பேட்டரியை 20 சதவிகிதம் (வயர்லெஸ்) மற்றும் 24 சதவிகிதம் (வயர்டு) வரை அதிகரிக்கும் என்று எச்எம்டி கூறுகிறது.
எச்எம்டி ஆம்ப்ட் பட்ஸ் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: இது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.18,100 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எச்எம்டி-யின் இந்த வயர்லெஸ் ஹெட்செட் ஆனது 2025 ஏப்ரல் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பிளாக், சியான் மற்றும் பிங்க் (Black, Cyan and Pink) கலர்களில் வாங்க கிடைக்கும். எச்எம்டி ஆம்ப்ட் பட்ஸ் ஹெட்செட் ஆனது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுமா என்பது (India Launch) குறித்து எச்எம்டியிடம் இருந்து எந்த விதமான தகவலும் இல்லை.


Click it and Unblock the Notifications