Home
Mobile

நீ கலக்கு ராஜா.. பழைய NOKIA Lumia 830 டிசைனில் புது HMD Asha 505.. 5-inch டிஸ்பிளே, 3000mAh பேட்டரி, IP52!

நோக்கியா பிராண்டட் மொபைல் போன்களை தயாரிக்கும் உரிமம் கொண்டுள்ள எச்எம்டி க்ளோபல் (HMD Global) நிறுவனம் தனது பிரபலமான ஆஷா (Asha) பிராண்டின் கீழ் எச்எம்டி ஆஷா 505 (HMD Asha 505) என்ற புதிய மொபைலை அறிமுகப்படுத்த தயாராகி வருவதாக தெரிகிறது. இதன் வெளியீட்டு தேதி, விலை மற்றும் அம்சங்கள் குறித்த விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், டிப்ஸ்டர் @smashx_60 வழியாக, இந்த மாடலின் புகைப்படங்கள் மற்றும் சிறப்பம்சங்கள் லீக் ஆகியுள்ளன.

அதில் எச்எம்டி ஆஷா 505 மாடல் ஆனது சியான் (cyan), நீலம் (blue) மற்றும் இளஞ்சிவப்பு (pink) ஆகிய 3 கலர்களில் உள்ளது. இதன் ஒட்டுமொத்த தோற்றம், குறிப்பாக மேல் பகுதியில் மையமாக அமைந்துள்ள செவ்வக வடிவ ரியர் கேமரா செட்டப் ஆனது பழைய நோக்கியா லூமியா 830 (Nokia Lumia 830) மாடலின் வடிவமைப்பை ஒத்திருக்கிறது.

புது HMD Asha 505.. 5-inch டிஸ்பிளே, 3000mAh பேட்டரி, IP52!

எச்எம்டி ஆஷா 505 மாடலின் ஸ்க்ரீனுக்கு மேலேயும் கீழேயும் தடிமனான விளிம்புகள் (bezels) உள்ளன. மேல் விளிம்பில் மையமாக இயர்பீஸ் (earpiece) அமைந்துள்ளது, அதன் இடதுபுறத்தில் செல்பீ கேமரா உள்ளது. ரியர் பேனலில் எச்எம்டி லோகோ மையமாக இடம்பெற்றுள்ளது. இந்த போன் வட்டமான மூலைகளுடன் கூடிய பளபளப்பான பேனலை கொண்டிருப்பதாகவும் தெரிகிறது.

முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, எச்எம்டி ஆஷா 505 மாடல் ஆனது 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (refresh rate) உடன் கூடிய 5-இன்ச் எச்டி டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 8 மெகாபிக்சல் ரியர் கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் செல்பீ கேமரா ஆகியவை இடம்பெறலாம். இது டூயல் சிம் (dual SIM) வசதி, 4GB ரேம் மற்றும் 64GB ஆன்போர்ட் ஸ்டோரேஜ் (onboard storage) ஆகியவற்றை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

பேட்டரியை பொறுத்தவரை எச்எம்டி ஆஷா 505 மாடல் ஆனது 3,000mAh பேட்டரியை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இது ஆண்ட்ராய்டு 14 கோ எடிஷன் (Android 14 Go Edition) உடன் வரலாம் மற்றும் ஆக்டா-கோர் யுனிசாக் (Unisoc) சிப்செட்டில் இயங்கலாம். இதில் யுஎஸ்பி டைப் -சி போர்ட், ப்ளூடூத் 5.0, வைஃபை, ஹாட்ஸ்பாட், ஜிபிஎஸ், 3.5மிமீ ஆடியோ ஜாக் மற்றும் எப்எம் ரேடியோ ஆகிய வசதிகள் இருக்கவும் வாய்ப்புள்ளது.

மேலும், இது IP52 ரேட்டிங் கொண்ட கட்டமைப்பை கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. முன்னரே குறிப்பிட்டப்படி இதன் விலை மற்றும் வெளியீடு குறித்த விவரங்கள் இன்னும் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், சமீபத்திய லீக்ஸ், இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என்பதை குறிக்கின்றன. இது ஒரு 'என்ட்ரி-லெவல்' ஸ்மார்ட்போனாக வெளியிடப்பட வாய்ப்புள்ளது.

சமீபத்தில் தான் நோக்கியா 235 4ஜி 2026 (Nokia 235 4G 2026), நோக்கியா 215 4ஜி 2026 (Nokia 215 4G 2026), நோக்கியா 210 4ஜி (Nokia 210 4G) மற்றும் நோக்கியா 200 4ஜி (Nokia 200 4G) ஆகிய 5 புதிய ஃபீச்சர் போன்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட உலகளாவிய சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட்டன.

இந்த புதிய நோக்கியா போன்கள் அனைத்தும் 4ஜி இணைப்பு வசதியை கொண்டிருப்பதோடு, எஸ்30+ இயங்குதளத்தில் (operating system) இயங்குகின்றன. அனைத்து மாடல்களிலும் 1450mAh பேட்டரி மற்றும் 32ஜிபி வரையிலான விரிவாக்கக்கூடிய ஸ்டோரேஜ் (expandable storage) வசதி ஆகிய முக்கிய அம்சங்கள் உள்ளன.

இவைகளில் வயர்டு (wired) மற்றும் வயர்லெஸ் (wireless) முறைகளில் செயல்படும் எப்எம் (FM) ரேடியோ வசதியும் உள்ளது. மேலும் வாய்ஸ் கமாண்ட்கள் மூலம் பல்வேறு அம்சங்களை அணுகுவதற்கான ஏஐ அசிஸ்டென்ட் பட்டனும் (AI assistant button) இந்த புதிய நோக்கியா போன்களில் இடம்பெற்றுள்ளது.

முக்கிய வேறுபாடுகளை பொறுத்தவரை, நோக்கியா 210 4ஜி மற்றும் நோக்கியா 200 4ஜி ஆகிய 2 மாடல்களுமே 2.4-இன்ச் QVGA டிஸ்பிளேவை கொண்டுள்ளன. அதேவேளையில், நோக்கியா 235 4ஜி (2026) மற்றும் நோக்கியா 215 4ஜி (2026) ஆகிய 2 மாடல்களும் 2.8-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளன. இந்த 4 போன்களின் விலை மற்றும் விற்பனை விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை; இருப்பினும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. Photo Courtesy: @smashx_60 | X page

Best Mobiles in India

English summary
HMD Asha 505 with 5 inch Display 3000mAh Battery IP52 Launching soon Looks Like NOKIA Lumia 830 Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X