Just In
- 2 hrs ago
பார்வை இழந்தவர்களுக்கான புது சூப்பர் Smartwatch.! இந்தியாவில் உருவான அசத்தல் கண்டுபிடிப்பு.!
- 7 hrs ago
போட்டோ எடுத்தா? 1-இன்ச் சோனி கேமராவுடன் அறிமுகமான Vivo X90 Pro! விலை தெரியுமா?
- 7 hrs ago
இப்படியொரு டேப்லெட் மாடலுக்காக தான் வெயிட்டிங்: நல்ல செய்தி சொன்ன ஒன்பிளஸ்.!
- 8 hrs ago
அப்போ ஒன்னு சொல்றிங்க, இப்போ ஒன்னு சொல்றிங்க! காதல்னா என்ன சார்? வசமா சிக்கிய Netflix!
Don't Miss
- Movies
AK 62 முதல் அப்டேட்: அஜித் - மகிழ் திருமேனி கூட்டணியில் இணைந்த சர்தார் பட பிரபலம்..?
- News
இபிஎஸ் பொறுப்பு என்ன? பதவியில் இல்லாமல் வேட்பாளரை எப்படி முன்மொழியலாம்.. ஓபிஎஸ் தரப்பு கேள்வி!
- Finance
PF கணக்கு வைத்துள்ளீர்களா..? பட்ஜெட்டில் முக்கியமான அறிவிப்பு.. வரி சலுகை..!
- Lifestyle
இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கை முழுவதும் பழிவாங்க துடிப்பார்களாம்... இவங்கள எப்பவும் நம்பாதீங்க...!
- Travel
இனி திருப்பதியில் உண்டியல் பணம் கணக்கிடும் போது கண்ணாடி சுவர்கள் வழியே நீங்களும் பார்க்கலாம்!
- Sports
பார்டர் கவாஸ்கர் கோப்பை - அதிக போட்டிகளில் வென்றது யார்? அதிக ரன்கள் அடித்தது யார்.. முழு விவரம்
- Automobiles
ஹீரோ ஸுமால இத்தன மாடலுக்கு பாதிப்பா! டிவிஎஸ் ஜுபிடர், ஹோண்டா ஆக்டிவா, டியோனு எல்லாத்துக்குமே ஆப்புதான்...
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
சூப்பர் பட்ஜெட் விலையில் நோக்கியா 8110 4ஜி போன் அறிமுகம்; நியாமான அம்சங்கள்.!
நோக்கியா 8110 4ஜி என்பது 1996-ஆம் ஆண்டில் வெளியான நோக்கியா நிறுவனத்தின் பிரபல பனானா (வாழைப்பழம்) மொபைலின் சமீபத்திய பதிப்பாகும். பார்சிலோனாவில் நிகழ்ந்த மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2108 நிகழ்வில் அறிமிகுமாயுள்ள இக்கருவியானது அதே பழைய பெயரை மட்டுமின்றி அதே வடிவமைப்பையும் தக்கவைத்துள்ளது.
நோக்கியா பிராண்ட் கருவிகளை தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள எச்எம்டி க்ளோபல் நிறுவனத்திடம் இருந்து, நோக்கியா ஒரிஜினல்ஸ் பதிப்பின் கீழ் வெளியாகும் இரண்டாம் கருவி இதுவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. சரி வாருங்கள் பழைய நோக்கியாவின் பொன்னான காலத்திற்குள் நுழையும் அதே தருணம் புதிய நோக்கியா 8110 4ஜி கருவியின் வெளியீட்டு தேதி, விலை, வடிவமைப்பு, டிஸ்பிளே, பேட்டரி, பவர், ஓஎஸ், கேமரா பற்றிய விரிவான தகவல்களை காண்போம்.

நோக்கியா 8110 4ஜி வடிவமைப்பு
நோக்கியா 8110 4ஜி ஆனது அதன் அசல் கருவியின் தனித்துவமான வளைவு மற்றும் ஸ்லைடரை கொண்டுள்ளது. மற்றும் இன்னும் சிறிய வடிவமைப்பை பெற்று கைகளுக்குள் இன்னும் எளிமையாக பொருந்துகிறது.

பொத்தான்
இது ஒரு தெளிவான பிளாஸ்டிக் உடல் கொண்டு அதில் மைக்ரோயூஎஸ்பி, ஹெட்ஜாக், பவர் மற்றும் பொத்தான்களை கொண்டுள்ளது. விசைப்பலகையை பொறுத்தமட்டில் ஸ்லைடரின் கீழ் மறைந்துள்ளது. அது வழக்கமான நேவிகேஷன் மற்றும் எண் விசைகளை கொண்டுள்ளது. இக்கருவி மொத்தம் இரண்டு நிறங்கள் - பாரம்பரிய கருப்பு மற்றும் வாழை மஞ்சள் - கிடைக்கிறது.

நோக்கியா 8110 4ஜி டிஸ்பிளே
அறிவிக்கப்பட்டுள்ள நோக்கியா 8110 4ஜி ஆனது ஒரு க்யூவிஜிஏ (QVGA) தீர்மானம் கொண்ட 2.4 அங்குல வளைந்த டிஸ்பிளே கொண்டுள்ளது. இது ஒரு தொடுதிரை அல்ல, எனவே போனைப் பயன்படுத்துவதற்கு கீழே உள்ள நேவிகேஷன் பொத்தான்களை தான் பயன்படுத்த வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நோக்கியா 8110 4ஜி பேட்டரி
புதிய நோக்கியா 8110 4ஜி ஆனது அதன் உள்ளே ஒரு 1500எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது. நிறுவன்தான் கூற்றுபப்டி, இதன் முழுமையான சார்ஜ் ஆனது 25 நாட்கள் வரை காத்திருப்பு நேரத்தை வழங்கும். மற்றும் இது 8.5 மணி நேர எல்டிஇ குரல் அழைப்பு நேரம் வழங்கும் என்பதும் ஒரு மிகப்பெரிய சிறப்பம்சமாகும்.

நோக்கியா 8110 4ஜி பவர்
இக்கருவியானது க்வால்காம் 205 சிப்செட் (இரட்டை கோர் 1.1ஜிகாஹெர்ட்ஸ்) மற்றும் 512எம்பி ஆகியவற்றின் கீழ் இயங்குகிறது. இது இன்றைய ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பிடும்போது சக்தி வாய்ந்தது இல்லை தான். ஆனால் ஒரு பீச்சர் தொலைபேசிக்கு மிகவும் போதுமானதாக இருக்க வேண்டும்.

நோக்கியா 8110 4ஜி இயக்க முறைமை
நோக்கியா 8110 4ஜி சாதனத்தின் இயக்க்கமுறைமையை ஸ்மார்ட் பீச்சர் ஓஎஸ் என்று அழைக்கலாம். இது உங்களின் திரை அனுபவத்தை எளிதாகும். உடன் பேஸ்புக், ட்விட்டர், கூகுள் மேப்ஸ் மற்றும் கூகுள் அசிஸ்டண்ட் அப்ளிகேஷன்ஸ் ஆகியவவைகளுடன் புகழ்பெற்ற ஸ்நேக் கேமின் ரீபூட்டட் பதிப்பையும் நீங்கள் பெறுவீர்கள்.

4ஜிபி சேமிப்பு
வரவிருக்கும் மாதங்களில் இந்த கைபேசிக்கு, இன்னும் அதிகமான பயன்பாடுகள் கிடைக்கும் என்று நம்பலாம். அதற்கு இதன் 4ஜி இணைப்பு உதவும். மேலும் நோக்கியா 8110 4ஜி உடன் வைஃபை ஹாட்ஸ்பாட் வசதியும் கிடைக்கும். புகைப்படங்கள், இசை மற்றும் பயன்பாடுகள் மற்றும் எஃப்எம் ரேடியோ ஆகியவற்றை சேமிக்க ஹேண்ட்செட்டில் 4ஜிபி சேமிப்பு உள்ளது.

நோக்கியா 8110 4ஜி கேமரா
நோக்கியா 8110 4ஜி ஆனது அதன் பின்புறத்தில் ஒற்றை எல்இடி ஃப்ளாஷ் கொண்ட ஒரு 2எம்பி கேமராவைக் கொண்டுள்ளது. இது மிகவும் அதிகமான எம்பி கொண்ட கேமராவாக இல்லை என்பது வெளிப்படை. மேலும் பல நோக்கியா கருவிகள் பற்றிய அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் வலைத்தளத்துடன் இணைந்திருக்கவும்.


கிடைக்கும் தன்மை விலை
நோக்கியா 8110 வெளியீட்டு தேதியானது வருகிற மே 2018-ல் அமைக்கப்படும். இது ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் சீனாவில் ஒற்றை மற்றும் இரட்டை சிம் வகைகளில் கிடைக்மென்று நம்புகிறோம். மற்ற நாடுகளில் கிடைக்கும் தன்மை பற்றிய வார்த்தைகள் இல்லை. நோக்கியா 8110 4ஜி ஆனது சுமார் 79 யூரோவாக இருக்கலாம். அதாவது இந்திய மதிப்பின் படி ரூ.6290/- ஆக இருக்கலாம்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470