அறிமுகம்: மிரட்டும் அம்சங்களுடன் 2018-ஆம் ஆண்டை ஆளப்போகும் 5 நோக்கியா கருவிகள்.!

|

ஒருவழியாக நோக்கியா பிரியர்களின் மற்றும் நோக்கியா வாசிகளின் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது.

அறிமுகம்: 2018-ஆம் ஆண்டை ஆளப்போகும் 5 நோக்கியா கருவிகள்.!

ஆம், நோக்கியா பிராண்ட் கருவிகளை தயாரிக்கும் எச்எம்டி க்ளோபல் நிறுவனமானது, அதன் 2018-ஆம் ஆண்டின் நோக்கியா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

அறிமுகம்: 2018-ஆம் ஆண்டை ஆளப்போகும் 5 நோக்கியா கருவிகள்.!

கடந்த 2017-ஆம் ஆண்டில் மொத்தம் 11 மொபைல் போன்களை அறிமுகப்படுத்திய எச்எம்டி க்ளோபல் நிறுவனம், இந்த ஆண்டுற்கான இரண்டாவது இன்னிங்ஸை அற்புதமாகவே ஆரம்பித்துள்ளதென்றே கூறலாம்.

அறிமுகம்: 2018-ஆம் ஆண்டை ஆளப்போகும் 5 நோக்கியா கருவிகள்.!

அப்படியாக, மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2018 நிகழ்வில் அறிமுகமான நோக்கியா 1, நோக்கியா 6 (2018), நோக்கியா 7 பிளஸ் மற்றும் நோக்கியா 8 சிரோக்கோ ஆகியவற்றின் அம்சங்கள் மற்றும் விலை நிர்ணயம் என்னென்ன என்பதை விரிவாக காணலாம்.

நோக்கியா 1

நோக்கியா 1

மிக நீண்ட காலமாக வதந்திக்கப்பட்ட நோக்கியா 1 ஆனது எதிர்பார்க்கப்பட்டபடியே நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போனாக வெளியாகியுள்ளது. அதாவது ஆண்ட்ராய்டு ஓரியோ (கோ பதிப்பு) கொண்டுள்ளது.

4.5 இன்ச் டபுள்யூவிஜிஏ டிஸ்ப்ளே

4.5 இன்ச் டபுள்யூவிஜிஏ டிஸ்ப்ளே

நோக்கியா 1 ஸ்மார்ட்போனின் உலகளாவிய விலை நிர்ணயத்தை பொறுத்தமட்டில் சுமார் ரூ.5,500/-இருக்கலாம் மற்றும் அதற்கேற்ற நுழைவு-நிலை வன்பொருள் அம்சங்களைக் கொண்டுள்ளது. நோக்கியா 1 ஆனது ஒரு 4.5 இன்ச் டபுள்யூவிஜிஏ டிஸ்ப்ளே மற்றும் அகற்றக்கூடிய பின்பக்க பேனல் கொண்டுள்ளது.

நோக்கியா 6 (2018) பதிப்பு

நோக்கியா 6 (2018) பதிப்பு

எல்லோரும் எதிர்பார்த்தபடி, நோக்கியா 6 (2018) க்ளோபல் பதிப்பானது - சீனாவில் தொடங்கப்பட்ட மாதிரியே - ஒரு திட இடைநிலை வன்பொருள் அம்சங்களை வழங்குகிறது. இது 5.5 அங்குல முழு எச்டி டிஸ்ப்ளே மற்றும் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 630 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

பல்வேறு ரேம், சேமிப்பு

பல்வேறு ரேம், சேமிப்பு

பெட்டிக்கு வெளியே ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ கொண்டுள்ள இக்கருவி ஒரு 3000எம்ஏஎச்பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகிறது. இது ஒரு 16எம்பி பின்பக்க கேமரா உடன் பல்வேறு ரேம், சேமிப்பு விருப்பங்கள் வருகிறது.

ரூ. 22,200/-க்கு வாங்க கிடைக்கும்

ரூ. 22,200/-க்கு வாங்க கிடைக்கும்

இந்த நோக்கியா கருவியில் ஃபேஸ் அன்லாக் அம்சம் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் நிலையான சார்ஜிங் திறனுடன் சேர்த்து வயர்லெஸ் சார்ஜ் அம்சமும் கொண்டுள்ளது. இந்த புதிய நோக்கியா 6 (2018) ஆனது மூன்று வண்ணங்களில் வருகிற ஏப்ரல் 2018முதல் ரூ. 22,200/-க்கு வாங்க கிடைக்கும்.

நோக்கியா 7 பிளஸ்

நோக்கியா 7 பிளஸ்

நோக்கியா 7 பிளஸ் ஆனது நிறுவனத்தின் முதல் 18: 9 டிஸ்ப்ளே கொண்ட ஸ்மார்ட்போன் ஆகும். இது 6 அங்குல முழு எச்டி டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது நோக்கியா 6 (2018) கருவியை போன்ற வடிவமைப்பை கொண்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 660 சிப்செட்

ஸ்னாப்டிராகன் 660 சிப்செட்

இந்த புத்தம் புதிய நோக்கியா 7 பிளஸ் ஆனது, சந்தையில் கிடைக்கக்கூடிய மிகச் சிறந்த சாதனங்களில் ஒன்றாக திகழும் என்பதில் சந்தேகமே வேண்டாம். அதை உறுதி செய்யும் வண்ணம், இக்கருவி ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் உடனாக அட்ரெனோ 612 ஜிபீயூ மூலம் இயக்கப்படுகிறது.

இரட்டை கேமரா

இரட்டை கேமரா

இது ஒரு 3800எம்ஏஎச் பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகிறது. நிறுவனத்தின் கூற்றின்படி, நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போனின் பேட்டரி ஆயுளானது இரண்டு நாட்கள் நீடிக்கும் மற்றும் இக்கருவி மீண்டும் ஒரு இரட்டை கேமரா அமைப்பை, கைரேகை ஸ்கேனர் உடன் அதன் பின்புறத்தில் கொண்டிருக்கும்.

How to check PF Balance in online (TAMIL)
ப்ரோ கேமரா

ப்ரோ கேமரா

இக்கருவியின் வழியாக எச்எம்டி குளோபல் நிறுவனமானது, அதன் வழக்கமான செய்ஸ் (Zeiss) ஒளியியலுடன் ஆன ஒரு ப்ரோ கேமராவை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் இந்த புதிய நோக்கியா கருவியானது இமேஜிங் சூட் அம்சத்துடன் வருகிறது, இது செல்பீக்களில் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு திறனை சேர்க்கும்

சுமார் ரூ.31,000/- என்கிற புள்ளி

சுமார் ரூ.31,000/- என்கிற புள்ளி

நோக்கியா 7 பிளஸ் ஆனது வருகிரியா ஏப்ரல் மாதம் முதல், ஒரு உலகளாவிய விற்பனையை தொடங்கும். விலை நிர்ணயத்தை பொறுத்தமட்டில் சுமார் ரூ.31,000/- என்கிற புள்ளியை எட்டலாம்.

நோக்கியா 8 சிரோக்கோ

நோக்கியா 8 சிரோக்கோ

இது ஒரு ஆச்சரியமான வெளியீடாகும். நோக்கியா 8 Sசிராக்கோ ஆனது நிறுவனத்தின் மற்றொரு முதன்மை ஸ்மார்ட்போன் ஆகும். இது வைர வெட்டுகளுடன் ஒரு எஃகு உடல் அமைப்பை கொண்டு வருகிறது. ஐபி68 நீர் மற்றும் தூசி சான்றிதழ், வயர்லெஸ் சார்ஜ் ஆதரவுடன் வரும் இந்த நோக்கியா 8 சிரோக்கோ ஆனதும் மற்ற கருவிகளை போலவே வருகிரியா ஏப்ரல் 2018 முதல் விற்பனையை தொடங்கும்.

டெலிஃபோட்டோ

டெலிஃபோட்டோ

நோக்கியா 8 சிராக்கோவின் இதர அம்சங்களை பொறுத்தமட்டில், இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும். இதன் இரண்டாம் நிலை சென்சார் ஆனது ஒரு டெலிஃபோட்டோ லென்ஸாக பணியாற்றும்.

ஸ்னாப்டிராகன் 835 எஸ்ஓசி

ஸ்னாப்டிராகன் 835 எஸ்ஓசி

6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள் சேமிப்பு கொண்டிருந்தாலும் கூட இது ஸ்னாப்டிராகன் 835 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, நோக்கியா 8 சிரோக்கோவின் உலகளாவிய பதிப்பானது சுமார் ரூ.60,000/- என்கிற புள்ளியை எட்டலாம்.

நோக்கியா 8110 4ஜி பீச்சர்

நோக்கியா 8110 4ஜி பீச்சர்

இந்த நான்கு கருவிகள் தவிர்த்து நோக்கியா 8110 4ஜி பீச்சர் போனும் அறிமுகமாகியுள்ளது. அதை பற்றிய விரிவாக தகவல்களுக்கு இந்த இங்கே சொடுக்கவும். மேலும் பல நோக்கியா ஸ்மார்ட்போன்கள் பற்றிய புத்தம்புதிய அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் உடன் இணைந்திருக்கவும்.

Best Mobiles in India

English summary
HMD Global Unveils Nokia 1, Nokia 7 Plus and Nokia 8 Sirocco Smartphones With Android Oreo. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X